Select Your Favorite Topic! Enjoy Reading!!

Monday, April 11, 2016

இதை யாராவது நம்புவார்களா ?


ப்ராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்  
(Image Coutesy: Thanks to Google)


யாரும் நம்ப மாட்டார்கள், கடுமையான பஞ்சமும் வேலையில்லாத் தி;ண்டாட்டமும் வாட்டி வறுத்தெடுத்தது அமெரிக்காவை 1930 களில் என்றால். 

ஆனால் அதுதான் உண்மை. அது  ஒரு கருப்பு ஆண்டாய்  தொடங்கியது.

அப்போதுதான் நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் கண்ணாடிச்சில்லுகளாக   நொறுங்கிப்போனது.  

வியாபார நிறுவனங்கள் அடுக்கிய சீட்டுக்கட்டுகளாய் சரிந்து போயின. வங்கிகள் தங்கள் கதவுகளை இறுக இழுத்துப் பூட்டின. பெருநகர சாலைகளில் வேலைவாய்ப்பின்றி மக்கள் அலையும் நிகழ்வுகள் பெருகின.

அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதி ஹ_வர் செய்வதறியாமல் கைகளை பிசைந்துகொண்டிருந்தார். அதைத்தவிர ஒரு துரும்பையும் அவரால் கிள்ளிக்கூட போட முடியவில்லை.

அரசியல் தலைவர்களும் அரசாங்கமும் ஏதாவது செய்யும் என மக்கள் எதிர்பார்த்தனர். நிலைமை மோசமானதே தவிர சீரடையவில்லை. 

 இதற்கிடையே அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. பிராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் என்ற விவசாயி அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார். இந்த பொருளாhர சீரழிவை சரிசெய்ய திட்டத்தோடு ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்தார் ரூஸ்வெல்ட். 

நொறுங்கிப் போயிருந்த அமெரிக்க பொருளாதாரத்தை சரிசெய்யவும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை சீர்செய்யவும் ஃபாஸ்ட்புட் மாதிரி ஒரு திட்டம் வைத்திருந்தார் ருஸ்வெல்ட். தனது வயலில் தனக்குக் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திட்டத்தை வகுத்திருந்தார். 

இந்த திட்டத்திற்கு “ரூஸ்வெல்ட்டின் நியூடீல் ஆர்மி” என்று பெயர் வைத்தனர். இதுதான் பின்னர் சி சி சி ஆனது. சிவிலியன் கன்சர்வேஷன் கார்ப்ஸ் என்பதுதான் இதன் ஆங்கில நீட்சி. தமிழில் இயற்கைவள பாதுகாப்பு ராணுவம்.

இயற்கை வளங்களை பாதுகாக்க ஒரு பிரம்மாண்டமான இளைஞர் படையை உருவாக்கினார். 18 முதல் 25 வயதுடைய இளைஞர்களை இந்த படையில் சேர்த்தார். பயிற்சி தந்தார். சீர்கேடடைந்திருந்த இயற்கை வளங்களை சீர்படுத்தினார். 

நிலங்கள் மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டன. நீராதாரங்கள் புத்துயிர் பெற்றன. நிலங்களின் தன்மைக்கு ஏற்ற புதிய பயிர்முறை அறிமுகம் செய்யப்பட்டது, கால்நடைகளுக்கு தீவன உற்பத்தி மேம்படுத்தப்பட்டது. காடுகள் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டன. மரங்கள் பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டன. ஓடைகளுக்கு குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன. பாலங்கள் கட்டப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. புதிய டெலிபோன் லைன்கள் அமைக்கப்பட்டன. மாநில வனப்பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. காடுகளில் தரமற்ற மரங்கள் வெட்டப்பட்டு உயர்தர மரவகை நடப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 150 வகையான வேலைகளை செய்தது சி சி சி. 

பெயர் மட்டும் அல்ல, திடடத்தையும் ஒரு போரைப்போல நடத்தினார் ரூ;வெல்ட். தொழிலாளர்துறை, வேளாண்மைத்துறை, போர் மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவற்றிடம் திட்டத்தை நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தார். ரூஸ்வெல்ட்டின் செல்லத் திட்டமாக இது செயல்படுத்தப்பட்டது.

ராபர்ட்ஃபெச்னர் என்பவரை இதற்கு இயக்குநராக நியமித்தார்;. ஃபெச்னர் முதல் உலகப்போரின்போது லேபர்பாலிசியின் சிறப்பு செயலராக பணிபுரிந்தவர். ரூஸ்வெல்ட்’ன் நம்பிக்கையைப் பெற்ற அரசு அதிகாரி ஃபெச்னர்;

ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் திட்டம் இது. ஒன்று நிலவளத்தை மேம்படுத்தி மண்ணரிப்பைத் தடுத்து. நீர் ஆதாரங்களை சீர் செய்து, வனங்களை மேம்படுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், இரண்டு வேலைவாய்ப்பை அதிகரித்தல், மூன்று,  நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வேளாண்மை உற்பத்தியை மேம்படுத்துதல் போன்றவைதான் இத்திட்டத்தின் முதுகெலும்பு. 

(Image Cortesy: Thanks to Google)
ஒரே வரியில் சொல்வதானால், இயற்கைவளங்களை பாதுகாத்து மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் திட்டம்தான் சி சி சி. இதைத்தான் நாம் இன்று நீhவடிப்பகுதி திட்டம் என்று நாம் செயல்படுத்தி வருகிறோம். இதனை நாம் ஆங்கிலத்தில் வாட்டர்ஷெட் டெவலப்மெண்ட் என்கிறோம்.

இந்த திட்டம்தான் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்காவை காப்பாற்றியது. இன்று உலகத்தின் பணக்கார நாடாக நடைபோடும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை தூக்கிப்பிடித்தது இந்த சி சி சி தான். அதற்கான அடித்தளத்தை அற்புதமாக வடிவமைத்தார் ரூஸ்வெல்ட்.

