Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, May 27, 2016

4. முருங்கை சாகுபடி



Image Courtesy: Thanks Google

1. தெரிந்து கொள்ளுங்கள்
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் - ஏ  சத்து வுடையது.
ஒரே வருடத்தில் காய்க்கக் கூடிய   செடிமுருங்கை ரகமும் உண்டு.

2. எங்கு பயிரிடவாம் ..?
எல்லாமண் வகைகளிலும் பயிரிடலாம்.
மணல் கலந்த வண்டல்மண்.

3. என்ன ரகம் போடலாம் ..?
ஜாப்னா  ரகம்  60 --  90  செ.மீ.  நீளமுள்ள சதைப்பற்றான காய்கள்.
சாவக  முருங்கை
மிகவும் நீளமான  காய்கள்  90 -- 120 செ.மீ. 
செம்முருங்கை
காய்களின் நுனி சிவந்து இருக்கும்.  ஆண்டு முழுவதும் காய்க்கும்.
காட்டு முருங்;கை
காய்கள் குட்டையானவை.   சதைப்பற்று இல்லாத காய்கள்;.
பால்  முருங்கை 
சதைப்பற்று அதிகம் வுள்ளது.    
கொடிக்கால் முருங்கை
காய்கள் 15 -- 20 செ.மீ.  நீளம்.

குடுமியான் மலை   ( கே. எம்.  --  1  )
காய்கள் குட்டையானவை.
20 செ.மீ.  நீளமும்,  சுவையும்,  சதைப்பற்றும் உள்ளவை.
500  காய்கள் தரும்.
பி.கே.எம்.1   (பெரியகுளம் 1)
செடி முருங்கை ரகம். 5 மீட்டர்  உயரம் வளரும்.
100  நாட்களில்  பூக்கும்  100   நாட்களில் அறுவடை .
65--70  செ.மீ.  நீளமுள்ள காய்கள் தரும்.
சதைப்பற்றுள்ளவை.

4. நிலத்தை  உழுது எரு போடுங்கள்
நிலத்தை  3 - 4  முறை நன்கு வுழவும். 

5. தேவைக்கு ஏற்ப இயற்கை உரம் இடுங்கள்.
6. நீர்பாசனம்  கொடுங்கள்
விதைப்பதற்கு முன் குழிகளுக்கு நீர் பாய்ச்சவும்.
விதை முளைக்கும் வரை 10 --15 நாட்களுக்கு  ஒரு முறை நீர் பாய்ச்சலாம்.
மண்ணில் ஈரம் குறைந்தால் பூக்கள் உருவாவது குறையும்.

7. ஊடு பயிர் செய்யலாம்.
நடவு செய்த 3 -- 4  மாதங்கள்  தட்;டைப்பயறு, உளுந்து,  பாசிப்பயறு, வெண்;;டை , கீரை  பயிரிடலாம்.

8 மாதத்திலிருந்து  அறுவடை செய்யலாம்
பல ஆண்டு மரம்.  6 முதல் 9 மாதங்களில் அறுவடைக்குவரும்.
கன்றுகளின் மூலம் இனப்பெருக்கம் செய்தால் இரண்டாம் ஆண்டு 80 -- 90  காய்கள் கிடைக்கும்.   மாதத்திற்கு  500  --  600  காய்கள்  கிடைக்கும்.
செடி முருங்கை ஆறாவது மாதம் அறுவடைக்கு வரும்.

9. உங்கள் கவனத்திற்கு
15 ஆண்டுகளுக்குப் பிறகு  புதிய மரங்களை நடலாம்  அல்லது  0.3 --  0.4  மீட்டர்  அளவு விட்டு வெட்டி  விடவும்.
மரம் ஒன்றிற்கு  ஒவ்வொரு வருடமும் 25 கிலோ மட்கிய  தொழு வுரம்,  தழை , மணி, சாம்பல் சத்து  இடுங்கள்.
                                                                             

Image Courtesy: Thanks Google

No comments:

Post a Comment