Select Your Favorite Topic! Enjoy Reading!!

Wednesday, May 25, 2016

1. அரளி சாகுபடி


Image Courtesy: Thanks Google


1. அரளி சாகுபடி

  •  அதிக அக்கறை தேவைப்படாத பயிர்
  •  பூச்சி , நோய்கள் எதுவும் அதிகம் தாக்குவதில்லை
  •  நாள் ஒன்றுக்கு ஒரு ஹெக்டேருக்கு சராசரி  100 கிலோ மகசூல் கிடைக்கும்
2. எங்கு பயிர் செய்யலாம்  ..?

•    வெப்பமான பகுதிகள்.
•    செம்பொறை  மண்;, கரிசல்மண்,  இருமண்பாடான மண்.
•    வடிகால் வசதி அவசியம் தேவை.

3. என்ன ரகம் போடலாம் ..?

    ஒற்றை ரோஸ்  அரளி.
    ஒற்றை வெள்ளை அரளி.
    ஒற்றை சிவப்பு அரளி.

4. குச்சிகளை நடவு செய்யுங்கள்

•    பென்சில் பருமன் உள்ள குச்சிகளை 60 செ.மீ.  நீளத்திற்கு நறுக்குங்கள்.
•    இந்த குச்சிகளை நடுங்கள்.
•    வேர்க்குச்சிகளையும் நடலாம்.

5. எப்படி  நடுவது ..?

•    குச்சிகளை  ஜுன் ஜுலை  மாதங்களில் நடுங்கள். பென்சில் பருமன் குச்சிகளின் இருமுனைகளையும் மண்ணில் புதைத்து,  நடுங்கள்.
•    வேர்க்குச்சிகளை குழிகளில் இரண்டு மீட்டர் இடைவெளியில் நடுங்கள்.
•    குழிகளை இரண்டு மீட்டர் இடைவெளியில் அமையுங்கள்.
•    குழிகள்  30 செ.மீ.  நீளம், 30 செ.மீ. அகலம்.  30 செ.மீ.  ஆழம்  இருக்க வேண்டும்.
•    நடவுக்கு பின்னர் தொழுஎரு, செம்மண் குழியிலிருந்து  எடுத்த மண் ஆகியவற்றைக் கலந்து குழிகளை நிரப்பவேண்டும்.

6. நீர்ப்பாசனம்

•    தேவைக்கு ஏற்ப பாசனம்  கொடுங்கள்.

7. உரம் தேவை இல்லை

•    தொழு எரு மட்டும் 10 டன்  இடுங்கள். 
•    ஜனவரியில் ஒரு முறையும்.  ஆகஸ்டில் இரண்டாம் முறையும், தொழுஎரு இடுங்கள்.

8. பூச்சிப் பூசண  மருந்து  தேவை  இல்லை

•    அரளியை எந்தப்பூச்சியும், நோயும்  அதிகம் தாக்குவதில்லை.

9. ஆண்டு முழுவதும்  பூக்கும்

•    தொடர்ந்து பூக்கும்.
•    ஏப்ரல், மே,  ஜுன், ஜுலை ,ஆகஸ்ட்  மாதங்களில்  பூக்கும்.
•    நடவு செய்த நான்காவது மாதத்திலிருச்து பூக்கத் தொடங்கும்.

10. அறுவடை

    தினமும் பறிக்கலாம்.
    ஒரு ஹெக்டரில்  ஒருநாளில்  100 முதல் 125 கிலோ  பூக்கள் கிடைக்கும்.
    பறித்த பூக்களை  பக்கத்து மார்க்கெட்டில் விற்பனை செய்யலாம்.
               
Image Courtesy: Thanks Google












No comments:

Post a Comment