Friday, April 8, 2016

படா ஷூ கம்பெனியின் பக்கா பார்முலா




1930 - என்டிகாட் ஜான்சன் ஷூ பேக்டரி

ஒரு சராசரி தொழிலாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவரின் முயற்சியால் ஒரு ஷூ பேக்டரியும் இரண்டு நகரங்களும் உருவான கதையை உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன்.

அமைதியும் அழகும் கொலுவிருக்கும் அந்த இரு நகரங்கள், நியூயார்க்கிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில், உள்ளன. 

ஜான்சன் மற்றும் எண்டிகாட் என்ற பெயரில் அமைந்த அந்த இரட்டை நகரங்கள்  'ஃபேர்பிளே” என்னும் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன.
வெற்றிகரமான ஷ{க்கள் உற்பத்தி செய்யும் ஒரு கம்பெனியைத்  வளர்த்து அதன் பணியாளர்கள் வசிப்பதற்காகவே இந்த இந்த நகரங்களை உருவாக்கியவர்; ஜார்ஜ் எஃப் ஜான்சன் (ஜார்ஜ்)

ஒவ்வொரு நாளும்; 81000 ஜோடி ஷ{க்கள் தயாரித்து சாதனை படைத்தது ' ஜான்சன் -எண்டிகாட் " கம்பெனி. உலகத்தின் மிகப் பெரிய ஷ_கம்பெனியாக உருவெடுத்தது.

50000 பேர் வசித்த அந்த நகரங்களிலிருந்து 15000 பேர் 'ஜான்சன் -எண்டிகாட்'ல் வேலை பார்த்தனர்.; வேலைபார்த்த அத்தனை பேருக்கும் ஆளுக்கொரு வீடு. பளிச்சென்று கண்ணைக் கவரும் வண்ணம் பூசப்பட்ட மரங்களினால் கட்டப்பட்ட வீடுகள்.

பரந்து விரிந்திருக்கும் புல்வெளி, நடுவே ஒரு கிளப் ஹவுஸ், ஊடாக ஒரு பார்க், நீச்சல் குளம், குழந்தைகளுக்கென ஆழம் குறைந்த குளம், குழந்தைகள் நூலகம், சாரணச் சிறுவர்களுக்கு தனி அறை,  கட்டணம் செலுத்தி பொழுது போக்க நடன அரங்கம், சனிக்கிழமை தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து கண்டுகளிக்கும் குதிரைப் பந்தய மைதானம், அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பந்தயச் சாலைகள்;. இப்படி அந்த  இரண்டு நகரங்களையும் ஒரு சிற்பத்தைப் போல செதுக்கி வைத்திருந்தார் ஜார்ஜ்.

சமூக ஒழுங்கு, கல்வி, விளையாட்டு, இசை, மகிழ்ச்சி, ஆகியவை இந்த இரட்டை நகரங்களின் அடையாளங்களாக விளங்கின.

இயந்திரங்கள், நிலக்கரி, வியர்வை ஆகியவை பேக்டரிக்கு உள்ளேயும் அன்பும், அரவணைப்பும், மகிழ்ச்சியும், உற்சாகமும், நகரங்களுக்கு உள்ளேயும் நிரம்பி வழிந்தன. 

இந்த மக்களின் மகிழ்ச்சிக்கும், கவலை இல்லா சிரிப்பிற்கும் காரணமாக இருந்தவர் ஜான்;. ஆனால் எல்லோரும் உச்சிரிக்கும் பெயர் ஜார்ஜ் எஃப். குழந்தைகள் கூட அவரை அப்படித்தான் அழைக்கும்.

ஜார்ஜ் ஒரு எளிமையான மனிதர். உத்தரவின்றி உள்ளே வா டைப். எந்த ஒரு தொழிலாளியும் அவரை சிரமமின்றிப் பார்க்கலாம்.

ஃபேக்டரி அலுவலகத்தில் இல்லை என்றால் கூட்டமான குழந்தைகள் அல்லது தொழிலாளிகள் மத்தியில் அவரைப் பார்க்கலாம்.

பெரியவர்கள் அவரை குடும்பத் தலைவர் என்றார்கள். குழந்தைகள் அவரை ஜார்ஜ் எஃப்.; என்று பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.

ஒரு ஆண்டில் 140 மில்லியன் டாலர் வியாபாரம் பார்க்கும் ஜார்ஜ் க்கு குழந்தைகளுடன் பட்டம் விடவும் அவர்களுடைய பொம்மையை பழுது பார்க்கவும் நேரம் இருந்தது. 

அவர் ஒன்றும் வாரிக் கொடுக்கும் வள்ளல் அல்ல. பெரிய அறிவாளியும் அல்ல. சூப்பர் மேனும் அல்ல. வேறு யார்தான் அவர் ?

இதயம் முழுக்க அன்பை நிரப்பியபடி மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் மனிதர்கள் மத்தியில் சுற்றுலா வரும்; ஒரு சராசரி மனிதர்.

ஒரு சராசரி மனிதர் ஜான் எப்படி இரண்டு நகரவாசிகளுக்கு தந்தை ஆனார் என்று பார்க்கலாம்.

நாற்பது வருஷத்துக்கு முன்னால் திவால்; ஆன ஒரு குட்டி ஷ{ கம்பெனியில் ஃபோர் மேனாக இருந்தார்.

அந்த கம்பெனிக்கு கடன் கொடுத்த எண்டிகாட், என்ற பணக்காரர் ' அந்த பணத்தை திரும்ப எடுப்பதற்கு ஏதாச்சும் வழி இருக்கா " என்று ஜார்ஜிடம்; கேட்டார்.

' என்னை பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கம்பெனியை ஓஹோ என்று மாற்றிக் காட்டுகிறேன். அப்படி மாற்றிய பின்னால்  ஒண்ணரை லட்சம் டாலர் என் பங்காகத் தருகிறேன். இப்போது என்னிடம் பத்து பைசாகூட  நகி என்றார், ஜார்ஜ்.
 
