Select Your Favorite Topic! Enjoy Reading!!

Monday, May 30, 2016

19. வேம் மற்றும் இ.எம் உயிர் உரங்கள் - (Vesicular Arbuscular Mycorrhizha & Effective Micro Organism)

வேம் - வேர் உட்பூசணம் 
(Image Courtesy: Thanks Google))
வேம் - வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கொரைசா 
  • தாவரங்களின் வேர்ப் பகுதியில் உண்டு உறங்கி உருப்படியான காரியங்களை ஆற்றுகிறது.
  • வேம்(VAM) என்பது இதன் சுருக்கமான பெயர்.
  • வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கொரைசா (VESICULAR ARBUSCULAR MYCORHIZA)
  • தாவரங்களின் வேர்களுக்கும் மண்ணிற்குமிடையே பாலமாக பணி செய்கிறது.
  • பயிர்சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
  • மணிச்சத்து தரக்கூடிய – பாஸ்பரஸ் என்னும்; கந்தக சத்தை எடுத்துக் கொள்ள உதவுகிறது.
  • பாஸ்பரஸ் சத்து குறைவாக உள்ள நிலங்களில் பசுமைப் பொருட்களை  ( BIOMASS )   மேம்படுத்த உதவுகிறது.
  • மண்ணின் கட்டமைப்பை  மேம்படுத்த  “  வேம் “ உதவுகிறது.
  • வேர்களைத் தாக்கும்  பூசண நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
  • நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைக்கிறது.
  • வேர்த் தூவிகளின் எண்ணிக்கையைக் கூட்டுகிறதுஇ 
  • வேர்ப் பரப்பினை அதிகரிக்கிறது.
  • வறட்சியைத் தாங்கும் சக்தியை அளிக்கிறது.   
  • இவை அடுத்தடுத்த பயிர்களுக்கும் தொடர்ந்து கிடைக்கும்.
  • நெல் போன்றஇ தேங்கி நிற்கும் தண்ணீரில் வளரும் பயிர்களுக்கு இது உதவாது.
  • இரும்பு மற்றும் துத்தநாக சத்துக்களையும் இது பயிர்களுக்கு எடுத்துத் தருகிறது. 
இ.எம். வீரிய நுண்ணுயிர் கூட்டுரம் (EFFECTIVE MICRO ORGANISM)
  • வீரிய நுண்ணுயிர் கூட்டுரம் 
  • நுண்ணுயிர்களின் சகல கலா வல்லவன்.
  • நமக்கு அறிமுகம் ஆன மற்றும் அறிமுகம் ஆகாத –நுண்ணுயிர்களின் கூட்டு இது.
  • விவசாயம் கால்நடை வளர்ப்பு மீன் வளர்ப்பு கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்ய குப்பைக் கூலங்களை விரைவாக     மக்க வைக்க இது ஒரு வரப்பிரசாதம்.
  • இஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம்(EFFECTIVE MICRO ORGANISM )    இதன் ஆங்கிலப் பெயர்.
  • இதனை ஒரு முறை காசு கொடுத்து வாங்கினால் போதும்.
  • நாமே பெருக்கிக் கொள்ள முடியும்.
  • மிகக் குறைவான செலவில் மண்வளத்தைக் கூட்டி விவசாயத்தை   லாபகரமாக மாற்றும்.
  • சுற்றுச்சூழலுக்கும்  பருவ நிலை மாறுபாட்டுக்கும்     பாதுகாப்பானது.



இ.எம். தரும் பயன்கள்

  • விதை நேர்த்தி முளைப்புத் திறனை கூட்டும்.
  • தொடர்ந்து 3 ஆண்டுகள் நிலத்தில் இட்டால் மண்கண்டம் பொன்கண்டமாக மாறும்.
  • தீமை செய்யும் நுண்ணுயிர்களை மண்ணிலிருந்து விரட்டும்.
  • நோய்கள் தாக்காதவாறு பயிர்களை கேடயமாக பாதுகாக்கும்.
  • பூச்சிகளை பயிர்களிடம் அண்ட விடாது.
  • சுவையான உணவுப் பொருட்களை உத்திரவாதம்;.
  • குப்பைகளை விரைவாக மக்க வைத்து உரமாக மாற்றிவிடும்.
  • விதை நேர்த்தி. 
  • ஒரு மில்லி இ.எம். திரவத்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலக்குங்கள். 
  • இந்த கரைசலில் விதைகளை ஊற வைத்து விதையுங்கள்.
  • விதையின் கடினத்தன்மைக்கு ஏற்ப அரை மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை ஊர வைக்கலாம். 
  • ஊறவைத்த விதைகளை நிழலில் உலர்த்துங்கள்.
  • உலர்த்திய விதைகளை எடுத்து விதையுங்கள் 
  • கரும்புக் கரணைகளை இந்த கரைசலில் 5 நிமிடம் ஊர வைத்து நடலாம்.

மண்ணில் தெளிக்கும் முறை.
  • ஒரு மில்லி இ.எம். திரவத்தை 1 லிட்டர் நீரில் கலக்குங்கள். 
  • கரைசலை பயிரின் மீது அல்லது மண்ணிலும்   தெளிக்கலாம்.
  • மண்ணில் தெளிக்கும் போது கைத்தெளிப்பானை பயன்படுத்துவது நல்லது.
  • கைத் தெளிப்பான் விசைத் தெளிப்பான் இரண்டையும்       பயிர்களுக்குத் தெளிக்க பயன்படுத்தலாம்.   

குப்பைகளை மக்கச் செய்வது எப்படி? 
  • நீளம் 10 அடி  அகலம் 3.5 அடி உடைய பாத்தியில் குப்பைகளை அரை அடி உயரத்திற்கு அடுக்காக போடவும்.
  • இ.எம்.  இரண்டாம் நிலைக் கரைசலை, குப்பை நன்கு நனையுமாறு  தெளிக்கவும்.
  • மீண்டும் அரை அடி உயரத்திற்கு. குப்பையினை பரப்பவும்.
  • இவ்விதம் குப்பைகளை 5 அல்லது 6 அடுக்குகள் பரப்பலாம்.
  • ஓவ்வொரு அடுக்கின் மீதும் குப்பைகள் நன்கு நனையுமாறு,        இ.எம். கரைசலை தெளிக்கவும்.
  • பத்து சதுர அடிக்கு 2 லிட்டர் இ.எம். கரைசல் தேவைப்படும்.
  • குப்பைக் குவியலின் உயரம் 3 முதல ;4 அடி உயரம் இருக்கலாம். 
  • குப்பைக் குவியலின் மீது தென்னை ஓலை, பனை மட்டை, வாழைச் சருகு, மற்றும் கோணிப்பைகள்; கொண்டு மூடவும். 
  • குவியலில் ஈரம் தொடர்ந்து இருக்க வேண்டும்.
  • இதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்க   வேண்டும். 
  • குப்பையில் 2 பங்கு பண்ணைக் கழிவுகளும் ஒரு பங்கு சாணக் கழிவும் இருக்க வேண்டும் 
  • பசுந்தழைகள் அதிகம் இருந்தால் மக்கிய குப்பையில்   தழைச்சத்து அதிகம் இருக்கும். 
  • இ.எம். கரைசல் தெளிப்பதால் குப்பைகள் விரைவாக மக்கி உரமாகும்.         
  • முழுவதும் உரமாக மாறிய பின் இதனை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
  • 2 முதல் 3 டன்னை  1 ஏக்கர் வயலில் இடலாம்.
  • காய்கறி, பூப்பயிர் மற்றும் பழச் செடிகளுக்கு செடிகளின் வயதுக்;கு ஏற்ப 2 முதல் 5 கிலோ வரை இடலாம்.
  • வயதுக்கு ஏற்ப பழ மரங்களுக்கு 5 முதல் 10 கிலோ வரை     போடலாம்.
இ எம் - நுண்ணுயிர் கூட்டுரம் 
(Image Courtesy: Thanks Googlea)
----------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment