Image Courtesy: Thanks Google |
1. எப்படிப்பட்ட நிலம் ஏற்றது..?
- ஈரம் மிகுந்த பருவநிலை.
- நல்ல வடிகால் வசதி.
- இருமண் பாட்டு நிலம்.
- களிமண் நிலம் ஏற்றதல்ல.
2. என்ன ரகம் போடலாம்..?
- ஊட்டி 1, ஜி. 41, ஜி. 50, மற்றும் எச். ஜி. ரகம்.
- ஊட்டி 1
- ஒவ்வொரு பூண்டிலும் 20 - 25 பற்கள் இருக்கும்.
- நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது.
3. பூண்டு பயிரிட என்ன செய்ய வேண்டும் ?
- பூண்டு பயிருக்கு விதைகள் கிடையாது.
- விதைப்பூண்டுகளை 1 முதல் 2 மாதங்களுக்கு முன்பே சேமித்து வைக்க வேண்டும்.
- உறக்க நிலை நீக்கப்பட்டு விதைப் பூண்டுகளை பயன்படுத்தலாம்.
4. நிலத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் ..?
- 2 முதல் 3 முறை உழவு செய்யுங்கள் அல்லது ஆழமாக கொத்தி விடுங்கள்.
- வட்டப்பாத்தியோ அல்லது பார்களோ அமைத்துவிடுங்கள்
- பார்களுக்கு இடையில் 30 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.
- செடிகளுக்கிடையே 10 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.
- ஒரு ஹெக்டருக்கு நடவு செய்ய 500 - 600 கிலோ விதைப் பூண்டு பற்கள் தேவை.
5. எப்படி நடுவது ..?
- சமவெளிப்பகுதியில் ஆகஸ்ட் -- செப்டம்பர் மாதங்கள் விதைக்க ஏற்றது.
- மலைப்பகுதிகளில் மார்ச், ஏப்ரல் மாதங்கள் ஏற்றது.
- விதைப் பூண்டுகளை 24 மணி நேரம் நீரில் ஊற விடுங்கள்.
- பின்னர் எடுத்து பார்களின் இருபுறமும் நடவும்.
6. தேவைக்கு ஏற்ப இயற்கை உரங்களை இடுங்கள்.
7. வாரம் ஒரு தண்ணீர் கொடுங்கள்
- நடவு செய்யும் முன்பு லேசான நீர்பாசனம் செய்ய வேண்டும்.
- நடவு செய்த 3 ஆம்நாள் நீர் பாய்ச்சுங்கள்.
- பின்னர் வாரம் ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
8. பிறகு என்ன செய்ய வேண்டும் ..?
- களைக் கொத்து கொண்டு களைகளை நீக்கி சுத்தம் செய்யுங்கள்.
9. இயற்கைமுறையில் பயிர்ப் பாதுகாப்பு செய்யுங்கள்
10. வெள்ளைப்பூண்டை தாக்கும் பூச்சிகள்
- அசுவணிப்பூச்சி
- இலைச் சிலந்தி
11. அறுவடை
- நடவு செய்த 4 - 6 வாரங்களில் அறுவடைக்கு தயாராகும்.
- மண்வெட்டிக் கொண்டு பூண்டுக்கிழங்குகளைத் தோண்டி எடுக்கவும்.
- சுத்தம்செய்து காற்றோட்டமான இடங்களில் சேமியுங்கள்.
- ஹெக்டருக்கு 8 -12 டன் மகசூல் கிடைக்கும்.
Image Courtesy: Thanks Google |
No comments:
Post a Comment