ஜார்ஜின் முகத்தை உறு;றுப் பார்த்தார், எண்டிகாட். அந்த முகத்தில் எந்தவிதமான வில்லங்கமும் தெரியவில்லை. இவர் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவார் என்ற நம்பிக்கை தெரிந்தது. அந்த நம்பிக்கையோடு எண்டிகாட் ' ஓகே " சொன்னார்.

எண்டிகாட் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு பங்கம் வராமல்   பைசா நகர்க் கோபுரம் மாதிரி சாய்ந்துக் கிடந்த கம்பெனியை தனது உண்மையான உழைப்பால் தூக்கி நிறுத்தினார். 

தான் வெறுங்கையில் முழம் போட்டதைப்; போல தனது தொழிலாளிகள் அத்தனைப் பேரையும் ஃபேக்டரியின் பங்குதாரர்களாக மாற்றி முதலாளிகளாக்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளிகளின் கூலியில் பாதி அளவு லாப போனஸ் என்று அறிவித்தார்.

தொழிலாளிகளே முதலாளிகளாக மாறி வேலை பார்த்ததால் வேலை நிறுத்தம் இல்லை, முதலாளி தொழிலாளி பிரச்சினை இல்லை. கம்பெனியின் வேலைத் திறன் குறையவில்லை உற்பத்தி குறையவில்லை. கம்பெனியின் லாபம் கண்மண் தெரியாமல்  அதிகரித்தது. இதுதான் ஜர்ஜ்'ன் வெற்றி சூத்திரம். 

'நீங்கள்தான் எனது நம்பிக்கைக்கு உரியவர்கள். இந்த உலகில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. நாம் பெறும் கூலியை குறைக்காமலே நமது பொருட்களை மலிவாக தயாரிக்க முடியும். ஆனால் நம்மில் எதற்கும் உதவாத உதவாக்கரைகளை வெளியேற்ற நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்." என்று அடிக்கடி சொல்லுவார். 

அப்படி அவர் சொல்லும் போது ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் போல நம்பிக்கை அவர்களின் நாடி நரம்புகளில் பாயும். ஆந்த மின்சாரம் அவர்களின் உழைப்பிலும் உற்பத்தியிலும் பிரதிபலித்தது.
ஜார்ஜ் எப் ஜான்

தொழிலாளிகளின் மீது ஜார்ஜ் வைத்திருந்த நம்பிக்கையும், அன்பும்தான் அவர்; வெற்றிக்கு தந்த விலை.; ஜார்ஜ் ன் கதை நமக்கு சொல்லும் பாடம் இதுதான்.



Image Courtesy: Thanks to Country of Broom county Historical Society &
Special Collections Research Centre / Syracuse University.

உலகின் பெரிய பணக்காரனாக என்னை மாற்றியது எது தெரியுமா ?


ஆண்ட்ரூ கார்னகி

ஆண்ட்ரூ கார்னகி 1835 ம் ஆண்டு ஒரு ஏழை சிறுவன். அவன் அப்பா ஒரு நெசவுத் தொழிலாளி. தொழிலாளர்களின் தலைவராகவும் இருந்தார்.

வறுமையான குடும்பப் பின்னணி, புத்தக மூட்டை சுமக்கும் வயதில் அவன் குடும்பத்தை சுமந்தான்.

குறைவான விலைக்கு பழங்களை வாங்கி வீடுவீடாக சென்று அவற்றை விற்று பணம் சம்பாதித்தான்.

பஞ்சம் பிழைக்க பட்டினம்போன கதையாய் கார்னகியின் குடும்பம் பிழைப்பு தேடி அமெரிக்காவிற்கு கப்பலேறியது.

ஒரு சிறிய படகில் 49 நாள் நீர்வழிப் பயணதாக புறப்பட்டு பேர்புட் ஸ்கொயர் என்ற இடத்தை சென்றடைந்தார்கள். 

அமெரிக்கா சென்றதும் கார்னகிக்கு ஒரு வேலை கிடைத்தது. அம்மா அப்பா ஒரு பஞ்சு மில்லில் வேலைக்கு சேர்ந்தார்கள். 

கார்னகிக்கு பள்ளிப்படிப்பு எட்டாக்கனியாக ஆகிவிட்டது. ஆனால் புத்தககங்கள் படிப்பதில் அதிகப்படியான ஆர்வம் ஏற்பட்டது. சிறுவன் கார்னகியின் ஆர்வத்திற்கு ஆண்டர்சன் என்பவர் தீனி போட்டார்.

; ஆண்டர்சன் அந்தப் பகுதியில் வசித்த ஒரு மிலிட்ரிக்காரர்.  அவர் பெயர் கலோனல் ஆண்டர்சன.; அவர் சொந்தமாக ஒரு நூலகம் வைத்திருந்தார். வாழ்க்கைக்கு வழிகாட்டும்படியான ஏகப்பட்ட  புத்தகங்கள் அங்கிருந்தன.

பிடித்த புத்தகங்களை எல்லாம் படித்தான், கார்னகி. அவன் படித்த புத்தகங்கள் எல்லாம் அவன் பார்வையை விசாலப்படுத்தின.

தந்தி ஆப்பரேட்டர்களிடம் உதவியாளராக இருந்த கார்னகி அதன் நுணுக்கங்களை எல்லாம் விரல் நுனியல் சேகரித்தான். 

விளைவு, கார்னகிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அந்த ஆப்பரேட்டர் வேலை கார்னகியைத் தேடி வந்தது.

ஒரு சமயம் ரயில்வேயில் ஒரு விபத்து நடந்தது. அதனை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே மேனேஜர் ஒருவருக்கு கார்னகி பேருதவியாக இருந்தான். 

'இவன் தனக்கு தன்னுடன் இருந்தால் எப்படி இருக்கும்?" யோசித்தார்.

