Image Courtesy: Thanks Google |
- வேம்புவின் இலை, விதை, எண்ணெய், பிண்ணாக்கு, என அனைத்தும் பூச்சிகளை கட்டுப் படுத்தும்.
- 122 விதமான பூச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது வேம்பு.
- இவற்றை பலவகைகளில் பயன்படுத்தும் முறை பற்றி பார்க்கலாம்.
1.1. இலைகள் (NEEM LEAF)
- வீடுகளில் கொசுக்களை விரட்ட, உலர்ந்த வேம்பு இலைச்சருகுகளை பயன்படுத்தி புகை போடலாம்.
- வேம்பு தழைகளை நிலத்தில் உரமாக இட்டு நூற்புழுக்களை கட்டுப் படுத்தலாம்.
- உலர்ந்த வேப்பந் தழைகளை தானியக் குதிர்களில் போட்டு வைத்தால், கூன் வண்டு, மற்றும் இதர வண்டுகளை கட்டுப் படுத்தலாம்.
- வேம்பின் உலர்ந்த இலைகளைப் பொடி செய்து தூவுவதன் மூலம் புரோடீனியா புழு, தென்னை ஓலைப்புழு, மற்றும் பயறு வகைகளைத் தாக்கும் வண்டுகளைத் தடுக்கலாம்.
1.2.இலைக்கரைசல் (NEEM LEAF EXTRACT)
- வெண்டையைத் தாக்கும் வண்டுகள், இலைசுருட்டுப்புழு, நெல் பச்சை தத்துப் பூச்சி, புகையான், சணல் பயிரைத்தாக்கும் வண்டுகள், மற்றும் கம்பளிப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
- தயாரிப்பு
- 100 கிராம் வேப்பந்தழையை இடித்து அரைத்து கூழாக்கி 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு இரவு முழுக்க வைத்திருந்து அடுத்தநாள் இக்கரைசலை வடிகட்டி அத்துடன் 4 மில்லி காதிசோப்புக் கரைசலை கலந்து பின் பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
1.3. வேப்பங்கொட்டைத்தூள் (NEEM KERNAL POWDER)
- வேம்பு விதைகளை உலரவைத்து பொடித்து வைத்துக் கொண்டு விதைகளை சேமித்து வைக்கும் போது, இதனை கலந்து வைத்தால் பூச்சிகள் தாக்காது. இந்த விதைத்தூளை 200 கிலோ விதைகளுக்கு 2 கிலோ என்ற அளவில் கலந்து வைக்க வேண்டும்.
1.4. வேப்பங்கொட்டைச்சாறு (NEEM KERNAL EXTRACT)
- புகையிலைப் பயிரைத் தாக்கும் புரோடீனியா புழுக்களை இது சிறப்பாக கட்டுப்படுத்தும். உருளைக்கிழங்கைத் தாக்கும் அந்துப் பூச்சிகள் மற்றும் புரோடீனியா புழுக்களையும் கட்டுப்படுத்தும்.
- வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி நிலையம் இந்த முறையை உருவாக்கியது.
- இடித்து பொடிசெய்த வேப்பங்கொட்டைத் தூள் 250 கிராம்' ஐ ஒரு மெல்லிய துணியில் மூட்டையாக முடித்து 50 லிட்டர் நீரில் மூழ்கியிருக்குமாறு வைத்திருந்து அடுத்தநாள் சாற்றினை வடித்து எடுத்து புகையிலை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.
- இந்த முறையில் புரொடீனியா புழுக்களை அற்புதமாக கட்டுப்படுத்தலாம்.
1.5. இரண்டாவது தயாரிப்பு முறை
- வேப்பங் கொட்டைகளை உலர்த்தி பொடித்து 10 கிலோ எடுத்து 50 லிட்டர் நீரில் முக்கி 24 மணி நேரம் ஊறவைத்து அடுத்த நாள் கரைசலை வடிகட்டி 150 லிட்டர் நீர் மற்றும் 200 மில்லி டீப்பால் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.
