ஆசிரியர் பக்கம்
EDITOR'S PAGE
வலைப்பூ
நேயர்களுக்கு
வணக்கம் !
கடித எண்.1
உங்கள் குடும்பத்தைச்சேர்ந்த அனைவருக்கும் என்னடைய வணக்கமும் விசாரிப்புக்களும் !.
இந்த வலைப்பூவின் வயது 24 நாட்கள். இதுவரை 675 பேர் இந்தியா, யுனைட்டட் கிங்டம், ஜெர்மனி,யூ எஸ் ஏ, தென்கொரியா, மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து இந்த வலைப்பூவைப் பார்த்துள்ளனர்.
தமிழபேச, படிக்கத்தெரிநதோர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களோடு என்னால்பேச முடியும் ! கருத்துக்களை பரிமாறிக்கொள்ளமுடியும்! பழகமுடியும் !
கூகுள் வலைப்பூ வலைத்தளத்திற்கு நன்றி !
இந்த நூற்றாண்டின் இணையற்ற சாதனை ! சாதனம் ! இது தகவல்தொடர்பு யுகம் !
விரல்சொடுக்கும் நேரத்தில் உலகின் எந்த மூலைக்கும் எந்த ஒருசெய்தியையும் கொண்டு சேர்க்கமுடியும்.
இந்த கடிதத்தில் ‘விவசாய பஞ்சாங்கம்’ என்னும் இந்த வலைப்பூவை உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.
விவசாயிகளுக்கும் கிராமப்புற மக்களுக்காகவும் இந்த ‘விவசாய பஞ்சாங்கம்’ என்னும் இந்த கலைக்களஞ்சியம் அர்ப்பணிக்கப்படுகிறது..
இதுவரை 30 க்கும்மேற்பட்ட தலைப்புகளில் ‘‘விவசாய பஞ்சாங்கம்’
வலைப்பூவில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுவரை 30 க்கும்மேற்பட்ட தலைப்புகளில் ‘‘விவசாய பஞ்சாங்கம்’
வலைப்பூவில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான தகவல்களைத் தொகுக்கும் ஒரு கலைக்களஞ்சியம் இது.
மேம்பாட்டிற்கான, ஆக்கபூர்வமான மாற்றம் நிகழ, தகவல் பரிமாற்றத்தின் மூலம் உதவுவதுதான் இந்த வலைப்பூவின் நோக்கம்.
‘உங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவை எவை என்றுஉலகின் மிகப்பெரிய வெற்றியாளர் தாமஸ் ஆல்வா எடிசனை கேட்டபோது அவர்சொன்னார் ‘ உற்சாகம் 1 சதம் உழைப்பு 99 சதம்’ இந்த இரண்டுதான் என்வெற்றிக்குக் காரணம் என்றார்.
அதுபோல 1 சதம் தகவல் 99 சதம் ஆக்கப்பூர்மாக உற்சாகம் ‘வி. ப.’ வின் உள்ளடக்கமாக இருக்கும். விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான தகவல் மற்றும் செய்திகளை திரட்டுவதும் சேமிப்பதும்தான் ‘விப’ வின் வேலையாக இருக்கும்.
இன்னும் கணினி மற்றும் 'நெட்' - அதாவது வலைத்தளம் எட்டிப்பார்ப்போர் எண்ணிக்கைகூடவில்லை. அப்படி இருக்கும்போது உடனடியாக இந்த ஏற்பாடு உதவுமா என்றகேள்வி எழும்.
இன்னும் கணினி மற்றும் 'நெட்' - அதாவது வலைத்தளம் எட்டிப்பார்ப்போர் எண்ணிக்கைகூடவில்லை. அப்படி இருக்கும்போது உடனடியாக இந்த ஏற்பாடு உதவுமா என்றகேள்வி எழும்.
நிச்சயமாக நாளைய விதைப்புக்கான உழவுதான் இது.
தகவல் யுகம் இது. கட்டளை இட்டால்போதும் கண் இமைக்கும் நேரத்தில் காரியம் முடிக்கும், இந்த நூற்றாண்டின் இணையற்ற ‘ஜீபூம்பா’ இந்த கணினியும் வலைத்தளமும்.
இந்திய கிராமங்களில் 'நெட்' ஐ பயன்படுத்துவோர் எண்ணிக்கை ( INTERNET BROWSING ) வெறும் 6.7 சதவிகிதம் என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.
இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா ( INTERNET AND MOBILE ASSOCIATION OF INDIA ) என்ற அமைப்பின் 2013 டிசம்பர் மாதம் முடிய செய்த ஆய்வுப்படி, இந்திய கிராமங்களில் 'இன்டர்நெட்' பயன்படுத்துவோர் 730 லட்சம் பேர், அதில் தீவிரமாகப் பயன்படுத்துவோர் 490 லட்சம் பேர் .

தீவிரமாகப்பார்ப்பவர்கள் என்றால் மாதம் ஒரு முறையாவது பார்ப்பவர்கள் என்று அர்த்தம்.
2014 ஜூன் மாதத்தில் நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 850 லட்சம் பேராகவும், தீவிரமாக பயன்படுத்துவோர் 490 லட்சமாகவும் உயரும் என்று இந்த ஆய்வு எதிர்பார்க்கிறது.
இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் 'பிசினஸ் ஸ்டாண்டர்ட்,' ( BUSINESS STANDARD )ஆங்கிலப்பத்திரிக்கையில் 15.01.2014 அன்று செய்தியாக வெளிவந்துள்ளது.
இந்த சமயத்தில் செல்போன் பேசுவோர் எண்ணிக்கை எப்படி 'குபீர்' என்று உயர்ந்தது என்று யோசிக்க வேண்டும்.
அதுபோலவே 'நெட்' பயன்;படுத்துவோர் எண்ணிக்கையும் திடீர் என திடுக்கிடும் அளவுக்கு உச்சாணிக்கு போய் உட்கார்ந்துவுடும்.

இந்த செய்தியில் இன்னொன்றையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
கணினி Kற்றும் நெட் அல்லது வலைத்தளத்தை எப்படி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என்று விழிப்புணர்வும் பயிற்சியும் தரவேண்டும் என்பதுதான்அது.
கணினி Kற்றும் நெட் அல்லது வலைத்தளத்தை எப்படி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என்று விழிப்புணர்வும் பயிற்சியும் தரவேண்டும் என்பதுதான்அது.
வலைத்தளத்தில் வலம் வருபவர்கள் பெரும்பாலும் மாநில மொழியில்தான் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும் இந்த ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதனால் விவசாய பஞ்சாங்கம் விவசாயிகளுக்கும் நிச்சயமாக பெருமளவு உதவியாக இருக்கும் என்பதில் எவ்விதமான சநதேகமும் ,இல்லை.
சரி என்னவெல்லாம் இந்த வலைப்பூவில் இடம்பெறும்?
இன்றைய நிலையில் விவசாயம், பெண்கள், குழந்தைகள், இயற்கை வளங்கள், பொதுத்தகவல்கள் என்ற ஐந்து தலைப்புகளில் தகவல்களைத் தொகுக்க உத்தேசம்.
உருவம், உள்ளடக்கம், உத்தி ஆகியவற்றை உயோகிப்பாளர்களின் தேவைக்கு ஏற்ப ‘விப’ தன்னை மாற்றிக் கொள்ளும்.
‘விப’ தளத்தில் வலை வீசும் நண்பர்களே, மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.
தேவ.ஞானசூரியபகவான்
ஆசிரியர், விவசாய பஞ்சாங்கம்
No comments:
Post a Comment