அதிர்ஷ்டக்காற்று மீண்டும் வீசியது. அந்த ரயில்வே மேனேஜருக்கு செயலாளர் ஆனாhன், கார்னகி. 

தான் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் பிடித்தார். பல கம்பெனிகளின் பங்குகளை வாங்கினார். 

அடுத்த பத்து ஆண்டுகளில் ரயில்வேயில் அவர் தன் வாழ்க்கையை ஓட்டினார். 

ஒரு சாதாரண எழுத்தராக ரயில்வேயில் பதுங்கியிருந்தாலும் கார்னகி அடுத்த பாய்ச்சலுக்காக காத்திருந்தார்.

மெலிதான ஒரு வாய்ப்பு வந்தாலும் அதனை கை நழுவிவடாமல் எட்டிப் பிடிப்பதில் கெட்டிக்காராக இருந்தார் ஆண்ட்ரூ.

அயிரை மீனுக்காக காத்திருந்த கர்னகி கையில் சுராமீன் சிக்கியது.

ஒருமுறை வேல்ஸ் இளவரசர் அங்கு வந்திருந்தார். தற்செயலாக ரயில் எஞ்சின் பக்கத்தில் இருந்த கார்னகி, ' இந்த ரயில் எஞ்சினில் ஒரு சவாரி போகலாமா ?" என்று கேட்டார். 'சரி" என்றதும் எஞ்சின் டிரைவர் உட்பட இளவரசருடன் கார்னகி பயணம் செய்தார்.

கார்னகிக்கு அப்போது வயது 27. அப்போதே அவர் தனது சேமிப்பிலிருந்து 1000 டாலரை ஆயில் பிசினசில் முதலீடு செய்திருந்தார்.

பள்ளத்தை நோக்கி ஆர்வமாய் பாயும் ஆறுபோல அதிர்ஷ்டம் தேவதை திறமைசாலியான கார்னகியின் கதவுகளை அடிக்கடி தட்டிக் கொண்டே இருந்தாள்.

இந்த முறை அதிர்ஷ்ட தேவதை மாய்ந்து ஓய்ந்து போன ஒரு இரும்பு கம்பெனி ரூபத்தில் வந்தது. அந்த கம்பெனியை, தூக்கியெறியும் துட்டுக்கு வாங்கிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார்கள். 

தானாய் வரும் சீதேவியை வேண்டாம் என்று சொல்வாரா ? வாங்கிக் கொண்டார். அடுத்து என்ன செய்வது ? யோசித்தார். கம்பெனி கல்லாகட்ட வேண்டும்.

கர்னகியே களத்தில் இறங்கினார். பேய் மாதிரி வேலை பார்த்தார். சப்ளை ஆர்டர்கள் குவிந்தன. கம்பெனி லாபம் பார்க்க ஆரம்பித்தது. 

கார்னகியின் பெயர் பணக்காரரர்களின் பட்டியலில் ஏறியது.

'கொடுக்கும் சாமி; கூரையை பிச்சிகிட்டு; கொட்டும்;" என்பது நிஜமானது. கார்னகி தொட்ட இரும்பெல்லாம்  22 காரட் பொன் ஆனது.

கார்னகியின் 46  வது வயதில் 45000 தொழிலாளர்களைக் கொண்ட அவருடைய தொழிற்சாலை உலகத்தின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தியின் சிகரமாக உயர்ந்து நின்றது. கார்னகி இரும்பு மனிதர் ஆனார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது தொழிற்சாலையை கார்னகி விற்க விரும்பி தனது பங்குதாரர்களிடமே 150; மில்லியன் டாலருக்கு விலை பேசினார். 

வியாபாரம் உடனடியாய் படியாததால் 250 மில்லியன் டாலருக்கு ராக்பெல்லருக்குக் கொடுக்க சம்;மதித்தார். 

ஆனால் அவர் விலை அதிகம் என்றார். கடைசியாக கார்னகி 450; மில்லியன் டாலருக்கு விற்பனை செய்து முடித்தார்.

ஒரு காலத்தில் பழங்களை வாங்கி விற்பனை செய்த ஆண்டரூ கார்னகி, இன்று உலகத்தின் மிகப் பெரிய பணக்காரர். அவருடைய ஓர் ஆண்டின் ஓய்வூதியம் 150 மில்லியன் டாலர்.

'உலகின் பெரிய பணக்காரனாக என்னை மாற்றியது நான் படித்த புத்தகங்கள்தான். எனக்கு அடுத்த பிறவி என்ற ஒன்று இருந்தால் அதில் நான் ஒரு நூலகராக பிறக்க விரும்புகிறேன் " என்று அடிக்கடி சொன்ன ஆண்ட்ரூ கார்னகி 60 மில்லியன் டாலர் செலவில் 3000 நூலகங்களை அமைத்தார்.  
என்னை மாற்றியது என் புத்தகங்கள் (Image Courtesy:pioneersofbearddom.com, famouspeople.com)

அது உங்களைத் தூங்கவிடாது


அறிவியல் காந்தி மகான்

" டிக்கட் டிக்கட்........ எங்க போகணும் சார் ? " பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் கண்டக்டர் கேட்கும் முதல் கேள்வி ?

எந்த ஊருக்குப் போக வேண்டும் என்று சொன்னால்தான் அவர் டிக்கட் தருவார். அப்போதுதான் உங்கள் பஸ் பயணம் உறுதி ஆகும்.

"தெரியாது" என்று நீங்கள் சொன்னால், கண்டக்டர் டபிள் விசில் ஊதிவிடுவார். நீங்கள் பஸ்ஸை விட்டு இறங்க வேண்டிவரும். உங்கள் பயணம் 'பணால்' ஆகிவிடும்.

பயணம் செய்யும்போது போகும் ஊரை சரியாக சொல்லும் நாம், வாழ்க்கையில் மட்டும் போய்ச் சேரும் இடத்தை பாதி வாழ்க்கை முடியும்வரை கூட தீர்மானிக்க முடியாமல் திண்டாடுகிறோம்.

எந்த கோட்டையைப் பிடிக்க இந்த பயணம் என்று தெரியாததால்தான் நிறையபேர் வாழ்க்கையையே கோட்டை விடுகிறார்கள்.

எதை நோக்கி நமது வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறோம் என்பதை திட்டமிட வேண்டும். நாளைக்கு என்ன செய்யப் போகிறோம் என்று நாம் ஒவ்வொருவரும் யோசிக்கிறோம்.

இதுவும் திட்டமிடுவதுதான்.

உங்கள் மனம்தான் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை நடத்தும் கண்டக்டர்;. எதை நோக்கி உங்கள் பயணம் என்பதை கண்டக்டரிடம்; சொல்ல வேண்டும்.

பைபிள் கூட அதைத்தான் செல்லுகிறது.

"தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும";

அதன் பொருள் என்ன ?

உங்கள் மனதிடம் கேட்க வேண்டும். உங்களுக்கு என்னென்ன தேவை, என்று பட்டியல் போட்டு சொல்ல வெண்டும். அது அப்படியே தன் மூளையில் பதிவிறக்கம் செய்து கொள்ளும். அடிக்கொரு தடவை அது உங்களுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

உங்களுக்கு தேவையானதை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும்வரை அது உங்களைத் தூங்கவிடாது, சீண்டிக்கொண்டே இருக்கும்.

அதைத்தான் நமது அறிவியல் காந்தி மகான் அப்துல்கலாம் அவர்கள் சொன்னார்.

"கனவு காணுங்கள்",  கனவு என்பது தூங்கும்போது காண்பதல்ல.  உங்களை தூங்க விடாமல் செய்வதுதான் கனவு.

தூங்காமல் கனவு காண்பது எப்படி என்று நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

மனதிடம் சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயரத்தைத் தொட வேண்டும் என்று. அது உங்களுக்கு சொல்லித் தரும், தூங்காமல் கனவு காண்பது எப்படி என்று.

உங்கள் கடிகாரத்தில் அலாரம்  வைத்துவிட்டால் போதும். உங்கள் வேலை முடிந்தது. சரியான நேரத்திற்கு அது உங்களை எழுப்பி விட்டுவிடும்.  தூங்க விடாது.

மனது என்னும் கடிகாரத்திற்கு சாவி கொடுத்துவிட்டால் போதும். வெற்றி இலக்கை அடையும் வரை அது உங்கள் பிடறியைப் பிடித்து தள்ளிக்கொண்டே போகும்.

மனம் என்பது உங்களின் நம்பிக்கையான ஜீபூம்பா வேலைக்காரன் என்கிறார், அர்னால்ட் பென்னட் அமெரிக்காவின் அசத்தலான எழுத்தாளர்.

"ஹவ் டு லிவ் 24 அவர்ஸ் எ டே" என்ற புத்தகத்தை எழுதியவர், சர்வ தேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்ட புத்தகம்.

நீங்கள் விரலசைத்தால்; போதும், செய்து முடிக்க சித்தமாயிருக்கிறது உங்கள் மனம் என்னும் ஜீபூம்பா.

மாதம் ஒரு லட்சம் வருமானம் வேண்டும், கேளுங்கள்.

படகு மாதிரி கார் வேண்டும், கேளுங்கள்.

கடல் மாதிரி வீடு வேண்டும், கேளுங்கள்.

ரதி மாதிரி பெண் வேண்டும், கேளுங்கள்.

மிகவும் எளிமையான தமிழ்ப் பழமொழி கூட இதைச் சொல்லுகிறது.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

குழந்தைகள் பேசத் தொடங்கும் முன் கேட்பதன் அடையாளம்தான் அழுகை.


Image Courtesy:Thanks to zeenews.india.com & thementalclub.com

Thursday, April 7, 2016

21 வயதில் 360 கோடி ரூபாய் கம்பெனி - இந்தியரின் மாயாஜாலம்

ரித்தீஷ் அகர்வால்

ரித்திஷ் அகர்வால் என்ற இளைஞர், ஒரிசா மாநிலத்தின் மண்ணின் மைந்தர்.

ரித்திஷ் அகர்வாலுக்கு இன்று (2015) சரியாக 21 வயது. தனது 21 வயதிலேயே உலகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறாh.;

ரித்திஷ் அகர்வால். இன்று உலகம் முழுவதும் உலாவரும் வரும்  பெயராகிவிட்டது ரித்திஷ்;.

உலகிலேயே இளம் வயதில் ஒரு நிறுவனத்திற்கு தலைமை செயல் நிர்வாகி ஆனவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆகிறார்.

விட்டலாச்சாரியாவின் மாயாஜாலப் படங்களைப் போல ரித்திஷ்’ன் சாதனைகள் திகிலூட்டக் கூடியவைகளாக உள்ளன.

பால்மணம் மாறாத, தனது எட்டாவது வயதிலேயே வெற்றிகரமாக சாப்டவேர் எழுதி அனைவரையும் மிரட்டினார்.

தனது 14 வயதில் சுய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அநேகருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்;.

17 வது வயதில் தொழில் தொடங்கினார். அவர் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் 'ஓயோ ரூம்ஸ்" ;அடுத்த நான்கே ஆண்டுகளில், ' ஓயா ரூம்ஸ் ன் சந்தை மதிப்பை, ஒரு கோடி அல்ல, இரண்டுகோடி அல்ல, 360 கோடியாக உயர்த்தி இமாலய சாதனையை எட்டிப் பிடித்தார்.

பத்து நகரங்களில் 200 ஹோட்டல்களில் தனது தொழிலைத் தொடங்கிய 'ஓயோ ரூம்ஸ்" 2015 ன் முடிவில் 25 நகரங்களில் 10000 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் கொண்ட நெட்ஒர்க்காக வளரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சர்வதேச அளவில் மாணவராக இருக்கும்போதே தொழில் முனைந்ததற்கான விருது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமா ? உலகத்தின் மிகக் குறைந்த வயது தலைமைச் செயல் அலுவலருக்கான விருதும் அவரைத் தேடி வந்துள்ளது.

