Select Your Favorite Topic! Enjoy Reading!!

Sunday, January 24, 2016

உயிர் உரங்கள் ( BIOLOGICAL FERTILIZERS )


உயிர் உரங்கள்
( BIOLOGICAL FERTILIZERS )


உயிர் உரங்களும்

இயற்கை உரம்தான்

பயிரூட்ட மேலாண்மை, இயற்கை வேளாண்மையின் முக்கியமானஅம்சம். ;.இதற்கு உயிர் உரங்கள் மிகவும் அவசியம்.

காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலை நிறுத்தவும், மண்ணில் கரையாமல் இருக்கும் மணிச்சத்தினைக் கரைத்துக் கொடுக்கவும், நகரமுடியாமல் இருக்கும் சத்துக்களை நகர்த்திக் கொடுக்கவும் தேவை இந்த உயிர் உரங்கள்.

இதில் பல வகை உண்டு

சில வகை, தழைச்சத்ததை நிலை நிறுத்துபவை.

ரைசோபியம், அசோஸ்பைரில்லம், அசட்டோபேக்டர், அசோலா, நீலப்பச்சைப்பாசி இவை எல்லாம் தழைச்சத்ததை நிலை நிறுத்தும் வகையைச் சேர்ந்தவை.

சில வகை, பயிர் சத்துக்களை கரைத்துத் தருபவை

மணிச்சத்தை கரைத்துத் தருபவை – பாஸ்போபேக்டீரியா

மற்றும் சில வகை, பயிர் சத்துக்களை நகர்த்திக்; கொடுப்பவை.

மைக்கோரைசா மணிச்சத்தையும், பூரூட்ரூரியா ஆரன்சியா சாம்பல் சத்தையும் நகர்த்திக் கொடுக்கின்றன. 

விதைநேர்த்தி செய்தல்:

ஒரு ஏக்கருக்கான உயிர் உரத்தை ஆறிய அரிசி கஞ்சியுடன், கூழ் நிலையில் விதையுடன் கலந்து, 30 நிமிடம் நிழலில் உலர வைத்து பினனர்; 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும்.

நாற்றங்காலில் இடுதல்:

பரிந்துரைக்கப்பட்ட உயிர் உரத்தை தொழுஉரம் (அ) மண்புழு உரத்துடன் கலந்து தூவ வேண்டும.;

நாற்றுக்களை உயிர் உரத்துடன் நனைத்து நடுதல்:

ஒரு ஏக்கருக்கான உயிர் உரத்துடன் 10 பங்கு நீர் கலந்து, அதில் நாற்றுக்களின் வேர்ப்பகுதியை 30 நிமிடம் நனைத்து நட வேண்டும்;.

நடவுவயலில் இடுதல்:

800 கிராம் முதல் 4 கிலோவரை பயிரின் தேவையைப் பொறுத்து மக்கிய தொழுஉரத்துடன்(அ) மண்புழு உரத்துடன் சேர்த்து மண்ணில் கலந்துவிட வேண்டும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளுடன் உயிர் உரங்களைக் கலக்கக் கூடாது.

உயிர் உரங்களின் மேல் நேரடியாக வெயில் படக்கூடாது.

இவற்றை உரிய காலவரம்பிற்குள் பயன்படுத்த வேண்டும்.
;
கிழிந்த பாக்கட்டுகளில் உள்ளவற்றை உபயோகப் படுத்தக் கூடாது.
  
உரங்களின்; அளவும் பயன்படுத்தும் விதமும்

வ.எண்
உயிர் உரத்தின் பெயர்
பரிந்துரைக்கப் படும் பயிர்
பயன்படுத்தும் முறை
அளவு - கிராம்
1
ரைசோபியம்
பயறுவகை பயிர்
விதைநேர்த்தி (10 கி.கி.விதை)
200
2
அசோஸ்பைரில்லம்
நெல், கம்பு, காய்கறி
40 லிட்டர் நீரில் கலந்து வேர்களை நனைக்கவும்
400
3
அசட்டோபேக்டர்
எல்லாப் பயிர்களுக்கும்
20 கிலோ தொழுஉரத்துடன் கலந்து நடவுவயலில் 






