திருவள்ளுவர் ( Image Courtesy: Google) |
ஒரு ராஜாவுக்கு தீராத தலைவலி. பாக்காத வைத்தியம் இல்லை. போகாத கோவில் இல்லை. கும்பிடாத சாமி இல்லை. ஏறாத மலை இல்ல. இறங்காத குளம் இல்லை. அப்பவும் தலைவலி அடம் பிடிச்சது. போகலை.
ஒடனே ராஜா ராஜப்பிரதானிகளைக் கூட்டினார். " இந்த தலைவலி தீர உடனடியா ஒரு நல்ல வைத்தியரை 10 நாளில் கூட்டிக்கிட்டு வரலன்னா எல்லாருக்கும் தூக்கு தண்டணை " என்று சொன்னார். எல்லாரும் ஆடிப்போயிட்டாங்க.
சரியா 10 வது நாள் வெளி தேசத்திலிருந்து ஒரு வைத்தியரைக் கூட்டிக்கிட்டு வந்தாங்க.
ராஜாவை சோதனை பண்ணி பாத்துட்டு, ஒரு மருந்தைக் கொடுத்து " இதை 10 நாளைக்கு சாப்பிடுங்க. சரியாப் போயிடும் ஆனா ஒரு கண்டிஷன் " என்று இழுத்தார் வைத்தியர்.
'என்ன கன்டிஷன் ?" கோபமாக கேட்டார் ராஜா.
'நீங்க மருந்தை சாப்பிடும் போது கருங்குரங்கை நினைக்கக் கூடாது. அப்படி நினைச்சா மருந்து வேலைபாக்காது" கண்டிஷனை உடைத்து சொன்னார் வைத்தியர்.
'மருந்தை சாப்பிடும்போது கருங்குரங்கை நினைக்கக் கூடாது அவ்ளோதானே. அதை நான் பாத்துக்கறேன்" என்றார் ராஜா அலட்சியமாக.
சன்மானத்தை வாங்கிக் கொண்டு வைத்தியரும் கிளம்பிவிட்டார். ராஜா கடவுளை வேண்டிக்கொண்டு முதல் உருண்டை மருந்தை கையில் எடுத்து வாயில் போடும் சமயம் ஒரு கருங்குரங்கு மனதில் துள்ளிக் குதித்தது.
ஒரு நாள் போச்சி. இரண்டு நாள் மூன்று நாள் இப்படியாக பல நாள் கழிந்தது. கருங்குரங்கின் இம்சை தாங்க முடியவில்லை. மருந்தை எடுக்கும்போதெல்லாம் கூடவே கருங்குரங்கும் ஆஜரானது.
இப்போதெல்லாம் மருந்தை எடுக்காதபோதுகூட கருங்குரங்கை மறக்க முடியவில்லை.
இப்போ அந்த ராஜா கருங்குரங்கை மறக்கறதுக்காக மருந்து தேடிக்கிட்டு இருக்காராம்.
இந்த மாதிரி சில விஷயங்கள் மறக்கணும்ன்னு நெனைப்போம். அதை மறக்க முடியாது. மறக்கக்கூடாதுன்னு நெனைப்போம். அதை மறந்துடுவோம்.
நல்லா படிச்சது ஒரு தடவைக்கு நாலு தடவை எழுதிப் பார்த்தது. பரிட்சைக்கு எழுதும்போது ஞாபகத்துக்கு வரவே வராது. எவ்வளவுதான் நெனைச்சிப் பார்த்தாலும் வராது. பரிட்சை ஹாலைவிட்டு வெளியே வந்தவுடனே ஞாபகத்துக்கு வரும். இதைத்தான் விதிங்கறது.
நமது குறிக்கோளை அடைய ஒரு வழி சொல்லித் தருகிறார் திருவள்ளுவர்.

உனது குறிக்கோளை தினமும் ஒரு தடவை நினைத்துப்பார். நினைத்தால் மட்டும் பத்தாது. அதுக்காக தொடர்ந்து முயற்சி பண்ணு. நீ நெனைச்சதை நீ அடையலாம். அடையலன்னா என்னிடம் வந்து சொல் என்கிறார்.
உள்ளியது எய்தல் எளிதுமன்: மற்றும்தன்
உள்ளியது உள்ளப் பெறின்.
உங்கள் குறிக்கோளை மறக்காமல் முயற்சி செய்யும் சுலபமான வழியை நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்.
உள்ளியது எய்தல் எளிதுமன்: மற்றும்தன்
உள்ளியது உள்ளப் பெறின்.
உங்கள் குறிக்கோளை மறக்காமல் முயற்சி செய்யும் சுலபமான வழியை நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்.
கவனமாகக் கேளுங்கள்.
உங்கள் குறிக்கோள், என்னவோ அதை நீங்க தினமும் படுக்கப் போகும்போது, ஒரு முறை மறந்துவிடுங்கள். அது போதும்.
உன்மையில் வாழ்க்கையில் தன் குறிக்கோளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் இந்த உளவியல் கட்டுரையை தவறாமல் படிக்க வேண்டும். அறிஞா். தேவ ஞானசூரிய பகவான் அவர்கள் எழுத்துக்களின் மூலம் வைத்தியம் செய்யும் சிறப்பு வைத்தியர். அவரின் பொன்னான நேரத்தை மற்றவர்கள் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் அவர்களுக்கு உறுதுனையாக இருந்து அவரிடமிருந்த பல ஆயிரம் படைப்புகளை பெற்று பயன் பெறுவோம். H KARTHIBAN, INFORMATION SCIENTIST, CHENNAI.
ReplyDelete