அவர் தொழில் தொடங்குவதற்கான முதலீட்டைக் கொடுத்தது நாங்கள்தான் என்று பெருமையாகக் குறிப்பிடுகிறார்கள், வென்ச்சர் என்னும் நிறுவனத்தின் சொந்தக்காரர்கள்.

ரித்திஷின் 16 வது வயதில் அவருக்கு பயற்சி தந்த பெருமையை தட்டிச் செல்வது டாட்டா ஆராய்ச்சி நிறுவனம்.

ரித்திஷின் அத்தனை சாதனைகளுக்கும் பின்புலத்தில்; வெளிச்சம் படாமல் இருக்கும் அவருடைய  பெற்றோர்களைப் பாராட்ட வேண்டும்.

நான்காம் வகுப்பு படிக்கும் வயதில் தானாக சாப்ட்வேர் எழுதினார் என்றால் அப்படிப்பட்ட கல்வியை அளித்த அவருடைய பெற்றோர்களைப் பாராட்ட வேண்டும்.

இளமையில் கல் என்று சொன்ன ஒளவையாரும், பெற்றோர்கள்தான்  முக்கியமான ஆசிரியர்கள் என்று 'ரிச் டாட் புவர் டாட்" எழுதிய ராபர்ட் டி கியோஸ்கியும் 'கேட்ச் தெம் எங் அண்ட் டீச் தெம்" என்னும் ஆங்கிலப் பழமொழியும் நம் நினைவுக்கு வருகிறது.

21 வயதில் உலக சரித்திரம் படைத்து இந்திய நாட்டீற்கே பெருமை சேர்த்திருக்கும் ரித்திஷ்,  இந்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.

நான்கே ஆண்டுகளில் ஒரு நிறுவனம் 360 கோடியைத் தனது சந்தை மதிப்பாக உயர்த்தி இருக்கிறார் என்றால், அதற்குப் பின்னால் ரித்திஷின் உழைப்பை நம்மால் உணர முடிகின்றது.

தனது 17 வது வயதில் தனது சொந்தத் தொழிலைத் தொடங்கியிருக்கும்; ரித்திஷ் ஒரு  உலகத்தின் முதல் குழந்தை முதலாளி. (அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படி 18 வயதுக்கு உட்பட்டோர் குழந்தைகள்)

( ஆதாரம்: தி ஹிந்து நாளிதழ், ஏப்ரல் 29, 2015 )

Image Courtesy: Google, :financialexpress.com,

ஒரு மெக்கானிக் மெகா மில்லியனர் ஆன கதை



ஹென்றி போர்ட்

டெட்ராய்ட் என்னும் ஊருக்கு அருகாமையில் ஒரு கிராமத்தில் ஒரு ஐரிஷ் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி வசித்து வந்தார்.

1863 ம் ஆண்டில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஹென்றி போர்ட் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

ஹென்றியை பொறுப்பாக பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார் அவருடைய அப்பா.

ஹென்றிக்கு பள்ளிப்படிப்பு ஒத்துவரவில்லை. தனது 15 வது வயதில் வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் என்று முடிவு செய்து பள்ளியைவிட்டு வெளியேறினான்.

எங்காவது வேலை கிடைக்குமா என்று தேடினான். ஒரு மெக்கானிக் ஷெட் வைத்திருந்தவர் ஒரு நாளைக்கு 2.5 டாலர் கூலி தருவதாக ஹென்றியை வேலைக்கு வைத்துக் கொண்டார்.

மெக்கானிக் ஷெட்டின் கூலி ஆளாக சில ஆண்டுகள் ஓடியது. இந்த காலகட்டத்தில் ஹென்றி உள்ளுரிலேயே ஒரு லட்சணமான பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொண்டான்.

ஒரு நாள் உள்ளுர் செய்தித் தாளில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்திதான் ஹென்றியின் அதிர்ஷ்ட தேவதையாக அமையப் பொகிறது என்று யாருக்கும் தெரியாது.

'குதிரை இல்லாத வண்டி" என்ற தலைப்பில் அந்த செய்தி வெளியாகி இருந்தது.

மாட்டு வண்டி, ஒட்டக வண்டி, நாய் வண்டி இப்படி பல வகை வண்டிகள் அப்போது இருந்தாலும் பொதுவாக வண்டி என்றால் அது குதிரை வண்டியைத் தான் குறிக்கும்.

குதிரை இல்லாத வண்டி செய்தியை வாசித்தார் ஹென்றி. 

ஒரு முறை வாசித்தார். இரு முறை வாசித்தார். பலமுறை வாசித்தார். அந்த செய்தி அப்படியே மனப்பாடம் ஆனது.
ஏதோ தனக்காகவே அந்த செய்தியை வெளியிட்டது போலத் தோன்றியது.
அப்படி அந்த செய்தியில் என்னதான் இருந்தது. ஒரு பிரஞ்சுக்காரர் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிபற்றிய செய்தி அது. குதிரை, ஒட்டகம் நாய் இப்படிப்பட்ட பிராணிகளுக்குப் பதிலாக ஒரு எஞ்சினைப் பயன்படுத்துவதற்காக அந்த பிரான்சு நாட்டுக்காரர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதுதான் செய்தி.

அந்த செய்தி அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அன்று முதல் இவருக்கும் தூக்கம் வரவில்லை புரண்டு புரண்டு படுத்தார். 

ஹென்றியின் கனவிலும் நனவிலும் குதிரை இல்லாத வண்டியே கடிவாளம் போடாமல்; ஓடிக் கொண்டிருந்தது.

அடுத்த சில நாட்களில் அவருடைய பண்ணையில் பயன்படுத்தப்படாமல் பரணில் கிடந்த துரு ஏறி இருந்த எஞ்சின் ஒன்றை தூசுதட்டி எடுத்தார். உட்காருவதற்குத் தோதாக குதிரை வண்டி மாதிரியே ஒரு வண்டியை செட்அப் செய்தார்.

மாடுகள் கட்டவும் அறுவடை செய்த தானியங்களை கொட்டிவைக்கவும் பயன்படுத்திய பண்ணை வீட்டை கார் ஆராய்ச்சிக் கூடமாக மாற்றி இருந்தார் ஹென்றி.

இப்போது குதிரை இல்லாத வண்டி ரெடி. ஆனால் அது ஓட வேண்டும். அதுவும் வேகமாக ஓட வேண்டும். அதுவும் குதிரையைவிட வேகமாக ஓட வேண்டும்.
பல சாதனையாளர்கள். அவர்கள் வெற்றி அடைவதற்கு முன்னால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாவது என்பது வழக்கம்தான். ஆனாலும் ஹென்றி கேவலமாக அவமானப்பட்டார். 

'பேசாம எதாவது மெக்கானிக் ஷெட்டுக்குப் போ. அஞ்சிப்பத்து கிடைக்கும். 

அதைவிட்டுட்டு குதிரை இல்லா வண்டி கழுதை இல்லா வண்டி இதெல்லாம் வேண்டாம்" என்று ஹென்றி நண்பர்கள்; புத்திமதி சொன்னார்கள்.

மேலும் கேவலப்பட்டுப்போக விரும்பாமல் ஹென்றி ஒரு மெக்கானிக் ஷெட்டில்; செட்டில் ஆனான்;

ஆனால் பகல் பூராவும்; ஷெட்டில் வேலை பார்த்தார். இரவு பூராவும் கார் எஞ்சின் ஆராய்ச்சி.

இப்படியாக எட்டு ஆண்டுகள் உருத்தெரியாமல் ஓடியது. அப்பா, ஒருவழியாய், உலகத்தின் முதல் கார் ஹென்றியின் கைவண்ணத்தில் உருவானது. 

அந்த காலகட்டத்தில் இப்படிபட்ட கார்களை பலர் உருவாக்கி இருந்தனர். அவர்கள் அவ்வப்போது பந்தயங்களை நடத்தினார்கள். 

அப்படிப்பட்ட ஒரு பந்தயத்தில் எல்லா கார்களும் மண்ணைக் கவ்வின. ஹென்றியின் கார் அனைத்து கார்களையும் ஓரங்கட்டியது. 

ஹென்றியை பார்த்து வாய்விட்டு சிரித்தவர்கள் எல்லாம் வாய்வலிக்க பாராட்டினார்கள்.  

அடுத்து என்ன ? புதிய மோட்டார் கம்பெனி தொடங்க வேண்டும். அடுத்தகட்ட முயற்சியில் இறங்கினார். இப்போது ஹென்றி ஜெயிக்கும்  குதிரை. 

' நீ நான் " என்று பணத்தை மடியில் கட்டிக்கொண்டு ஹென்றியை சுற்றி வந்தார்கள் நிறையபேர். 
 
உலகின் பிரசித்தி பெற்ற முதல் கார் கம்பெனியை தொடங்கினார்.  ' போர்டு " என்று பெயர் வைத்து போர்டு மாட்டினார், ஹென்றி போர்ட்.

'ஊரான் பிள்ளையை ஊட்டி வளத்தால் தன் பிள்ளை தானாய் வளரும்" என்ற பழமொழிக்கு உதாரணமாக வளர்ந்தது, ஹென்றியின் போர்ட் கார் கம்பெனி.
தொழிலாளர்களையும் தொழிலாளர்களையும் ஊட்டி ஊட்டி வளர்த்தார்.  நவீன எந்திரங்களை பார்த்துப் பார்த்து இறக்கினார். நிர்வாகத்தில் மனிதாபமானத்தை கூட்டினார். ஆனையை உற்பத்தி செய்து பூனை விலைக்கு விற்றார். கோடிகள் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்தது. 
ஹென்றி போர்ட்

ஒரு மெக்கானிக் மெகா மில்லியனர் ஆன கதை இதுதான்.






வா த் து மு ட் டைகளை அடைகாத்த வி ஞ் ஞா னி


தாமஸ் ஆல்வா எடிசன்
இந்தியாவில் தமிழ்நாடு மாதிரி அமெரிக்காவில் ஒஹையோ என்பது ஒரு தனி மாநிலம். அந்த பகுதியில் நான்சி என்ற ஒரு பெண்மணி வசித்து வந்தார். அவளுடைய மகனுக்கு அப்போது ஆறு வயது. நான்சி அவன் மீது தன் உயிரையே வைத்திருந்தாள்.

தன் மகன் உலகமே போற்றும் அளவுக்கு பெரிய ஆளாக வர வேண்டும் என்று விரும்பினாள். அதற்காக நான்சி எதையும் செய்ய தயாராக இருந்தாள்.

ஆனால் அவனுடைய தலை கொஞ்சம் பெரியதாக இருந்தது. உடலின் அளவுக்கு பொருந்தாதது போலத் தோன்றியது.  அக்கம்பக்கத்திலுள்ள ஜனங்கள் தாமஸ்’ஐ வேற்று கிரகத்து பையன் மாதிரி   வேடிக்கை பார்த்தார்கள். அது நான்சிக்கு கவலையாக இருந்தது.

ஒரு நாள் தாமஸ்’ஐ காணவில்லை. வீடு வாசல் தோட்டம் என்று எல்லா இடங்களிலும் வலைவீசி தேடினார்கள். தாமஸ்’ஐ கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியாக தோட்டத்தில் வாத்துக்கள் அடைத்து வைத்திருக்கும் இடத்தில் தாமஸ் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.

