Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, December 5, 2014

பெரியார் வைகை



பெரியார் வைகை

பகுதி - 2

INTERLINKING OF RIVERS


கூடுதலான நீர்வரத்துள்ள ஆறுகளை வறண்ட ஆறுகளுடன் இணைத்து வறட்சியான நிலப் பரப்பையும் அப்பகுதி மக்களையும் மேம்படுத்துவது இந்தியாவிற்கு புதிதல்ல.

தமிழ்நாட்டில் பெரியார் பரம்பிக்குளம் ஆளியார், கர்நூல் கடப்பா கால்வாய், தெலுங்கு கங்கை திட்டம், வட இந்தியப் பகுதியில் ராவி பீயஸ் சட்லெஜ் - இந்திராகாந்தி நகர் திட்டம் ஆகியவை இந்த வகை இணைப்பு திட்டங்கள்தான்.

கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், மெக்சிகோ, ஸ்ரீலங்கா, சைனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் இது புதிதல்ல.

பெரியார் - வைகை இணைப்புத் திட்டம்;:

பெரியார் நதியை வைகை நதியுடன் இணைத்தது 19 ம் நூற்றாண்டின் செயல் திட்டம்.

மேற்கே ஓடும் இந்த ஆற்றை கிழக்குப் பக்கம் திருப்பி 1740 மீட்டர் நீள டன்னல் மூலம் மலைப் பகுதியைக் கடந்து வைகை பாசனப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

1895 ல் தொடங்கியது இந்தத்திட்டம். திட்ட முடிவில் இதன் பாசனப்பரப்பு  57,923  எக்டராக அதிகரித்து.

ஒரு மின் உற்பத்திக் கேந்திரம் ஒன்றையும் பரிசாகத் தந்தது.
பரம்பிக்குளம் ஆளியாறு இணைப்புத் திட்டம்;

சேலக்குடி ஆற்றுப்படுகை, பாரதப்புழா, மற்றும் காவேரி  ஆற்றுப்படுகைகளை ஒன்றாக இணைத்தத் திட்டம் இது.

தமிழ் நாட்டின் கோவை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தின் சித்தூர் மாவட்டமும் இதனால் 1,68,000 எக்டர் பாசனம் பெறுகின்றன.

இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நான்கு மின் உற்பத்தி நிலையங்கள் அளிக்கும் மின்சாரம் 185 மெகாவாட்
.
இந்த திட்டம் இரண்டாவது மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்களின் உபயம்.

கர்நூல் கடப்பா கால்வாய் இணைப்புத் திட்டம்;

ஒரு தனியார் நிறுவனத்தின் 1863 ம் ஆண்டு முயற்சி இது.

கிருஷ்ணா நதியின் மிகையான நீரை பெண்ணாற்றிற்கு கொண்டுவந்தத் திட்டம் இது.

8.33 மீட்டர் உயரத்திற்கு ஒரு நீர்தேக்க அணையும் 304 கிலோமீட்டர் கால்வாயும் அமைத்து 52,746 எக்டர் நிலப் பரப்பிற்கு தற்போது பாசனம் அளிக்கிறது
.
1882 ம் ஆண்டு அரசு இத்திட்டத்தை கையகப்படுத்திக் கொண்டது.





(இன்னும் வரும்)

No comments:

Post a Comment