Select Your Favorite Topic! Enjoy Reading!!

Thursday, April 7, 2016

21 வயதில் 360 கோடி ரூபாய் கம்பெனி - இந்தியரின் மாயாஜாலம்

ரித்தீஷ் அகர்வால்

ரித்திஷ் அகர்வால் என்ற இளைஞர், ஒரிசா மாநிலத்தின் மண்ணின் மைந்தர்.

ரித்திஷ் அகர்வாலுக்கு இன்று (2015) சரியாக 21 வயது. தனது 21 வயதிலேயே உலகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறாh.;

ரித்திஷ் அகர்வால். இன்று உலகம் முழுவதும் உலாவரும் வரும்  பெயராகிவிட்டது ரித்திஷ்;.

உலகிலேயே இளம் வயதில் ஒரு நிறுவனத்திற்கு தலைமை செயல் நிர்வாகி ஆனவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆகிறார்.

விட்டலாச்சாரியாவின் மாயாஜாலப் படங்களைப் போல ரித்திஷ்’ன் சாதனைகள் திகிலூட்டக் கூடியவைகளாக உள்ளன.

பால்மணம் மாறாத, தனது எட்டாவது வயதிலேயே வெற்றிகரமாக சாப்டவேர் எழுதி அனைவரையும் மிரட்டினார்.

தனது 14 வயதில் சுய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அநேகருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்;.

17 வது வயதில் தொழில் தொடங்கினார். அவர் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் 'ஓயோ ரூம்ஸ்" ;அடுத்த நான்கே ஆண்டுகளில், ' ஓயா ரூம்ஸ் ன் சந்தை மதிப்பை, ஒரு கோடி அல்ல, இரண்டுகோடி அல்ல, 360 கோடியாக உயர்த்தி இமாலய சாதனையை எட்டிப் பிடித்தார்.

பத்து நகரங்களில் 200 ஹோட்டல்களில் தனது தொழிலைத் தொடங்கிய 'ஓயோ ரூம்ஸ்" 2015 ன் முடிவில் 25 நகரங்களில் 10000 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் கொண்ட நெட்ஒர்க்காக வளரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சர்வதேச அளவில் மாணவராக இருக்கும்போதே தொழில் முனைந்ததற்கான விருது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமா ? உலகத்தின் மிகக் குறைந்த வயது தலைமைச் செயல் அலுவலருக்கான விருதும் அவரைத் தேடி வந்துள்ளது.

அவர் தொழில் தொடங்குவதற்கான முதலீட்டைக் கொடுத்தது நாங்கள்தான் என்று பெருமையாகக் குறிப்பிடுகிறார்கள், வென்ச்சர் என்னும் நிறுவனத்தின் சொந்தக்காரர்கள்.

ரித்திஷின் 16 வது வயதில் அவருக்கு பயற்சி தந்த பெருமையை தட்டிச் செல்வது டாட்டா ஆராய்ச்சி நிறுவனம்.

ரித்திஷின் அத்தனை சாதனைகளுக்கும் பின்புலத்தில்; வெளிச்சம் படாமல் இருக்கும் அவருடைய  பெற்றோர்களைப் பாராட்ட வேண்டும்.

நான்காம் வகுப்பு படிக்கும் வயதில் தானாக சாப்ட்வேர் எழுதினார் என்றால் அப்படிப்பட்ட கல்வியை அளித்த அவருடைய பெற்றோர்களைப் பாராட்ட வேண்டும்.

இளமையில் கல் என்று சொன்ன ஒளவையாரும், பெற்றோர்கள்தான்  முக்கியமான ஆசிரியர்கள் என்று 'ரிச் டாட் புவர் டாட்" எழுதிய ராபர்ட் டி கியோஸ்கியும் 'கேட்ச் தெம் எங் அண்ட் டீச் தெம்" என்னும் ஆங்கிலப் பழமொழியும் நம் நினைவுக்கு வருகிறது.

21 வயதில் உலக சரித்திரம் படைத்து இந்திய நாட்டீற்கே பெருமை சேர்த்திருக்கும் ரித்திஷ்,  இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

நான்கே ஆண்டுகளில் ஒரு நிறுவனம் 360 கோடியைத் தனது சந்தை மதிப்பாக உயர்த்தி இருக்கிறார் என்றால், அதற்குப் பின்னால் ரித்திஷின் உழைப்பை நம்மால் உணர முடிகின்றது.

தனது 17 வது வயதில் தனது சொந்தத் தொழிலைத் தொடங்கியிருக்கும்; ரித்திஷ் ஒரு  உலகத்தின் முதல் குழந்தை முதலாளி. (அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படி 18 வயதுக்கு உட்பட்டோர் குழந்தைகள்)

( ஆதாரம்: தி ஹிந்து நாளிதழ், ஏப்ரல் 29, 2015 )

Image Courtesy: Google, :financialexpress.com,


No comments:

Post a Comment