செய்தி எண்; 6 .
கணக்கு போட்டுப் பாருங்கள்
கண்டிப்பாய் தலை சுத்தும்
COMPLICATED
CALCULATIONS
அமெரிக்காவில் மாட்டுத் தீவனமாகும் சப்பாத்திக்கள்ளி
CACTUS AS CATTLE FEED
IN AMERICA
அமெரிக்காவில், டெக்சாஸ் மநிலத்தின் பிரவுன்ஸ்வில்லி பகுதியில் சப்பாத்திக்கள்ளியின் வரலாற்றிலேயே, முதன் முறையாக, அவை தங்களை சிறந்த கால்நடைத் தீவனமாக அறிமுகம் செய்து கொண்டன.
சப்பாத்திக்கள்ளி அமெரிக்காவில் எப்படி மாட்டுத் தீவனமாச்சு ?
இதற்கு இத்தனூண்டு அமெரிக்க சரித்திரம் படிக்கணும்.
1850 களில் அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம்.
ஒரு நாள் மாட்டு வண்டிகளில் பருத்தி ஏற்றிக்கொண்டு போனார்கள் வியாபாரிகள்.
அவர்கள் பிரவுன்ஸ்வில்லி என்னும் துறைமுகத்திற்கு போகணும்
அன்றுதான் அவர்கள் முதன்முதலாக அங்கு போகிறார்கள்.
அங்கு போக வண்டித்தடம் சரியாக இல்லை.
வழி எங்கும் சப்பத்திக்கள்ளிகள் வளர்ந்து நின்று வழிமரித்தன.
வண்டிக்கார்ர்கள் வண்டிகளை நிறுத்திவிட்டு கத்தியினாலும் கோடாலியினாலும் சப்பத்திக்கள்ளிகளை வெட்டித் தள்ளினார்கள்.
புதராக மண்டிக்கிடந்தவைகளுக்கு நெருப்பு வைத்தார்கள்.
அந்த சமயம், வண்டிமாடுகள் சப்பாத்திக்கள்ளிகளை ருசி பார்த்துக்கொண்டிருந்தன.
மாடுகளின் தாகமும் தீர்ந்தது ! பசியும் பறந்தது.
அமெரிக்காவில், டெக்சாஸ் மநிலத்தின் பிரவுன்ஸ்வில்லி பகுதியில் சப்பாத்திக்கள்ளியின் வரலாற்றிலேயே முதன் முறையாக அவை தங்களை சிறந்த கால்நடைத் தீவனமாக அறிமுகம் செய்து கொண்டன.
1905 ம் ஆண்டு வாக்கில், டெக்சாஸ் பகுதியில் உள்ள மக்கள், தங்களுடைய ஆடுமாடுகளுக்கும், பன்றிகளுக்கும், சப்பாத்திக்கள்ளியின் முள்ளைப் பொசுக்கிவிட்டு தீவனமாக்ப் போட்டார்கள்.
ஆடுமாடுகள் சந்தோஷமாக சாப்பிட்டு தங்கள் சம்மதத்தை தெரிவித்தன.
கொஞ்ச நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முள் பொசுக்கி இருந்தது.
அதனைக் கொண்டு சுலபமாக சப்பாத்திக்கள்ளியின் முட்களை பொசுக்கிவிட்டு ஆடுமாடுகளுக்கு விருந்து வைத்தனர்..
அப்போதுதான் அமெரிக்காவில் ஒரு சப்பத்திக்கள்ளி ஸ்பெசலிஸ்ட் அதுபற்றி ஆராய்ச்சி செய்துவந்தார்.
சப்பாத்தியில் முள் ஒரு பிரச்சினை என்று உணர்ந்து, முள் இல்லாத சப்பாத்தியை உருவக்க முடியுமா ? யோசித்தார்.
அப்படி யோசித்த அமெரிக்க ஆசாமியின் பெயர் லூதர் பர்பாங்ஸ்.
அவர்தான் இந்த உலகில் உள்ள மானாவாரி பிரதேசங்களுக்கான வரப்பிரசாதமாக, முள் இல்லாத சப்பாத்தியை உருவாக்கினார்.
அதன்பிறகுதான் சப்பாத்திக்கள்ளி கால்நடைகளுக்கு பிரிட்டானியா பிஸ்கட் ஆனது.
இப்போது ஆடுமாடுகள் தவிர, எலி, முயல், மான், காட்டு மாடுகள் போன்றவையும் இந்த பிஸ்கட் சப்பாத்தியை கபளீகரம் செய்கின்றன.
அதனால் முள் இருக்கும் சப்பாத்திகளை முள் இல்லாத சப்பாத்திகளுக்கு வேலியாகப் போடுகிறார்கள்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஒரு ஆராய்ச்சி நட்த்தினார்கள். அதன் கண்டுபிடிப்பைச் சொன்னால் உங்களுக்கு தலை சுத்தும்.
ஒரு எக்டர் நிலத்தில் அறுவடை செய்யும் சப்பாத்தியை ஒரு பசுவுக்கு 11 வருஷம் மற்றும் எட்டு மாதத்திற்குக் கொடுக்கலாம். எப்படி ?
ஒரு பசு மாட்டிற்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் சப்பாத்திக்கள்ளி 45 கிலோ. ஒரு எக்டரில் 194200 கிலோ மகசூல் தரும்.
கணக்கு போட்டுப் பாருங்கள், கண்டிப்பாய் தலை சுத்தும்.
.
.
No comments:
Post a Comment