பழப்பயிர் சாகுபடி
FRUIT CROPS
அல்போன்சோ
ஏற்றுமதிக்கு ஏற்ற
மா ரகம்
MANGO VARIETY
SUITABLE FOR
EXPORT
SUITABLE FOR
EXPORT
நாரதர் கொண்டு வந்து கொடுத்த மாம்பழம்தான் ஞானப்பழம். அதற்குத்தான் முருகனுக்கும் விநாயகருக்கும் போட்டி வைத்தார் சிவபெருமான். போட்டியில் தோற்று முருகன் கோபமாய் சென்றமர்ந்த ஊர்தான் பழனி.
புராண இதிகாச காலங்களிலிருந்து இந்தியவிற்கு அறிமுகமானது மாம்பழம்.
இதற்குக் காரணம், மா, இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்டது.
முக்கனிகளில் மூத்தகனி என்னும் பெருமைக்கு உரியது மா.
இதன் சாகுபடி இந்தியர்களுக்கு 4000 ஆண்டுகளாக அறிமுகம். சுமார் ஆயிரம் ரகங்கள் இங்கு புழக்கத்தில் இருந்தன.
மா ஒரு வெப்ப மண்டலப் பயிர்.
கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 400 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகள் மற்றும் 21 முதல் 27 டிகிரி வெப்ப நிலையும் 250 முதல் 2500 மிமீ வரை மழை பெரும் பகுதிகள் ஏற்றவை,
குறைந்தது 2 மீட்டர் மண் கண்டமும், கார அமில நிலை 5.5 முதல் 7.0 ம் நல்ல வடிகால் வசதியும் கொண்ட எல்லா மண் வகைகளிலும் நன்கு வளரும். களிமண், கரிசல்மண், உவர் மண், வடிகால் வசதி இல்லா மண். பாறை மற்றும் சுக்காம் பாறை உள்ள மண்; ஆகியவை ஏற்றவை அல்ல.
ரகங்கள் (VARITIES)
நீலம் (அ) காசாலட்டு (NEELAM)
ஆரஞ்சு மஞ்சள் நிறம், 200 முதல் 250 கிராம் எடை, வட்ட வடிவம் (அ) நீள்வட்ட வடிவம், லேசான புளிப்பு, அருமையான சுவை, அதிக மகசூல், அத்துடன் தென்னிந்திய வியாபாரிகளை சுண்டி இழுக்கும் கவர்ச்சி மற்றும் ஆண்டு தவறாமல் காய்க்கும் பின்பருவ ரகம்.
பெங்களுரா (அ) கல்லாமை (அ) கிளிமூக்கு (அ) தோத்தாபுரி (BANGALURA)
பச்சை கலந்த மஞ்சள் ஆரஞ்சு நிறம், வைத்து விற்க ஏற்ற தன்மைரூபவ் 400 முதல் 500 கிராம் எடைரூபவ் அதிக மகசூல், தென்னிந்தியாவில் பெரும் பரப்பில் இடம் பிடித்துள்ள பெருமை, ஆண்டு தவறாமல் காய்க்கும் பண்பு கொண்ட நடுப்பட்ட ரகம்,
பங்கனபள்ளி (BANGANAPALLI)
பனேஷன், ராஜபாளையம் சப்பட்டை, சபேத் ஆகியவை இதன் வேறு பெயர்கள், ஆந்திரப்பிரதேசத்தின் செல்ல ரகம், பெரிய சைஸ், 400 முதல் 500 கிராம் எடை, தங்கமாக பளபளக்கும் நிறம், மென்மையான தோல், நீளவட்ட சப்பையான வடிவம், நடுத்தர மகசூல், நார் இல்லா தசைரூபவ் நாவில் நீர் சொட்ட வைக்கும் மணம் அத்தனைக்கும் சொந்தமானது, பங்கனபள்ளி.
அல்போன்சோ (ALPHONSO)
ஏற்றுமதிக்கு ஏற்றது, கவர்ச்சிகரமான பிங்க் நிறம், 250 முதல் 300 கிராம் எடை, அட்டகாசமான சுவை,பதப்படுத்துவதற்கு பொருத்தமானது இந்த ரகத்தின் இதர பெர்கள். குண்டு, காதர்,பதாமி மற்றும் ஹபியூஸ்.
சின்ன சுவர்ணரேகா (அ) செந்தூரம் (CHINNASWANAREKA)
மீடியம் சைஸ், 250 முதல் 30 கிராம் எடை, இரண்டாண்டுக்கு ஒரு முறை காய்க்கும் தன்மை, நீள்வட்ட வடிவம், கருநீலம் கலந்த சிவப்பு நிறம், முன்பருவத்தில் நடுத்தர மகசூல் தரும் ரகம்
ருமானி (RUMANI)
எக்கச்செக்கமான மகசூல், பேப்பர் மாதிரி மெல்லிய தோல், செம்மை படர்ந்த மஞ்சள் நிறம் சிறிய கொட்டை, கற்பூர வாசம் மெல்லியதாய் வீசும் சுவை, வைத்து விற்றாலும் தாக்குப் பிடிக்கும் தன்மை (KEEPING QUALITY), ஆப்பிள் மாதிரி தோராய வட்ட வடிவ பழங்கள் இதன் சிறப்பு அம்சம்.
மல்கோவா (MULGOA)
நீள்வட்ட வடிவ பெரிய சைஸ் 400 முதல் 500 கிராம் பழங்கள்,தரம்ரூபவ் மணம்,சுவை அத்தனையும் கொண்ட பின் பட்டத்தில,; இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிறைய காய்ப்பு, மகசூல் தர வெட்கப்படும் ரகம் (SHY BEARING)
பி கே எம் 1 (P K M 1)
சின்னசுவர்ணரேகா மற்றும் நீலம் ரகங்களை சேர்த்த வீரிய ஒட்டு ரகம் (HYBRID VARIETY) 250 முதல் 300 கிராம் எடை கொண்ட, கூர்மையான மூக்கு கொண்ட நீண்ட பழங்கள் (OBLONG) நடுப்பட்ட ரகம்
பி கே எம் 2 (P K M 2)
நீலம் மற்றும் மல்கோவா ரகங்களை சேர்த்த வீரிய ஒட்டு ரகம், நீண்ட ஓவல் வடிவம், 650 முதல் 700 கிராம் எடை கொண்ட, வெளிர் ஆரஞ்சு நிற, பெரிய பழங்கள், அழுத்தமான தசை, அருமையான மணம், அதிகமான ரசம் (JUICY)கொண்டது, நீலம், பெங்களுராவை விட அதிக மகசூல் தரும்.
பையூர் 1 (PAIYUR 1)
பழங்கள் நடுத்தர சைஸ், 150 முதல் 200 கிராம் எடை,குட்டை வடிவ மரங்கள் (DWARF VARITIES) அடர் நடவு (DENSITY PLANTING) சாகுபடிக்கு ஏற்றது, ஒரு எக்டரில் 400 மரங்கள் வரை நடலாம், தர்மபுரி மாவட்டம் கருக்கம்சாவடி கிராமத்தின் நீலம் ரகங்களிலிருந்து பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தால் தேர்வு செய்யப்பட்ட ரகம் (SELECTION VARIETY)
No comments:
Post a Comment