செய்தி எண்; 6
வறட்சியான நிலம் வைத்திருப்பவர்கள்
கோடீஸ்வரர்கள்
கோடீஸ்வரர்கள்
மெக்சிகோவின்
அள்ளிக்கொடுக்கிறது
சப்பாத்திக்கள்ளி
அள்ளிக்கொடுக்கிறது
சப்பாத்திக்கள்ளி
(சப்பாத்திகள்ளியின் இலை மடல்கள், அவற்றின் பழங்கள், வேர்கள், வேலிக் கருவையின் காய்கள், யூக்கா பூக்கள் (YUCCA FILIFERA), தேன் முயல், மான், பறவைகள், பாம்புகள் ஆகியவை எல்லாம்தான் அவர்கள் சாப்பிடும் அயிட்டங்கள்.)
'சான் லூயிச் பொட்டாசி' கஷ்டமாக இருந்தாலும் இந்த பெயரை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
சப்பாத்திக்கள்ளியின் சாம்ராச்சியம் இதுதான்.
இது எப்படிபட்ட இடம் என்று தெரிந்து கொள்ளுவதும் உபயோகமாக இருக்கும்.
ஒரு மண்ணுக்கும் உதவாத மண்வகை, புல்லும் தலை நீட்டாத கட்டாந்தரை, பாளம் பாளமாக வாய் பிளந்து இருக்கும் நிலம், காரத் தன்மை நிறைந்த பிரச்சினை நிலம், நீர் ஆதாரம் அறியாத நிலம், திரும்பிய பக்கம் எல்லாம் மலைக்குன்றுகள் இப்படிப்பட்ட நிலங்களைக் கொண்டதுதான் 'சான் லூயிச் பொட்டாசி'.
சப்பாத்திகள்ளி சக்கைப்போடு போடும் சொர்க்க பூமி !
இப்படியான நிலங்கள், மெக்சிகோவில் உங்களுக்கு இருந்தால் நீங்கள்தான் கோடீஸ்வரன்.
சப்பாத்திக்கள்ளி அவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது.
வறண்ட பிரதேசத்தின் அடையாளமாக இருந்த சப்பத்திக்கள்ளியை இன்று மா பலா வாழை மாதிரி மகத்தான பழப்பயிராக மாற்றி விட்டார்கள்.
ஒரு காலத்தின் தரித்திர பூமி, இன்று சரித்திரம் படைக்கும் பூமியாக மாறி விட்டது.
ஜாம், ஜெல்லி, ஜூஸ், கொலன்ச் (KOLANCHE), இப்படி ஏகப்பட்ட அயிட்டங்கள் சப்பாத்திக்கள்ளியிலிருந்து தயார் ஆகின்றன.
ஆமாம், "கொலன்ச்" என்றால் ?
"பீர்" தான் மெக்சிகோவில் கொலன்ச்.
இன்னொரு அதிசயம் !
சப்பாத்திக்கள்ளி தவிர, 'மெஸ்கைட்' என்ற , முட்செடியையும், லெச்சுகில்லா (AGAVE LECHUGUILLA) என்ற கற்றாழைச் செடிகளையும் மெக்சிகோ மாடுகள் வெளுத்துகட்டுகின்றன.
நம்ம ஊர் வேலிக்கருவைதான் (PROSOPIS JULIFLORA) அங்கு மெஸ்கைட்.
'லெச்சுகில்லா' (LECHUGILLA) சாப்பிடும் மாடுகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
காரணம், தொடர்ந்து லெச்சுகில்லா சாப்பிட்டால், மாடுகள் முரட்டுத்தனமாக மாறிவிடும்.
காரணம், தொடர்ந்து லெச்சுகில்லா சாப்பிட்டால், மாடுகள் முரட்டுத்தனமாக மாறிவிடும்.
மெக்சிகோ ஏன் இதில் இவ்வளவு அக்கரை காட்டுகிறது ?
இந்தியா மாதிரியே, அங்கும் 40 சதவிகித நிலங்கள் வறண்ட பிரதேசங்கள். இன்று வறண்ட பிரதேசங்களின் வரப்பிரசாதம் சப்பாத்திக்கள்ளிதான் .
1821 ம் ஆண்டு மெக்சிகோ சுதந்திரம் அடைந்தது. அந்த சமயம், டெக்ஸாஸ், நியூ மெக்சிகோ, அரிசோனா, கலிபோர்னியா ஆகியவை மெக்சிகோ எல்லையில் இருந்தன.
