Select Your Favorite Topic! Enjoy Reading!!

Monday, December 22, 2014

கையைக் கடிக்காத கரும்பு சாகுபடி - SUSTAINABLE SUGARCANE INITIATIVES



கையைக் கடிக்காத கரும்பு

சாகுபடி
??????????????????????????????????????????????

நீடித்த

கரும்பு உற்பத்தி

முனைப்புத் திட்டம்

??????????????????????????????????????????????


SUSTAINABLE SUGARCANE INITIATIVES

??????????????????????????????????????????????

கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் இருப்பது ஆந்திரப்பிரதேசம்

??????????????????????????????????????????????

இந்தியாவின் சராசரி கரும்பு மகசூல் 40 டன்.
ஆந்திராவின் சராசரி எக்டர் மகசூல் 88 டன்.
தமிழ்நாட்டின் சராசரி எக்டர் மகசூல் 105 டன்

??????????????????????????????????????????????

35
 மில்லியன் விவசாயிகள் இந்தியாவில் கரும்பு சாகுபடி செய்பவர்கள். இதனால் வேலை வாய்ப்பு பெறுபவர்கள் 50 மில்லியன் பேர். இந்தியாவில் கரும்பை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலைகள் 571.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம். தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பொருளாதார மேம்பாட்டில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக அளவில் அதிக கரும்பு சாகுபடி பரப்பை உடையது பிரேசில் இரண்டாம் இடத்தில் இருப்பது நமது இந்திய நாடு.

இந்தியாவில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யும் மாநிலம் உத்தரப்பிரதேசம், இரண்டாவது மகாராஷ்ட்டிரா.

உற்பத்தியைப் பொருத்த வரை கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது

தமிழ்நாட்டின் சராசரி எக்டர் மகசூல் 105 டன்.

இரண்டாவது இடத்தில் இருப்பது ஆந்திரப்பிரதேசம்

ஆந்திராவின் சராசரி எக்டர் மகசூல் 88 டன்

மூன்றாவது இடத்தில் இருப்பது கர்நாடகா.

கர்நாடகாவின் சராசரி எக்டர் மகசூல் 82 டன்

ஆனால் இந்தியவின் சராசரி கரும்பு மகசூல் 40 டன்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

ஒரு பரு கரணை
இளம் வயதுடைய நாற்று
அதிக இடைவெளி
சொட்டு நீரப் பாசனம்
அடிமண் கண்டத்தில் பாசனம்
பாசன நீருடன் உரம் அளித்தல்
கரும்புடன் ஊடுபயிர்

நீடித்த கரும்பு உற்பத்தித் திட்டம்

கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் நீடித்த கரும்பு உற்பத்தி முனைப்புத் திட்டம் ( எஸ் எஸ் ) அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானிய உதவியுடனும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித உதவியுடனும் சொட்டு நீர் பாசனம் அமைத்துத் தரப்படுகிறது.

அடி மண் கண்டத்தில் சொட்டு நீர் குழாய்களை அமைக்கும் புதிய முறை ( சப் சர்பேஸ் சிஸ்டம் ) இதில் கடைபிடிக்கப்படுகிறது.

தேவையான உரங்களை சொட்டு நீர்ப்  பாசனத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும்.

ஒரு எக்டருக்கு சிபாரிசு செய்யப்படும் உர அளவு தழைச்சத்து 275 கிலோ, மணிச்சத்து 63 கிலோ, சாம்பல் சத்து 115 கிலோ

கூடுதலான இடைவெளி சிபாரிசு செய்யப்படுவதால் ஆரோக்கியமான, தரமான, கூடுதலான சர்க்கரை மற்றும் மகசூல் கிடைக்க வழி வகுக்கிறது.

கரும்ப்க்கு நீர்ச்செலவாளி என்ற கெட்ட பெயர் நீங்குகிறது

சுகர்கேன்  பூஸ்டர் என்னும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தயார் செய்த பயிர் டானிக் ஒன்றும் சொட்டு நீர் பாசனத்துடன் தெளிக்க சிபாரிசு செய்யப்படுகிறது.

இரண்டு அல்லது மூன்று பரு கரணைக்கு பதிலாக ஒரு பரு கரணையை பரிந்துரை  செய்கிறது 

இந்த தொழில்நுட்பங்களைக் கடைபிடிப்பதன் மூலம் 180 டன் கரும்பு மகசூலை ஒரே ஒரு எக்டரில் இருந்து உற்பத்தி செய்ய முடியும்.
  
பயன்கள்

விதைக்கரணை தேவை குறைகிறது.

விதைக்கரணைக்கான செலவு 75 சதம் குறைகிறது.

குறைவான செலவில் கரும்பு நாற்றுக்களை எடுத்துச் செல்லலாம்.

இளங்கரும்பு உலர்ந்து போவது குறைகிறது.

கரும்பின் நீளம் மற்றும் பருமன் அதிகரிக்கிறது.

ஊடுபயிர் செய்து கூடுதல் வருமானம் பெறலாம்.

கூடுதலான வெளிச்சமும், காற்றோட்டமும் பயிருக்குக் கிடைக்கிறது. 

கரும்புக்கு, நீர்ச்செலவாளி என்ற கெட்ட பயிர் இதனால் நீங்குகிறது.

ரெட்டிப்பு லாபம்

ஒரு பரு கரணை, இளம் வயதுடைய நாற்று, அதிக இடைவெளி, சொட்டு நீரப் பாசனம், ; அடிமண் கண்டத்தில் பாசனம், பாசன நீருடன் உரம் அளித்தல், கரும்புடன் ஊடுபயிர் ஆகிய 7 தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிப்பதனால் கரும்பு விவசாயிகள் ரெட்டிப்பு மகசூலும் லாபமும் பெறலாம்.

ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

எழுத்து;;: ஞானசூரிய பகவான் 

கார்ட்டூன்;- பவித்ரா  

No comments:

Post a Comment