Select Your Favorite Topic! Enjoy Reading!!

Monday, December 15, 2014

காய்கறிப்பயிர்களுக்கு சொட்டு நீர்ப் பாசனம் - DRIP IRRIGATION FOR VEGETABLE CROPS

காய்கறிப்பயிர்களுக்கு

சொட்டு நீர்ப் பாசனம்

DRIP IRRIGATION FOR VEGETABLE CROPS

காய்கறிப்பயிர்களுக்கு ஏன் சொட்டு நீர்ப் பாசனம் வேண்டும் ?

சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தால் கூடுதல் மகசூலும், அதிக வருமனமும் கிடைக்கும்.

பட்டனைத் தட்டினால் போதும், சுலபமான தொழில்நுட்பம்,
சிக்கனமாக தண்ணீர் பாய்ச்சலாம், அதாவது ஒரு ஏக்கருக்கு ஆகும் நீரில் 3 ஏக்கர் சாகுபடி செய்யலாம்.

அதிகமான நிலப்பரப்பில் பயிர் செய்யலாம்

எல்லா செடிகளுக்கும் சமமாக, கூடுதல் குறைவு இல்லாமல் சீரான பாசனம் அளிக்க முடியும்.

தண்ணீர் பாய்ச்ச என்று தனியாக ஒரு ஆளை நியமிக்க வேண்டாம், இதற்காக செய்யும் செலவு மிச்சம்.

தண்ணீர் பாய்ச்ச தனியாக வாய்க்கால் அமைக்க வேண்டாம், அதற்கு செய்யும் செலவு மிச்சம்.

வருஷத்துக்கு ஒருமுறை வாய்க்கால் செதுக்கும் வேலையும் மிச்சம், அதற்கான செலவும் மிச்சம்.

அந்தி சந்தி எந்த நேரத்திலும்  தண்ணீர் பாய்ச்சலாம்

அம்மா குழந்தைக்கு சோறு ஊட்டுவது போல பயிருக்கு கொண்டுபோய் வேருக்கு அருகில் தண்ணீரைக் கொடுக்கிறது.

வயல்களில் களை முளைப்பது கணிசமாகக்குறையும்.

பாசனத்திற்காக செய்யும் செலவில் 75 சதம் குறைகிறது

சொட்டு நீர்ப்பாசம் மூலம் உரம் அளிப்பதனால் சேதாரம் இன்றி பயிருக்குக் கிடைக்கிறது.

பயிர்களுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது.

பூக்கள் மற்றும் காய்கள் உதிர்வது வெகுவாகக் குறையும்.

அளவாக தண்ணீர் அளிப்பதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைகிறது.

சொட்டு நீர்ப் பாசனம் பயிர்களின் வேர்ப்பகுதியில் 60 % ஈரப்பதத்தையும் 40 % காற்றோட்டத்தையும் அளிக்கிறது.


சொட்டு நீர் உரப்பாசனம்

சொட்டு நீருடன் உரத்தைக் கலந்து கரைத்துத் தருவதுதான் சொட்டு நீர் உரப்பாசனம்.

வெஞ்சுரி உரத்தொட்டி, உரம் உட் செலுத்தும் கருவி போன்றவற்றுள், ஏதாவது  ஒன்றினைப் பயன்படுத்தி உரத்தை சொட்டு நீருடன் கலந்து கொடுக்கலாம்.

சொட்டு நீருடன் கலந்து கொடுப்பதால் பயிர்களுக்கு உரம் கூடுதல் குறைவு இல்லாமல் சீராகக் கிடைக்கிறது.

சொட்டு நீர் உரப்பாசனம் செய்வதால் உரம் வீணாவதில்லை, பயிரின் வேர்ப்பகுதிக்கு நேரடியாய் கிடக்கிறது.

சொட்டு நீர் உரப்பாசனம் பயிருக்கு சமமாக உரம் அளிப்பதால் பயிர் வளர்ச்சியும் சீராக இருக்கும்.

உரமிட ஆட்கள் தேவை இல்லை, அதற்காக  செலவும் செய்யத் தேவை இல்லை.

சொட்டு நீர் உரப்பாசனம் செய்ய, அதிக நேரம் தேவையில்லை.

தண்ணீர் கட்டுவதும், உரமிடுவதும் ஒரே சமயத்தில் முடிகிறது.

முழுவதுமாக  நீரில் கரையும் உரங்களை உபயோகப்படுத்த வேண்டும்.

அம்மோனியம் நைட்ரேட், அம்மோனியம் சல்பேட், பாஸ்பாரிக் அமிலம், பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் நைட்ரேட், மோனோ பொட்டாசியம் பாஸ்பேட்,  மோனோ அம்மோனியம் பாஸ்பேட்  ஆகியவை இதற்கு ஏற்ற உரங்கள்.

சூப்பர் பாஸ்பேட்டை பயன்படுத்தக் கூடாது

சொட்டு நீர் உரப்பாசனம் செய்வது ரொம்ப சுலபம், எவ்விதமான சிக்கலும் இல்லை, சிரமும் இல்லை.

நாம் இடும் உரம் முழுமையாக பயிருக்குக் கிடைப்பதால் கூடுதலான மகசூலும் லாபமும் கிடைக்கும்.

இது பற்றிய ஆலோசனை விவசாயிகளுக்கு இலவசமாக அளிக்கப்படும்.
இந்த பக்கத்தை எடுத்து பயன்படுத்த விவசாய பஞ்சாங்கத்தின்  அனுமதி தேவை இல்லை.
உங்கள் சந்தேகங்களை கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் அல்லது மின்னஞ்சல் மூலம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
தொலைபேசி எண்:+918526195370, மின்னஞ்சல்: gsbahavan@gmail.com, bhumii.trust@gmail.com




No comments:

Post a Comment