(m) tpijf;Fk; Kd; ,lyhk;
800 fpuhk; Kjy; 40 fpNyh tiu
4
gh];NghNgf;Bupah
vy;yhg; gapu;fSf;Fk;
20 fpNyh njhOcuj;Jld; fye;J elTtaypy; ,lyhk;
800 fpuhk; Kjy; 40 fpNyh tiu
5
rhk;gy; rj;ij efu;j;Jk; Ez;Zapu;
vy;yhg; gapu;fSf;Fk;
20 fpNyh njhOcuj;Jld; fye;J elT taypy; (m) tpijf;Fk; Kd; ,lyhk;
800 fpuhk; Kjy; 40 fpNyh tiu



urhad cuq;fis gbg;gbahf Fiwj;J tUk; ehk; ,aw;ifahd  capu; cuq;;fis gad;gLj;Jtjpy; ftdk; nrYj;j Ntz;Lk;.

Saturday, January 16, 2016

இந்தியாவில் நாம் பெறும் மழை குறைவல்ல.


2012—ஆம் ஆண்டு
      இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தும் அனுபவமு; உள்ள 30 பேர் அடங்கிய ஒரு குழு பயிற்சிபெற பிரேசில் நாட்டிற்குச் சென்றது. அந்த குழுவில் நானும் இருந்தேன்.
      இந்திய அரசின் ஒரு அங்கமான நபார்டு வங்கி இதனை ஏற்பாடு செய்திருந்தது. 
      வேர்ல்ட் ரிசோர்ஸ் சென்டர்  (  றுழுசுடுனு   சுநுளுழுருசுஊநு   ஊநுNவுசுநு )  என்ற பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ஆராட்சி நிறுவனம் இதே பயிற்சியை அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது.
      ஆந்த பயிற்சி நடைபெற்றபோது ஒவ்வொரு காளும் இரவு நேரத்தில் ஒரு கருத்துப் பரிமாற்ற கிகழ்ச்சி நடைபெறும்.
      சேவ் பவுலோ ( ளுயழ pழரடழ ) மாநிலத்தில் பின்ட்டடாஸ் என்ற நகரில் முதல் நாள் பயிற்சி நடந்தது. அன்று மாலை ஒரு கலந்துரையாடல் நடந்தது.
      அந்த கருத்து பரிமாற்ற நிகழ்வில், பிரேஸில் நாட்டின் வேல்ட்  ரிசோர்ஸ் சென்டர்  ஐ சேர்ந்த பயிற்றுநர்கள் நபார்டு வங்கியின் அலுவலர்கள் மற்றும் பயிற்சிக்காக சென்றிருந்த நாங்களும் பங்கு பெற்றிருந்தோம்.
      இதில் முக்கால்வாசி பேர் விவசாயம், வேளாண்மைப் பொறியியல் மற்றும் சமூகவியல் துறையில் பட்டதாரிகளாகவும் அந்தந்த துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் பெற்றவர்களாகவும் இருந்தனர்;.
      ஓவ்வொருவரும் அவரவர் கருத்துக்களை வழங்கினர். எனது முறை வந்தது. நான் எனது கருத்தை ஒரு புள்ளி விவரத்தோடு சொன்னேன். நான் சொன்ன புள்ளி விவரங்களை தவறு என்று எங்களுடன் வந்திருந்த பயிற்சியாளர் ஒருவர் அதனை தள்ளுபடி செய்தார். 
      அது சரியானதுதான் என்று நான் விளக்கம் கூறியும் அவர் அதை ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து ஒரு சலசலப்பு ஏற்பட்டது. வேறு யாரும் அதுபற்றி எந்தக் கருத்தும் சொல்லவில்லை. 
      எனக்கும் அவருக்குமான வாக்குவாதமாக மாற அந்த கருத்துப் பரிமாற்ற நிகழ்வு, அத்துடன் முடிவுக்கு வர, நாங்கள் இரவு சாப்பாட்டிற்கு சென்றோம். 
      நான் என்ன புள்ளி விவரம் சொன்னேன் ?  அவர் ஏன் மறுப்பு தெரிவித்தார் ? என்று சொல்வதற்கு முன்னால் இந்தப் பயிற்சியைப் பற்றி சில விவரங்களை உங்களுக்கு சொல்ல வேண்டும்.
      நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தியதில் அனுபவம் பெற்றவர்கள்தான் இந்த பயிர்ச்சியில் இடம் பெற்றிருக்கிறார் --கள் என்று சொன்னேன். 