- கத்தரி கம்பளிப்புழு, வெண்டை காய்ப்புழு, மிளகாய் இலைப்பேன் முருங்கையைத் தாக்கும் பழஈ, கத்தரி தக்காளி மிளகாயைத் தாக்கும் வெள்ளைஈக்கள் ஆகியவற்றை அற்புதமாகக் கட்டுப்படுத்தும்.
- பூக்கும் அல்லது காய்பிடிக்கும் சமயம்; வேப்பங் கொட்டைக் கரைசலை தெளித்து பச்சைக்காய்ப்புழுக்களை தடுக்கலாம்.
1.6. குறுணை (NEEM GRANULES)
- சோளப்பயிரைத் தாக்கும் தண்டுப் புழுவைக் கட்டுப் படுத்த இலைச்சுருளில் வேம்புக் குறுணைகளை இடவேண்டும்.
- வேப்பங் கொட்டையினை பொடி செய்து அத்துடன் சைனா களிமண் ( CHINA CLAY ) மற்றும் கருவைப் பிசின் சேர்த்து பிசைந்து குறுணைத் தயாரிக்கலாம்.
- இதைத் தயாரிப்பதற்கென பிரத்தியேகமான இயந்திரங்கள் உள்ளன.
1.7.எண்ணெய்க்கரைசல் (NEEM OIL SOLUTION)
- பயிர்களில் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளை இதன்; மூலம் சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
- 1990 -களில் பருத்தி சாகுபடியை சின்னாபின்னமாக்கிய வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வரப்பிரசாதமாக இருந்தது வேம்பு எண்ணெய் கரைசல்தான்.
- தயாரிப்பு
- 15 முதல் 20 மில்லி வரை வேம்பு எண்ணெயுடன் 1 லிட்டர் தண்ணீர்; மற்றும் 4 மில்லி காதிசோப்புக் கரைசல்; ஊற்றி நன்கு கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.
- வேப்பம் பிண்ணாக்கு இட்ட வயல்களில் நூற்புழுக்கள் தலைவைத்தும் படுக்காது, பூச்சிகளின் நோய்களின் தாக்குதலும் அதிகம் இருக்காது.
- கோதுமையில் வேர்முண்டுகளை ஏற்படுத்தும் நூற்புழுக்களையும் நெல் தோகைக்காம்பு அழுகல், தோகைக்காம்பு கருகல் நோய்களையும், எலுமிச்சை இலைகுடையும் புழுக்களையும் (LEAF MINERS) கட்டுப்படுத்தலாம்.
- காய்கறிப் பயிர்களின் நாற்றங்கால்களை அதிகம் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்த 1 சதுர மீட்டருக்கு 25 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் 100 கிராம் வேப்பம்பிண்ணாக்கை கலந்து மண்ணில் தூவ வேண்டும்.
1.9. வேம்பினால் கட்டுப் படுத்தப்படும் முக்கிய பூச்சிகள் (IMPORTANT PESTS CONTROLLED BY NEEM)
- நெல்லைத் தாக்கும் நூற்புழுக்கள், புகையான். தத்துப்பூச்சி இலை சுருட்டும்புழு, கதிர்வெட்டும்புழு, முள்வண்டு, மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சிகள்.
- சோளத்தைத் தாக்கும் அசுவணி, குருத்துஈ, தண்டுப்புழு, மற்றும் கதிர்ப்புழு.
- மக்காச் சோளத்தைத் தாக்கும் கதிர்ப்புழு மற்றும் படைப்புழுபருத்தியைத் தாக்கும் படைப்புழு, மற்றும் நாவாய்ப்பூச்சிகள். புகையிலையைத் தாக்கும் புரோடீனியா, மொட்டுப்புழு மற்றும் கொம்புப்புழு.
- காய்கறிப் பயிர்களைத் தாக்கும் இலைகுடையும் புழுக்கள், முட்டைக் கோசை தாக்கும் புழுக்கள், கத்தரி வண்டுகள், தர்பூஸ்பழ புழுக்கள், பீன்ஸ் அசுவணிகள், உருளைக்கிழங்கு புழுக்கள், வண்டுகள், வெண்டை இலைசுருட்டும்புழு, கொண்டைக்கடலை பச்சைப்புழு, துவரை காய் துளைக்கும் புழுக்கள், மற்றும் ஆமணக்கு கம்பளிப்புழுக்கள்.
