Select Your Favorite Topic! Enjoy Reading!!

Thursday, April 7, 2016

வா த் து மு ட் டைகளை அடைகாத்த வி ஞ் ஞா னி


தாமஸ் ஆல்வா எடிசன்
இந்தியாவில் தமிழ்நாடு மாதிரி அமெரிக்காவில் ஒஹையோ என்பது ஒரு தனி மாநிலம். அந்த பகுதியில் நான்சி என்ற ஒரு பெண்மணி வசித்து வந்தார். அவளுடைய மகனுக்கு அப்போது ஆறு வயது. நான்சி அவன் மீது தன் உயிரையே வைத்திருந்தாள்.

தன் மகன் உலகமே போற்றும் அளவுக்கு பெரிய ஆளாக வர வேண்டும் என்று விரும்பினாள். அதற்காக நான்சி எதையும் செய்ய தயாராக இருந்தாள்.

ஆனால் அவனுடைய தலை கொஞ்சம் பெரியதாக இருந்தது. உடலின் அளவுக்கு பொருந்தாதது போலத் தோன்றியது.  அக்கம்பக்கத்திலுள்ள ஜனங்கள் தாமஸ்’ஐ வேற்று கிரகத்து பையன் மாதிரி   வேடிக்கை பார்த்தார்கள். அது நான்சிக்கு கவலையாக இருந்தது.

ஒரு நாள் தாமஸ்’ஐ காணவில்லை. வீடு வாசல் தோட்டம் என்று எல்லா இடங்களிலும் வலைவீசி தேடினார்கள். தாமஸ்’ஐ கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியாக தோட்டத்தில் வாத்துக்கள் அடைத்து வைத்திருக்கும் இடத்தில் தாமஸ் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.

ஆனால் அவன் இருந்த நிலையைக் கண்டதும் நான்சி அதிர்ச்சி அடைந்தாள். எதற்காக இப்படி செய்தான் தாமஸ் என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படி என்னதான் செய்துவிட்டான் தாமஸ் ?

வாத்து முட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு அவற்றின் நடுவில் உட்கார்ந்திருந்தான்.

கவலையுடன் ' தாமஸ் ஏன் இப்படி முட்டைகளின்மீது உட்கார்ந்திருக்கிறாய் ? என்று கேட்டாள் நான்சி.

'பக்கத்து வீட்டில் முட்டைகளின் மீது கோழி அவயம் காப்பதை நீங்கள்தானே காட்டினீர்கள். அப்படி உட்கார்ந்தால்தான் குஞ்சு பொரிக்கும் என்று சொன்னீர்களே" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் தாமஸ்.

தாமஸ்’ன் அம்மாவும் உடன் இருந்த வேலைக்கார பெண்மணியும் அடக்க முடியாமல் சிரித்தார்கள்.

தாமஸ் வாத்து முட்டையை அவயம் ;காத்த சேய்தி ஊர் முழுக்க பரவியது. ஆளாளுக்கு அவரவர் கற்பனா சக்திக்கு ஏற்றார்போல வாய்வலிக்கப் பெசினார்கள்.

ஆனால் நான்சி மட்டும்  'என் மகன் எதிர்காலத்தில் பெரிய விஞ்ஞானியாக வருவான். சராசரியான குழந்தைகள் மாதிரி இல்லை என் பையன் " என்று பெருமைப் பட்டாள். 

அந்த நாள் முதல் தாமஸ் 'பெரிய விஞ்ஞானியாக மாற்றிக் காட்டுவேன்" என்ற சபதம் எடுத்துக் கொண்டாள்.

காலம் வேகமாக உருண்டோடியது. அதற்குள் தாமஸ்’க்கு எட்டு வயதானது. நாள் நட்சத்திரம் பார்த்து அவனை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள் அவன் அம்மர். அவனை விஞ்ஞானியாக ஆக்கும் முயற்சியின் முதல்கட்டம் முடிந்தது என பரவசப்பட்டாள்.

தினமும் தாமஸ் பள்ளிக்கூடம் போய்வரும்போது அவனை ஒரு விஞ்ஞானியாகவே பார்த்தாள். கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு  மாதங்கள் முடிந்தது.

அந்த சமயம் ஆசிரியர் ஒருவர் தாமஸ்’ன் வீட்டிற்கு வந்தார். அவர் வேறு யாரும் அல்ல தாமஸ்,ன் வகுப்பு ஆசிரியர். 

தாமஸ்’ன் அம்மா அவரை அன்புடன் வரவேற்று மரியாதையுடன் உபசரித்தார்.
அந்த ஆசிரியர் ஒரு வித்தியாசமான மனிதர். அவருக்கு எதையும் மறைத்துப் பேசத் தெரியாது. மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். அவரைப்பற்றி நான்சிக்கு நன்றாகத் தெரியும்.

தன்னிடம் படிக்கும் மாணவர்களைப் பற்றிய தனது கருத்துக்களை அவர்களுடைய பெற்றோர்களிடம் தெரிவிப்பதை முக்கியக் கடமையாக நினைத்தார் அந்த ஆசிரியர்.

அந்த ஆசிரியர் ஏதாவது வருத்தப்படும்படியாக சொல்லிவிடப் போகிறார் என்று நான்சி படபடப்புடன் இருந்தார்.

அவர் என்ன எதிர்பார்த்தாரோ அது அப்படியே நடந்தது. தாமஸ் பற்றிய தனது அபிப்ராயத்தைக் கூறி அவரை அதிர்ச்சி அடைய வைத்தார். நான்சியின் கனவுகள் உடைந்து சுக்கு நூறாயின.

'நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க. அவன் மண்டையில் சுத்தமா படிப்பு ஏறவே ஏறாது. நான் ஒண்ணு செய்யச் சொன்னா அவன் ஒண்ணு செய்யறான். அவனுக்கு பாடம் சொல்லித்தர யாராலும் முடியாது. தயவு செஞ்சி அவனை நாளையிலருந்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாதிங்க. என்னை மன்னிச்சுடுங்க" என்று சொல்லிவிட்டு தாமஸ் அம்மா என்ன சொல்லுகிறார் என்று கூட கேட்க விரும்பாமல் வீட்டீற்கு வெளியே போனார் அந்த ஆசிரியர்;.
அந்த சமயம் அம்மாவுடன் தாமஸ்’ம் தன் ஆசிரியர் சொல்வதை கேட்டுக் கொண்டுதான் இருந்தான். அவனுக்கு ஆசிரியர் சொன்னது புரிந்ததா புரியவில்லையா என்று தெரியவில்லை.

'தாமஸ் நீ கவலைப படாதே. பள்ளிக்கூட பாடம் எல்லாம் நான் உனக்கு சொல்லித் தர்றேன். நீ பெரிய ஆளா வருவெ" என்று மகனை சமாதானப்படுத்தினாள், அவன் அம்மா.

அவள் சொன்ன மாதிரி அவனை உலமே போற்றக் கூடிய விஞ்ஞானியாக மாற்றிக் காட்டினார். 

இன்று நம் தலைக்கு மேல் எரியும் மின்சார விளக்கும், நமது டீவி பெட்டியில் ஓடிக்கொண்டிருக்கும் சினிமா உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புக்களையும் இந்த உலகுக்கு கொடையாகத் தந்தவர்தான் ஆசிரியரால் பள்ளியிலிருந்து விரட்டப்பட்ட சிறுவன்: வாத்து முட்டைகளின் மீது அடைகாத்த சிறுவன்.

அந்த சிறுவன்தான் தாமஸ் ஆல்வா எடிசன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?
தாமஸ் ஆல்வா எடிசன் 

Image Courtesy: nilsum.com, hellohidoz.com







No comments:

Post a Comment