ஆனால் அவன் இருந்த நிலையைக் கண்டதும் நான்சி அதிர்ச்சி அடைந்தாள். எதற்காக இப்படி செய்தான் தாமஸ் என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படி என்னதான் செய்துவிட்டான் தாமஸ் ?

வாத்து முட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு அவற்றின் நடுவில் உட்கார்ந்திருந்தான்.

கவலையுடன் ' தாமஸ் ஏன் இப்படி முட்டைகளின்மீது உட்கார்ந்திருக்கிறாய் ? என்று கேட்டாள் நான்சி.

'பக்கத்து வீட்டில் முட்டைகளின் மீது கோழி அவயம் காப்பதை நீங்கள்தானே காட்டினீர்கள். அப்படி உட்கார்ந்தால்தான் குஞ்சு பொரிக்கும் என்று சொன்னீர்களே" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் தாமஸ்.

தாமஸ்’ன் அம்மாவும் உடன் இருந்த வேலைக்கார பெண்மணியும் அடக்க முடியாமல் சிரித்தார்கள்.

தாமஸ் வாத்து முட்டையை அவயம் ;காத்த சேய்தி ஊர் முழுக்க பரவியது. ஆளாளுக்கு அவரவர் கற்பனா சக்திக்கு ஏற்றார்போல வாய்வலிக்கப் பெசினார்கள்.

ஆனால் நான்சி மட்டும்  'என் மகன் எதிர்காலத்தில் பெரிய விஞ்ஞானியாக வருவான். சராசரியான குழந்தைகள் மாதிரி இல்லை என் பையன் " என்று பெருமைப் பட்டாள். 

அந்த நாள் முதல் தாமஸ் 'பெரிய விஞ்ஞானியாக மாற்றிக் காட்டுவேன்" என்ற சபதம் எடுத்துக் கொண்டாள்.

காலம் வேகமாக உருண்டோடியது. அதற்குள் தாமஸ்’க்கு எட்டு வயதானது. நாள் நட்சத்திரம் பார்த்து அவனை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள் அவன் அம்மர். அவனை விஞ்ஞானியாக ஆக்கும் முயற்சியின் முதல்கட்டம் முடிந்தது என பரவசப்பட்டாள்.

தினமும் தாமஸ் பள்ளிக்கூடம் போய்வரும்போது அவனை ஒரு விஞ்ஞானியாகவே பார்த்தாள். கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு  மாதங்கள் முடிந்தது.

அந்த சமயம் ஆசிரியர் ஒருவர் தாமஸ்’ன் வீட்டிற்கு வந்தார். அவர் வேறு யாரும் அல்ல தாமஸ்,ன் வகுப்பு ஆசிரியர். 

தாமஸ்’ன் அம்மா அவரை அன்புடன் வரவேற்று மரியாதையுடன் உபசரித்தார்.
அந்த ஆசிரியர் ஒரு வித்தியாசமான மனிதர். அவருக்கு எதையும் மறைத்துப் பேசத் தெரியாது. மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். அவரைப்பற்றி நான்சிக்கு நன்றாகத் தெரியும்.

தன்னிடம் படிக்கும் மாணவர்களைப் பற்றிய தனது கருத்துக்களை அவர்களுடைய பெற்றோர்களிடம் தெரிவிப்பதை முக்கியக் கடமையாக நினைத்தார் அந்த ஆசிரியர்.

அந்த ஆசிரியர் ஏதாவது வருத்தப்படும்படியாக சொல்லிவிடப் போகிறார் என்று நான்சி படபடப்புடன் இருந்தார்.

அவர் என்ன எதிர்பார்த்தாரோ அது அப்படியே நடந்தது. தாமஸ் பற்றிய தனது அபிப்ராயத்தைக் கூறி அவரை அதிர்ச்சி அடைய வைத்தார். நான்சியின் கனவுகள் உடைந்து சுக்கு நூறாயின.

'நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க. அவன் மண்டையில் சுத்தமா படிப்பு ஏறவே ஏறாது. நான் ஒண்ணு செய்யச் சொன்னா அவன் ஒண்ணு செய்யறான். அவனுக்கு பாடம் சொல்லித்தர யாராலும் முடியாது. தயவு செஞ்சி அவனை நாளையிலருந்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாதிங்க. என்னை மன்னிச்சுடுங்க" என்று சொல்லிவிட்டு தாமஸ் அம்மா என்ன சொல்லுகிறார் என்று கூட கேட்க விரும்பாமல் வீட்டீற்கு வெளியே போனார் அந்த ஆசிரியர்;.
அந்த சமயம் அம்மாவுடன் தாமஸ்’ம் தன் ஆசிரியர் சொல்வதை கேட்டுக் கொண்டுதான் இருந்தான். அவனுக்கு ஆசிரியர் சொன்னது புரிந்ததா புரியவில்லையா என்று தெரியவில்லை.

'தாமஸ் நீ கவலைப படாதே. பள்ளிக்கூட பாடம் எல்லாம் நான் உனக்கு சொல்லித் தர்றேன். நீ பெரிய ஆளா வருவெ" என்று மகனை சமாதானப்படுத்தினாள், அவன் அம்மா.

அவள் சொன்ன மாதிரி அவனை உலமே போற்றக் கூடிய விஞ்ஞானியாக மாற்றிக் காட்டினார். 

இன்று நம் தலைக்கு மேல் எரியும் மின்சார விளக்கும், நமது டீவி பெட்டியில் ஓடிக்கொண்டிருக்கும் சினிமா உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புக்களையும் இந்த உலகுக்கு கொடையாகத் தந்தவர்தான் ஆசிரியரால் பள்ளியிலிருந்து விரட்டப்பட்ட சிறுவன்: வாத்து முட்டைகளின் மீது அடைகாத்த சிறுவன்.

அந்த சிறுவன்தான் தாமஸ் ஆல்வா எடிசன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?
தாமஸ் ஆல்வா எடிசன் 

Image Courtesy: nilsum.com, hellohidoz.com