- பொதுவாக இதர பயிர்களைத் தாக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள், ஜப்பானிய வண்டுகள், புள்ளிவண்டுகள், மற்றும் ஒரு வகை . நத்தை.
- இப்படி பலவகைப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது வேம்பு.
1.10. எப்படி கட்டுப்படுத்துகிறது ? (ஆழுனுநு ழுகு ஊழுNவுசுழுடு டீலு Nநுநுஆ)
- பூச்சிகளைக் கட்டுப் படுத்த பல ஆயுதங்களை தன் கைகளில் வைத்துள்ளது வேம்பு.
- என்னென்ன வழிகளில் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது என்பதை . . பார்க்கலாம்.
- வேம்பின் வாடை அல்லது நாற்றமே பல பூச்சிகளை பயிர்களிடம் அண்டவிடாது.
- சிலவகை பூச்சிகளுக்கு வேம்பின் கசப்புருசி பிடிக்காது, இதனால் வேம்பின் கரைசல் (அ) தூள் தூவப்பட்ட பயிர்ப்பாகங்களில் பூச்சிகள் வாயினை வைக்காது.
- வேம்பின் கசப்பு சுவையை மீறி பூச்சிகள் தின்றுவிட்டாலும், அவை சுலபமாக சீரணம் ஆகாது, பூச்சிகளுக்கு வயிற்றுக் கோளாற்றை ஏற்படுத்தி மேலும் சேதம் விளைவிக்க முடியாதபடி செய்துவிடும்.
- வேம்புப் பொருட்கள் சாப்பிட்ட புழுக்கள் தோலுரிக்காது. இதனால் அவை முழு வளர்ச்சி அடைய முடியாது. சிலவகை பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மறித்துவிடும்.
- புழுக்களின் பூச்சிகளின் உடலின் உள்ளும் புறமும் எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கி மரணபயம் ஏற்படுத்திவிடும்.
- சில வகைப் பூச்சிகளில் வேம்பு குடும்பக் கட்டுப்பாட்டை செய்துவிடும். வளர்ந்த பூச்சிகளாக இருந்தாலும் அவற்றால் இனவிருத்தி செய்ய முடியாது.
- பூச்சிகளின் முட்டைகள் மீது வேம்புப் பொருட்கள் பட்ட மாத்திரத்தில் உள்ளிருக்கும் கரு உபயோகமற்றதாகிவிடும். முட்டைகள் பொறிப்பதும் குஞ்சுகள் வெளிவருவதும் கேள்விக்குறி ஆகிவிடும்.
- இதனால் பூச்சிகளுக்கு இனப்பெருக்கம் என்பது இம்சையாகிவிடும்.
5. மலைவேம்பு
- மலைவேம்பு தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும், வளரக்கூடிய மரம். இதன் இலை, பூ, பட்டை, வேர், காய், பழம் என அனைத்துப் பகுதிகளும் பூச்சிகளை விரட்டும் பண்பு கொண்டவை.
- இலைச்சாறு வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும்.
- சணல் பயிரைத் தாக்கும் புழுக்கள் மற்றும் வண்டுகளை இலைக் கஷாயம் கட்டுப் படுத்தும்.
- சேமிப்பில் கோகோ விதைகளை பாதுகாக்க உலர்ந்த மலை வேம்பு இலைகளை போட்டு வைக்கலாம்.
- இதன் காய்களின் உலர்ந்த பொடி நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும்.
- மலை வேம்பின் விதை எண்ணெய் மற்றும் பிண்ணாக்கு நெற்பயிரின் பச்சைத் தத்துப் பூச்சி மற்றும் புகையான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.
- உங்கள் விவசாய நிலங்களில் வேப்பமரம் இல்லையென்றால் உனடியாக ஒன்றிரண்டு மரங்களை நட ஏற்பாடு செய்யுங்கள்.
- அது உங்கள் பயிர்பாதுகாப்பு செலவை கணிசமாகக் குறைக்கும்.
Image Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment