இஸ்லாமியா கல்லூரியின் சுற்றுச் சூழல் அமைப்பு "என்விரோ கிளப்' டிசம்பர் 12 ம் தேதி, சர்வதேச மலைகள் தினத்தை, மலை அறுவடை என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் கொண்டாடியது.
அன்று காலை சுமார் 11 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மற்றும் கல்லூரியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இஸ்லாமியா கல்லூரியின் துணை முதல்வர் டக்டர் டி.முகம்மது இலியாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வரவேற்றுப் பேசினார்.
இஸ்லாமியா கல்லூரியின் துணை முதல்வர் டக்டர் டி.முகம்மது இலியாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வரவேற்றுப் பேசினார்.
கல்லூரி அறக்கட்டளையின் உதவிப் பொதுச் செயலாளர் ஜனாப் என். முகம்மது நயீம் சிறப்பு மற்றும் கவுரவ விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவுரவ விருந்தினர், இளம் விஞ்ஞானி டாக்டர்.முகம்மது பைசல், காடுகளை காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
பூமி இயற்கைவள பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான தேவ.ஞானசூரியபகவான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சர்வதேச மலைகள் தினத்தின் நோக்கம், மற்றும் அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், கிழக்குத்தொடர்ச்சி மலையின் வளங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
" வாணியம்பாடி பகுதியில் இப்படி ஒரு விழாவை ஏற்பாடு செய்து நட்த்தும் இஸ்லாமிய கல்லூரியையும், கல்லூரியின் "என்விரோ கிளப்' நிர்வாகிகளையும் எங்கள் பூமி இயற்கைவள பாதுகாப்பு மையத்தின் சார்பில் பாராட்டுகிறேன்.
உலக நாடுகள் பெறும் ஆண்டு சராசரி மழை அளவைவிட தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் கிடைக்கும் மழை அதிகம் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகிலேயே அதிக மழை பெறும் பகுதி சிரபுஞ்சி.
ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் ஓர் ஆண்டில் ஆறு மாதம் குடிநீர் பஞ்சத்தால் அவதிப்படுகிறார்கள்.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது ?
எவ்வளவு அதிகமான மழை பெய்தாலும், அதை சேமிக்கவில்லை என்றால் வறட்சி மற்றும் குடிநீர் பஞ்சத்திலிருந்து தப்பிக்க முடியாது.
எனவே, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது போல மழை வரும்போதே அதை பிடித்துக்கொள்ள வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை.
நமக்கு தேவையான சமயத்தில், தேவையான அள்வு பெய்ய வேண்டும் என்று மழையை எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.
தென் அமெரிக்காவில் பிரேசில் நாட்டில் வட கிழக்குப்பகுதியில் கடுமையான வறட்சிக்கு இலக்காகும் பகுதிக்கு நான் சென்றிருந்தேன்,
அங்கு, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மழை நீரை தொட்டிகளில் சேமிக்கிறார்கள்.
சேமித்த நீரை சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள். குடிக்க பயன்படுத்துகிறார்கள். குளிக்க பயன்படுத்துகிறார்கள். தோட்ட்த்திற்கும் பாய்ச்சுகிறர்கள்.
ஆச்சரியமாக இருக்கிறது, ஓர் ஆண்டில் 6 முதல் 8 மாதங்களுக்கு இப்படி வெற்றிகரமாக பயன்படுத்துகிறார்கள்.
அவர்களுக்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழை கூட நம்மைவிட மிகவும் குறைவு.
அப்படி என்றால் நாம் ஏன் இதை செய்யக்கூடாது ?
யோசிக்க வேண்டும்.
பெய்யும் மழை நீரை முறையாக சேமித்துப் பயன்படுத்தினால் அண்டை மாநிலத்தை தண்ணீருக்காக கை ஏந்த வேண்டிய அவசியம் இல்லை " என்றும் கூறினார்.
No comments:
Post a Comment