ஜி.கல்யாணி
இயற்கை
விவசாயம்
ORGANIC
FARMING
ORGANIC FERTILIZER CUM PESTICIDE
ஒன்று உரமாக
இன்னொன்று பூச்சிக்கொல்லியாக
நாமே தயார் செய்து கொள்ளலாம்
இயற்கை
விவசாயம்
ORGANIC
FARMING
பஞ்சகாவ்யம்
ORGANIC FERTILIZER CUM PESTICIDE
இது டபிள்சிம் மாதிரி
ஒரே சமயத்தில் இரண்டு வேலை
ஒன்று உரமாக
இன்னொன்று பூச்சிக்கொல்லியாக
நாமே தயார் செய்து கொள்ளலாம்
இதனை உரமாகவும் பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
உற்பத்தி செய்யும் விளைபொருளில் விஷம் (FOOD FREE FROM CHEMICALS) சேர்க்காது.
பஞ்சகவ்யம் தயாரிப்பது சுலபம்.
இதனை தயாரிக்க உபகரணங்கள் இயந்திரங்கள் ஏதும் தேவையில்லை.
இதற்கு ஆகும் செலவு குறைவு
பூச்சி நோய்களையும் கட்டுப்படுத்தும்
சாகுபடி செலவை கணிசமாகக்குறைக்கும்
பயிர் மகசூலை மற்றும் லாபத்தைக்கூட்டும்
ஒரு ஏக்கருக்குத் தேவையான பஞ்சகவ்யம் தயாரிக்க தேவைப்படும் பொருட்களும் அளவும்
1. பசும்நெய் 100 கிராம்
2. பசுங்கோமியம் 1 லிட்டர்
3. தயிர் 0.5 லிட்டர்
4. பசுஞ்சாணம் 1 கிலோ
5. பால் 0.5 லிட்டர்
6. கனிந்த வாழைபழம் 2
7. இளநீர் 0,5 லிட்டர்
பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை
சாணத்தை நெய்யுடன் நன்கு பிசைந்துகொள்ளுங்கள்
அதனை ஒரு மண் பானையில் போட்டு அதன் வாயினை ஒரு துணியினால் கட்டி மூடுங்கள்.
அந்த பானையை ஒரு நிழலான இடத்தில் வையுங்கள்.
நான்காம் நாள் இதர பொருட்களையும் அத்துடன் சேர்த்து ஒரு குச்சியினால் நன்கு கலக்கவும்.
தனியாக ஈஸ்டுடன் 1 லிட்டர் இளஞ்சூட்டு நீர் சேர்;த்து 20 நிமிடம் வைத்திருந்து அந்த கலவையுடன் சேர்க்கவும்.
இந்த மண்பானையை 20 நாட்கள் நிழலில் வைக்கவும்.
தினமும் காலையும் மாலையும் ஒரு குச்சியால் பானைக்குள் இருக்கும் கலவையை 30 சுற்றுக்கள் வலப்புறமும் 30 சுற்றுக்கள் இடப்புறமும் சுற்றுங்கள்
மறவாமல் பானையின் வாயை மூடுமாறு ஒரு துணியினால் கட்டி வைக்கவும்.
21 ம் நாள் பஞ்சகவ்யம் ரெடி
300 மில்லி பஞ்சகவ்யாவை 10 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி தேவைக்கு ஏற்ப பயிர்களின்மீது தெளிக்கலாம்.
ப.கா. வை பாசன நீருடனும் கலந்து தெளிக்கலாம்.
பஞ்சகவ்யம் தெளித்த பயிர்கள் கருகரு' வென வளர்வதுடன் பூச்சி நோய்களையும் தாங்கும் சக்தியையும் பெறுகின்றன. மேலும் இது மண்ணின் பவ்தீகத்தன்மையை வளப்படுத்தும். ப.க. தெளித்து உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வித இடைஞ்சலும் செய்யாது.
இது குறித்த விளக்கம் அல்லது விவரம் பெற கீழ்கண்ட முகவரியை அணுகவும் தொடர்பு கொள்ளவும்.
பூமி இயற்கைவள ஆய்வு மற்றும் பயிற்சி மையம், தெக்குப்பட்டு, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு - பின்; 635 801, தொலைபேசி: 8526195370
இமெயில் :bhumii.trust@gmail.com, gsbahavan@gmail.com
பூமி இயற்கைவள ஆய்வு மற்றும் பயிற்சி மையம், தெக்குப்பட்டு, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு - பின்; 635 801, தொலைபேசி: 8526195370
இமெயில் :bhumii.trust@gmail.com, gsbahavan@gmail.com
1.
No comments:
Post a Comment