Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, May 20, 2016

தலையில் ஹெல்மட்டும் முகத்தில் மாஸ்கும் மாட்டிக்கொள்ள நீங்க ரெடியா ! - தொடர் - 18




Image Courtesy:Thanks Google

தோல் தொழிற்சாலைகளால் வெளியேற்றப்பட்டு; காற்றினை மாசுபடுத்தும்  வாயுக்களில்,  சல்பர் டை-ஆக்சைடும் (SULPHUR DIOXIDE) ஒன்று எனப்பார்த்தோம். சல்பர்டை ஆக்சைடு என்பது ஒரு வாயு. இதை கண்களால் பார்க்க முடியாது. ஆனால் அருவருப்பான மணத்தைக்கொண்டு இதனை உணரலாம்.

சல்பர்டை ஆக்சைடு’வின்  உற்பத்திக் கேந்திரம் தோல்தொழிலகங்கள் மட்டுமல்ல. சல்பரை அடிப்படையாகக் கொண்ட எல்லா தொழிற்கூடங்களும் இதனை வெளியேற்றுகின்றன.

நிலக்கரி, எண்ணெய் மற்றும் வாயுக்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளும்கூட  சல்பர் - டைஆக்சைடை  வெளியேற்றுகின்றன.
சல்பர் என்றால் தமிழில்  கந்தகம் என்று  பொருள்.

கந்தகத்தாதுக்களை சுத்திகரிப்பும் சல்பர் டை-ஆக்சைடு’ வை வெளியேற்றும். ஃபாசில் ஃபியூல் என்னும் படிம எரிபொருட்களை எரிக்கும் தொழிலகங்களும் இந்த காரியத்தை செய்கின்றன. மோட்டார் வாகனங்களின் பின் குழாய்ப்புகை ஆகியவை இவ்வாயுவை வெளிப்படுத்தும். ஆக டேனரி, ஃபாசில் ஃ;பியூல் எரிப்பவை, மின்சாரம் தயாரிப்பவை, கந்தகத் தாதுக்களை சுத்திகரிப்பதுஇ மோட்டார் வாகனங்களின் புகை, ஆகியவை சல்பர் டைஆக்சைடு’வை வெளியேற்றுவதில் முக்கியமானவை.

சல்பர் டைஆக்சைடு’வினால் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதனால் பலவகை உடல் உபாதைகள் ஏற்படும். நாசித்துவாரம் மற்றும் தொண்டை எரிச்சல், இருமல், மூச்சுத்திணறல் (WHEEZING)இ குறை நீள சுவாசம் (ளுர்ழுசுவு டீசுநுயுவுர்)இ மார்பக இறுக்கம் (TIGHT FEELING OF CHEST) இப்படியாக தோராயமாக அரை டஜன் நோய்களால் பாதிக்கப்படுவோம்.


இதன்பாதிப்பு ஏற்பட இதனை நீண்ட நாட்கள் சுவாசிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பத்து நிமிஷம் சுவாசித்தாலும் உடன்நாம் அதன் பாதிப்பை உணரலாம்.

சல்பர் டை ஆக்சைடு’வை சுவாசிப்பதால்   ‘ரிஸ்க்'  என்றால்  அது ஆஸ்த்துமாவினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதிகம். சல்பர் டை ஆக்சைடினால் ஏற்படும் காற்று மாசுபடுதலை தடுக்க  ஆஸ்திரேலியா நாட்டில் 3 காரியங்களை செய்கிறார்கள்.

ஓன்று பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு தர நிர்ணயம் செய்வது. தரக்குறைவான எரிபொருளை யார் விற்பனை செய்தாலும் அவர்கள் களி தின்ன வேண்டிவரும். எவ்வளவு பெரிய பங்க்’காக இருந்தாலும் மூடுவிழா நடக்குமாம்.. 

இரண்டு, கார்கள் மற்றும் இதர மோட்டார் வாகனங்களில் எவ்வளவு புகை வரவேண்டும் என்பதற்கு  கட்டுப்பாடு விதிப்பது. சாலையில் செல்வது காரா ரயிலா என்று தெரிய வேண்டும். கண்டபடி புகைமூட்டம் போட்டுக்கொண்டு  போகமுடியாது. டிராஃபிக்கில்; சம்திங் கொடுத்தெல்லாம் சமாளிக்கமுடியாது.

மூன்று, சல்பர்  டைஆக்சைடு வெளிவிடாத,  காற்றினை மாசுபடுத்தாத , மாற்று எரிபொருட்களை ஏற்பாடு செய்வது. இதெல்லாம் ஆஸ்திரேலியா சமாச்சாரம்.

இதற்கிடையே  நம்மஊரில் காற்றுமாசு’வை, கட்டுப்படுத்துவதில்  மாசு கட்டுப்பாடு வாரியம் என்னசெய்கிறது என்று பார்க்கலாம்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் (TAMILNADU POLLUTION CONTROL BOARD)  25- இடங்களில் காற்று மாசுபாடு தொடர் கண்காணிப்பு  மையங்களை (CONTINUOUS AIR MONITORING STATIONS )  45 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்க ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லியில்  டீசல் கார்களுக்கு தடை

சமீபத்தில் டெல்லியில் டீசல் எஸ்.யூ.வி.  மற்றும்  2,000. சி.சி. க்கும்  அதிக சக்திகொண்ட கார்களை வாங்க தடை கொண்டுவந்துள்ளது அரசு. இந்த சட்டம் சென்னைக்கு வர ரொம்ப நாள் ஆகாது என்கிறார்கள் விஷயம் தெரியாதவர்கள் கூட.

சென்னை நகரத்தின் சுற்றுச்சூழலில் உள்ள காற்று மோசமான அளவிற்கு மாசடைந்துள்ளது என சமீபத்தில் ஒரு செய்தியில் கவலைப்பட்டள்ளது, டெக்கான் ஹெரால்டு என்ற ஆங்கில செய்திப்பத்திரிகை.

அமையவுள்ள 25 காற்று மாசுபாடு கண்காணிப்பு  மையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்,  ராமச்சந்திரா பல்கலைக்கழகம், ஆகியவை பகிர்ந்துகொள்ள உள்ளன. இந்தியாவில் இதுமாதிரியான ஏற்பாடுகள் முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கிறார்  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் டாக்டர். கார்த்திகேயன். இந்த மையங்கள் தொடர்ந்து அந்த 25 இடங்களின் மாசுவை ஆய்வு செய்யும். இதுபோன்ற மையங்கள் அமைப்பதால் வானிலைசெய்தி போல மாசு குறித்த   தகவல்களை மக்களுக்கு வானொலி தொலைக்காட்சி மூலம் தெரிவிக்க முடியும் என்கிறார்கள். மேலும் இந்த மையங்களில் தானியங்கி டிஜிட்டல் கருவிகள் 24 மணி நேரமும் கண்காணித்து தகவல்களை தொடர்ந்து பதிவு செய்யும் என்கிறார்கள்.

ஏற்கனவே இதுமாதிரியான ஆய்வுகள், அனுபவம் மிக்க அலுவலர்களால் (ஆயுNருயுடு) செய்யப்பட்டு வந்தன. தேவைப்படும்போது  தேவைப்படும் இடங்களில் உள்ள அனுபவம் உள்ள நிபுணர்களைக்கொண்டு செய்யப்பட்டது. இதற்கு நேஷனல் ஆம்பியண்ட் மானிட்டரிங் புரோக்ராம்  (NATIONAL AMBIENT MONITORING PROGRAMME) என்று பெயர். 


டெட்டால் கம்பெனி முகமூடி ரெடி

தற்போது டெட்டால் ஏர்  புரடெக்டட் ஏர் மாஸ்க் வந்துவிட்டது. கேஷ்ஆன் டெலிவரியில் 500 ரூபாய் கட்டினால் போதும். பேக்டீரியாவை வடிகட்டும்  பி.எம். 2.5 தடுப்பு மாஸ்க்,   கே.என். 90.  லெவல் பில்டர் மெட்டீரியல் என்று அதுபற்றிய விவரங்களை போட்டிருக்கிறார்கள்.  நமது நமது மூக்கு மூகத்திற்கு பொருந்துமாறு இந்த காற்று முகமூடியை  அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளலாம்.

இனி நாம் தலையின் பின்புறம் ஹெல்மட்டும் முன்புறம் மாஸ்கும் மாட்டிக்கொள்ள வேண்டும். 

இப்போது அமையவுள்ள 25 ஆய்வு மையங்களின்முலம் மூன்று விதமான காற்று மாசுபாடுகளை கண்டுபிடிக்க முடியும். பி.எம்.10.  நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு ஆகியவற்றை கண்டறியலாம். பி.எம்.10. என்றால் 10 மைக்ரோ மீட்டருக்கும், குறைவான விட்டம் உள்ள துகள்களை குறிக்கும.; சல்பர்  டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு ஆகிய இரண்டும் வாயுக்கள் (GAS). அதாவது இந்த மூன்றில் வாயு இரண்டு. துகள் ஒன்று.

சென்னைக் காற்று அபாயகரமானது

இந்தியாவின் இதர நகரங்களை ஒப்பிடும்போது சென்னையில் நம்மை சுற்றியுள்ள காற்றின் மாசு (AMBIENT AIR POLLUTION) என்பது அபாயகரமான எல்லையைத் தொட்டுவிட்டது என்று அறிவித்துள்ளார் --  அனுமிதா ராய் சவுத்ரி.  இவர் செண்டர்  பார்  சைன்ஸ் அண்ட் என்வராயன்மெண்ட்’ன்  (CENTRE FOR SCIENCE AND ENVIRONMENT)செயல் இயக்குநர்.

நகர்ப்புறங்களின் வெளிப்புறங்களில் மாசுக்களை  எல்லாம் கட்டுப்படுத்த செய்யவேண்டியது மரங்களை வைப்பது. வீட்டுக்குள் இருக்கும் மாசுக்களை  எல்லாம் கட்டுப்படுத்த செய்யவேண்டியது காற்று சீர்திருத்த செடிகளை வைப்பது.

“இந்த பகுதியில் தற்போது சல்பர் டைஆக்சைடு மாசு அதிகம் இருப்பதால் இப்பகுதிக்கு செல்லும் மக்கள் மாஸ்க் அணிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” இப்படி ஒரு செய்தி தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை.
  
Image Courtesy:Thanks Google




No comments:

Post a Comment