      இயற்கை வளங்களில் முக்கியமாக நிலம் நீர் வனவளம், பயிர்வளம் கால்நடைவளம் இவற்றை பாதுகாத்து, பராமரித்து மேம்படுத்தி மக்களின் சமூக கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுதான் நீர்வடிப்பகுத் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்துகிறது. மேம்பாட்டுத் திட்டம். இதனை நபார்டு வங்கி, அரசு அல்லாத 
      பிரேஸில் நாட்டில்  'டபிள்யூ. ஆர். ஐ.' ன் உதவியுடன் இதனை சிறப்பாக செய்கிறார்கள். இந்த அனுபவங்களை பெறத்தான் நாங்கள் அந்தப் பயிற்சிக்கு சென்றோம்.
      முக்கியமாக மழைநீரை அறுவடை செய்து பயன்படுத்துவது குறித்த பயிற்சி இது. 
      இந்த பயிற்சி பெற நாங்கள் சென்றது பிரேஸில் நாட்டின் வடகிழக்குப் பகுதி. இங்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழை மிக சொற்பம். இந்தியாவில் கிடைக்கும் ஆண்டு சராசரிமழையில்தோராயமாக பாதி.  
      இப்போது கருத்து பரிமாற்ற நிகழ்ச்சி, எப்படி கருத்து விவரத மேடையானது...? என்று சொல்கிறேன். அப்படி நான் என்னதான் சொன்னேன்...?
      நான் சொன்னது இதுதான். 
      பிரேஸில் நாட்டின் இந்த வடகிழக்கு பகுதியில் கிடைக்கும் ஆண்டு சராசரி மழை சுமார் 600 மில்லிதான். இந்தியாவின் சராசரி 1250 மில்லி. பன்னிரண்டாயிரத்து சொச்சம்  மில்லி மீட்டர் மழையை ஒரு ஆண்டில் பெறும் சிரபுஞ்சி நம் நாட்டில்தான் உள்ளது. இவர்களைப் போல மழைநீரை சேமித்துப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினால், தண்ணீர் பிரச்சினையை முழுவதுமாக சரிசெய்துவிட முடியும். 
      சிரபுஞ்சியில் கிடைப்பதாக நான் சொன்ன மழை அளவு சரி அல்ல. இதுதான் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்திருந்த இந்த பயிற்சியாளர் எனக்கு எதிராக கொடி பிடித்தார்.
      இன்டர்நெட் மற்றும் வலைத்தளத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். 
      அன்று இரவே என்னுடன் இருந்த சில நண்பர்களுக்கு நான் சொன்ன புள்ளிவிவரங்கள்  ' சரி '  என்று நிரூபித்தேன். 
      நான் சொல்ல விரும்பியது புள்ளிவிவரங்கள் அல்ல. அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு செய்தி. 
      அது, இந்தியாவில் நாம் பெறும்  ' மழை ' குறைவல்ல என்பதுதான். 
      என் புள்ளிவிவரத்தை தள்ளுபடி செய்த நண்பரும் நானும் கிட்டத்தட்ட 12 நாட்கள் ஒன்றாகத்தான் இருந்தோம். ஒரு நாளும் இதுபற்றி அவரும் பேசவில்லை. நானும் கேட்கவில்லை. 
      அந்தப்பயிற்சி முடிந்து அந்த நண்பரிடம் கைகுலுக்கி விடைபெறும் போது பிரெமின் கவிதை ஒன்று என் ஞாபகத்தில் வந்தது. 
      ராமச் சந்திரனா...?  என்று கேட்டேன்.
      ஆம்...   என்றார்.
      ஏந்த ராமச்சந்திரன்...? என்று –
      நானும் கேட்கவில்லை.....அவரும் சொல்லவில்லை...

Kadaisi Manithanai Gavani:

Maranthu Pona Boomi

தும்பேரி கிராமத்தில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு வீடியோ படம்