Image Courtesy: Thanks Google |
- மானாவாரி நிலங்களில் தானாக வளர்ந்து கனி கொடுக்கும் சிறு பழமரம்.
- இதன் இலை, விதை, முற்றாக் கனி, மற்றும் வேர்களை பல நாடுகளில் பூச்சிக் கொல்லிகளாக பயன்படுத்துகிறார்கள்.
- பூச்சிகளைக் கட்டுப்படுத்தினாலும், மனிதர்களுக்கோ நன்மை செய்யும் பூச்சிகளுக்கோ தீங்கு செய்வதில்லை.
- 50 கிராம் சீத்தா இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி அத்துடன் 4 மில்லி துணி சோப்புக் கரைசலை நன்கு கலக்கி பயிரில் தெளிக்கலாம்.
- 100 கிராம் ஓடு நீக்காத விதைகளை நன்கு பொடித்து 1 லிட்டர் நீரில் கலந்து ஒரு இரவு முழுக்க ஊற வைத்து அடுத்த நாள் காலையில் விதைக் கரைசலை வடிகட்டி இத்துடன் 4 மில்லி துணி சோப்புக் கரைசல் கலந்து பயன்படுத்தலாம்.
- சீத்தா விதைஎண்ணெய் 30 மில்லியுடன் 1 லிட்டர் தண்ணீரை கலந்து அத்துடன் 4 மில்லி துணி சோப்புக் கரைசலைக் கலந்து பயிருக்குத் தெளிக்கலாம்
- முட்டைக்கோசுப்புழு, புரோடீனியாபுழு, தானியத்தை சேதப்படுத்தும் வண்டுகள், பயறுகளைத் துளைக்கும் வண்டுகள், பருத்தியில் பஞ்சினை தாக்கும் பூச்சிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சக்தி சீத்தாவில் உள்ளன.
- சீத்தா இலை, முற்றாதகனி. விதை, எண்ணெய், மற்றும் வேரில் உள்ளவை தொடு நஞ்சாகவும், குடல் நஞ்சாகவும் செயல்பட்டு பூச்சிகளை அழிக்கின்றன.
4. ராம்சீத்தா
- ராம்சீத்தா இலைகளில் பூச்சிகளைக் கட்டுப் படுத்தும் சக்தி நிரம்ப உள்ளது.
- இதன் விதைகள் , விதை எண்ணெய், முற்றாத காய்கள், அனைத்தும் சீத்தாவைப் போலவே பூச்சிகளைக் கொல்லும் திறன் கொண்டவை.
- ராம்சீத்தாவின் முற்றாத காய்களிலும், பூச்சிக் கொல்லியின் சக்தி உள்ளது.
- புகையிலைக்கு சமமானதொரு நஞ்சினை உடையது ராம்சீத்தாவின் விதைகள்.
4.1. விதைத்தூள் (SEED POWDER)
- ராம்சீத்தாவின் விதைகளை பொடி செய்து தூவுவதன் மூலம் அசுவணிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
- இதன் எண்ணெய்க் கரைசலை தெளித்து நெல் புகையான் பூச்சிகளைக் கட்டுப் படுத்தலாம்.
4.2. இளங்காய்கள்
- இலை மற்றும் இளம் காய்களை நசுக்கி நீர்விட்டு அரைத்து சாற்றினை எடுத்து தெளித்து பரவலாக பலவிதமான பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
Image Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment