Select Your Favorite Topic! Enjoy Reading!!

Tuesday, January 14, 2014

தென்னை குரும்பை உதிர்வுக்கு காரணங்கள் 9 BUTTON SHEDDING OF COCONUT


கலப்பையும் மண்வெட்டியும்தான் உலகத்திற்கு சோறு போடுகின்றன – பலகேரியன் பழமொழி


தென்னை 
COCONUT 

தென்னை 
குரும்பை உதிர்வுக்கு 
காரணங்கள்

BUTTON SHEDDING 
OF COCONUT

தென்னையில் மிகப்பெரிய பிரச்சினை குரும்பை உதிர்வு.

குரும்பை உதிர்வுக்கான காரணங்ளைத் தெரிந்துகொள்ளாமல் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம்.

இங்குகொடுக்கப்பட்டுள்ள செய்திகள் நிச்சயமாக உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுசொல்லும்.
அந்த 9காரணங்கள்
கீழ்கண்ட 9 காரணங்கள் குருமபை உதிர்வுக்கு காரணமாகின்றன.

1.     மண்ணின் அதிக கார, அமில நிலை,
2.     வடிகால் வசதி இல்லாதது,
3.     கடுமையான வரட்சி
4.     மரத்தின் மரபியல் பண்பு
5.     மகரந்தச்சேர்க்கைக் குறைபாடு
6.     ஊட்டச்சத்துக் குறைவு
7.     மலட்டுத்தன்மை
8.     ஊக்கிகள் பற்றாக்கறை
9.     பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதல்

இவற்றுள் எந்த காரணத்தால் உங்கள்தென்னையில் குரும்பைகள் உதிர்கின்றன ?

குரும்பை என்றால் பெண்பூ

தென்னையில் குரும்பை என்றால் பெண்பூ. தென்னை மாதம் ஒரு பாளை தள்ளும். இந்த பூம்பளையில் ஒவ்வொரு பூந்தண்டின் கிளையிலும் அடிப்பாகத்தில் ஒருபெண்பூ இருக்கும். அதற்கு மேற்புறம் ஆண்பூக்களும் இருக்கும். ஆக பெண்பூ  உதிர்வுதான் தென்னையின் பெரிய பிரச்சனை.


களர்நிலத்தில் ஜிப்சம் இடுங்கள்

களர் நிலத்தில் தென்னைகள் மரம் சிறுத்து இருக்கும். ஓலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறமாக இருக்கும்.

இப்படிப்பட்ட மரங்களில் குரும்பை உதிர்வு அதிகமாக இருக்கும்.

இனை சரிசெய்ய ஒரு மரத்திற்கு 10 கலோ ஜிப்சம் இடவேண்டும்.

காரஅமிலநிலை 5.2 முதல் 8.6 வரை உள்ள மண்ணில் தென்னை நன்கு வளரும்.

உவர் நிலத்தில் சுண்ணாம்பு போடுங்கள்

 உவர்நிலத்தில் சாம்பல்சத்து குறைவாக இருக்கும். இதனால் குரும்பைகள் உதிரும்.

இதற்கு ஒரு மரத்திற்கு 10 கலோ வீதம் சுண்ணாம்பு இடவேண்டும்.

காரஅமிலநிலை 5.2 முதல் 8.6 வரை உள்ள மண்ணில் தென்னை நன்கு வளரும்.

தொழுஉரம் இடுங்கள்

தண்ணீர்தேங்கும் களிமண்பாங்கான நிலங்களில் வளர்ந்துள்ள தென்னைகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படும்.

இதனால் வேர்கள் அழுகிவிடும்

இந்த மண்ணில் உள்ள சல்பைடு, இரும்பு மற்றும் அலுமினிய கூட்டுப்பொருட்கள் தென்னைக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அத்துடன் இதர சத்துக்கள் கிடைப்தையும் தடுக்கும்.
இதனால்  அதிக அளவு குரும்பைகள் உதிரும்.

களிமண் நிலங்களில் நரை வடிகட்டி வடிகால் வசதி அளிக்கவேண்டும்.

காற்றோட்டம் ஏற்படுத்தவேண்டும்

நிலத்திற்கு போதுமான தொழுஉரம் இடுவதன்மூலம் இதனை சரிசெய்யலாம்.

கோடையில் பாசனம் கொடுங்கள்

தண்ணீர் தட்டுப்பாட்டினால், கோடைகாலத்தில் தென்னையில் பாளைகள் உருவாகாது.

அவை உருவானாலும் கருகிவிடும்

குரும்பைகள் வளர்ச்சி அடையாமல் கொட்டும்

சூலகத்திலும் ஈரப்பதம் இல்லாததால் கருவுறாமல் குருமபைகள் உதிரும்.

எனவே  கோடைகாலத்தில் .நீர் தட்டுப்பாடின்றி பார்த்துக் கொள்ளவேண்டும்.
  
வேறு மரங்ளை நடுங்கள்

சில மரங்களில் பரம்ரை குணங்களினால் குரும்பைகள் கொட்டும்.

இதனை சரிசெய்ய முடியாது.

இப்படிப்பட்ட மரங்களைவெட்டி எடுத்துவிட்டு வேறுமரங்களை நடுவதைத் தவிர வேறு வழி இல்லை.

தேனிப்பெட்டிகள்வைக்கலாம்

பருவம் அடைந்த பெண்பூக்களுக்கு சரியான சமயத்தில் மகரந்தம் கிடைக்காவிட்டாலும் கருத்தரிக்காத இளங்குரும்பைகள் உதிரும்.

தென்னையில் தேனி மற்றும் காற்றின்மூலம் அயல் மகரந்தசேர்க்கை நடைபெறுகிறது.

தென்னந்தோப்புகளில் தேனிப்பெட்டிகள் வைத்து குரும்பை உதிர்வைத் தடுக்கலாம்.

தீ ர் வு க ள்

1.     மண்ணின் அதிக கார, அமில நிலை, - ஜிப்சம் அல்லது சுண்ணாம்பு இடுதல்
2.     வடிகால் வசதி இல்லாதது, -தொழுஉரம் இடுதல்
3.     கடுமையான வரட்சி – போதுமான பாசனம் அனித்தல்
4.     மரத்தின் மரபியல் பண்பு – புதிய மரங்ளை நடவுசெய்தல்
5.     மகரந்தச்சேர்க்கைக் குறைபாடு –தேனிப்பெட்டி வைத்தல்
6.     ஊட்டச்சத்துக் குறைவு – இயறகை மற்றும் உயிர் உரங்ளை அளித்தல்
7.     மலட்டுத்தன்மை –தேனிப்பெட்டிவைத்தல்
8.     ஊக்கிகள் பற்றாக்கறை – ஊக்கிகள் தெளித்தல்
9.     பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதல் - கட்டுப்படுத்துதல்

எழுதியவர் - தேவ.ஞானசூரியபகவான்

{ xU tPL thq;f gzk; Ntz;Lk;> mjid ,y;ykhf khw;w xU ngz; Ntz;Lk;  neg;Nghypad; `py; ;}

Dear friends please write your comments

Deva.GNANASURIA BAHAVAN, EDITOR, VIVASAYA PANCHANGAM,
THEKKUPATTU, TAMILNADU, INDIA – PINCODE; 635 801


=============================================================



No comments:

Post a Comment