Select Your Favorite Topic! Enjoy Reading!!

Monday, December 1, 2014

கள்ளிக்கென்ன வேலி போடி தங்கச்சி - 1 -CACTUS AS CATTLE FEED IN BRAZIL



பிரேசில் நாட்டில்  
எனது அனுபவம்

கள்ளிக்கென்ன வேலி போடி தங்கச்சி - பகுதி .1

CACTUS AS CATTLE FEED IN BRAZIL


இது ஒரு சினிமா பாட்டு. படம், அவள் ஒரு தொடர்கதை. மறக்க முடியாத படம்.

முள்ளிருக்கும் சப்பாத்தியே ஒரு வேலிச்; செடிதான். அதற்கு வேலி தேவை இல்லை. இதுதான் அதற்கு அர்த்தம்.

முள்ளில்லாத சப்பாத்திக்கு முள்ளிருக்கும் சப்பாத்தியை வேலியாக போட்டிருக்கும் அதிசயத்தை சமீபத்தில் பிரேசில் நாட்டில் பார்த்தேன்.




எனக்கு உடனடியாக என் காதுகளில் ஒலித்தது, கள்ளிக்கென்ன வேலி போடி தங்கச்சி !

சப்பாத்திக் கள்ளி வறட்சியின் அடையாளம். நம்ம ஊரில். 

அது அட்டகாசமான மாட்டுத் தீவனம், பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியில்.

முள்ளைப் பொசுக்கிவிட்டு சப்பாத்திக்கள்ளியை மாடுகளுக்கு போடும் பழக்கம் . 1915 ம் ஆண்டிலேயே அங்கு இருந்தது.

1937 ம் ஆண்டு வந்த பஞ்சம் பிரேசிலை யோசிக்க வைத்தது. விளைவு இன்று திரும்பிய பக்கம் எல்லாம் சப்பத்திக் கள்ளிதான். 

உலகிலேயே இன்று அதிக பரப்பில் சப்பாத்திகள்ளி சாகுபடி செய்யும்  நாடு பிரேசில்தான்.

பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியின் முக்கிய உற்பத்தி பாலும் இறைச்சியும்தான்.

மட்டிறைச்சி உற்பத்தியில் உலகில் மூன்றாவது இடம் பிரேசிலுக்குத்தான்.
கல்லிலே நார் உரிப்பது மாதிரி பிரேசில் சப்பாத்திகள்ளியில் பால் கறக்கிறது.


(நபார்டு வங்கி ஏற்பாடு செய்திருந்த பிரேசில் பயணத்தின் அனுபவத் திரட்டு)




No comments:

Post a Comment