1848 ல்தான் இந்த 4 பகுதிகள் வட அமெரிக்காவுடன் சேர்ந்தன.
மெக்சிகோவில் ச.க வின் வயது 20000 வருஷம். முழுப் பாலைவனமாகவும், அரைவாசி பாலைவனமாகவும் இருந்தபோது மனிதர்களின் உணவாகவும், பானமாகவும், மருந்தாகவும் இருந்து வந்துள்ளது.
மெக்சிகன்கள் இயற்கையாகவே 'சிக்ஸ்பேக்' உடம்பு உடையவர்கள்
மெக்சிகன்களுக்கு 'சிக்ஸ்பேக்' உடம்பு வந்தது எப்படி ?
அவர்கள் சாப்பிடும் சாப்பாடுதான் என்று 16 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் .எழுதப்பட்ட சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது.
அப்படி என்னதான் சாப்பிட்டார்கள் ?
சப்பாத்திகள்ளியின் இலை மடல்கள், அவற்றின் பழங்கள், வேர்கள், வேலிக் கருவையின் காய்கள், யூக்கா பூக்கள் (YUCCA FILIFERA), தேன் முயல், மான், பறவைகள், பாம்புகள் ஆகியவை எல்லாம்தான்.
ஆக 19 ம் நூற்றாண்டில் சப்பாத்தி கள்ளியை சிறந்த கால்நடைத் தீவனமாக முடிவு செய்தார்கள்.
இதன் அடிப்படையில் 40 சதவிகித வறட்சிப்பகுதிகளுக்கான பயிகளைத் தேர்வு செய்ய அரசு 'கொனாசா' என்ற அமைப்பை 1970 ல் உருவாக்கியது.
'கொனாசா' என்றால் (creation of the National Commission for Arid Zones (CONAZA) மானாவாரி நிலங்களுக்கான தேசிய ஆய்வு அமைப்பு.
மண்ணின் மைந்தர்களைப் போன்ற சப்பாத்திக்கள்ளி, கேண்டலில்லா, லெச்சுகில்லா கற்றாழை, நார்ப்பயிர் யூக்கா, மெஸ்குய்ட், போன்றவற்றை கவனம் செலுத்தி உற்பத்தியைப் பெருக்குமாறு தனது பரிந்துரையைக் கொடுத்தது.
மேலும் இந்த பரம்பரிய பயிர்களின் உற்பத்தியைத் தொழில் வளர்ச்சிக்கு எற்றதாக மேம்படுத்தும்படி சிபாரிசு செய்தது.
இதன் அடிப்படையில்தான் ஜாம், ஜெல்லி, ஸ்குவாஷ், பானங்கள், பீர் பிராந்தி எல்லாம் தயார் செய்யும் தொழிற்சாலைகள் இப்போது வந்தாச்சு.
வடகிழக்கு பிரேசிலில் காடுகளீல் இயற்கையாக விளையும் 'உம்பு' என்ற காட்டுப் பழத்தை இது போல தொழிற்சாலைக்கு ஏற்ற பழமாக மேம்படுத்தி இருந்ததை எங்கள் பயணத்தின் போது பார்க்க முடிந்தது.
உலகத்தில் மெக்சிகோ, அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா, பிரேசில், மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் அதிக அளவில் சப்பாத்திகள்ளிகள் பயிரிடப்படுகின்றன.
கோள வடிவம், தடிமனான தோல், விதை நிறைந்த பழத்தசை, மென்மையான மணம், 100 முதல் 150 கிராம் எடை, சிவப்பு, மஞ்சள், இரண்டும் கலந்த வண்ணம் ஆகியவை இந்த பழங்களின் பண்புகள்.
நீர் - 84 - 90 %, ரெட்யூசிங்க் சுகர் - 10 - 15 %, சர்க்கரைச்சத்து 6 - 14 %, உலர் பொருள் - 0.29 - 6.0 %, கார அமிலநிலை 5.3 - 7.1, புரதம் - 0.21 - 1.8 கொழுப்பு 0.02 - 0.7 %.
சராசரியாக எல்லா பழங்களிலும் இருக்கும் சத்துக்கள்தான் இதிலும் அடங்கியுள்ளன என்கிறார்கள் ஆராய்ச்சி நிபுணர்கள்.
No comments:
Post a Comment