Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, May 27, 2016

6.கோக்கோ சாகுபடி

Image Courtesy: Thanks Google

1. கோக்கோவை எங்கு  சாகுபடி செய்யலாம் ..?
  • வருடம் முழுவதும் சீராக மழை பெய்யும் காடுகளில்;.
  • குளிர்ந்த  மண்ணும் ஈரப்பதமுள்ள காற்றும்  உள்ள இடங்களில்.
  • மணிச்சத்தும்  சாம்பல் சத்தும் உள்ள மண்ணில்.
2. கோக்கோ   வகைகள்

  • கூர்மையான  நுனி மெல்லிய ஓடு உள்ளவை, உயர்ந்த தரம்.
  • தட்டையான நுனி, கடினமான ஓடு உள்ளவை  நடுத்தர     தரம்.
  • குட்டையான  அளவு, பள்ளம் இல்லாத ஓடு உள்ளவை   குறைந்த தரம். 


3. விதை தயாரிப்பது எப்படி ..?

  • நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • கோக்கோ விதை சீக்கிரம் முளைக்கும் சக்தியை இழந்து விடும். 
  • கோக்கோ பழங்களிலிருச்து விதைகளைப் பிரியுங்கள்.
  • விதைகளை சாம்பல் கலந்து உலர்த்துங்கள். 
  • தொழுவுரம் மற்றும் சிறிது தாவரசாம்பல் கலந்த மண்ணை  மூங்கில் கூடைகளில்  போடுங்கள். 
  • ஒரு கூடைக்கு  ஒரு விதையை  விதையுங்கள். 
  • விதைத் தழும்பு  கீழ்ப்பாகம்  இருக்கும்படி விதையுங்கள்.


4. போத்து நடும் முறை

  • அதிகம் முதிராத போத்துக்களை எடுங்கள். 
  • கட்டைவிரல் நீளமுள்ளவை போதும்.
  • ஒன்று அல்லது இரண்டு இலைகள் உள்ள 
  • போத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள். 
  • இயற்கை  உரம்கலந்த தண்ணீரில் ஒரு நிமிஷம் போத்துக்களை நனையுங்கள்.
  • போத்துக்களை மணல்பாத்திகளில்  நடுங்கள்.
  • இந்தப் போத்துக்களில் வேர் வந்தவுடன் முன்பு சொன்ன மூங்கில் கூடைகளில் எடுத்து நடுங்கள்.


5. மொட்டு கட்டும் முறை என்றால் என்ன ..?

  • முதிர்ச்சியடைந்த  நுனித்தண்டிலுள்ள மொக்குகளைச்   சிறிது பட்டையுடன்  எடுத்துக் கொள்ளுங்கள். 
  • நான்கு மாத  வயதுடைய கோக்கோ நாற்றினை தண்டுப்பகுதியில் மொக்கை வைத்து  ஒட்டுக்கட்ட வேண்டும்.
  • மூன்று  வாரங்கள் போகட்டும். இப்போது  ஒட்டு கட்டிய   நாரை  அவிழ்த்து விடுங்கள்.
  • ஒட்டுக்கட்டியதற்கு  அரைச்சாண் மேலே  வேர்க்கன்றின் தண்டுப் பகுதியை வெட்டிவிடுங்கள்.
  • 15 நாட்கள் கடக்கட்டும்.
  • இப்போது குறுத்து வராத செடிகளில்  மொக்குக்கு நீர்     பாசனம்  மிகமிக அவசியம்.


6. குழிஎடுங்கள்

  • நிழல்தரும் மரங்கள் உள்ள காடுகளில் 11 ஒ 11  அடி இடைவெளியில் குழிகள் தோண்டி வைத்திருக்க வேண்டும்.
  • இரண்டு மாதங்களுக்கு முன்  வாழை  அல்லது  மரவள்ளியைப்   பயிரிடுங்கள்.



7. குழிகளில்  நடுங்கள்

  • மூங்கில்  கூடைகளிலிருந்து  செடிகளை மண்ணோடு  எடுத்து குழிகளில்  வையுங்கள்.

8. தேவைக்கு ஏற்ப இயற்கை உரம் இடுங்கள்

  • 9. கவாத்து செய்யுங்கள்  
  • பலா மரத்தினைப்போல்  கோக்கோவின்  பூக்கள் அடிமரத்திலும் கிளைகளின்பட்டையிலும் பூத்துக் காய்க்கும்.  
  • அதனால்  பூக்கள் இல்லாத  பயனற்ற  சிறு சிறு சிம்புகளை  குச்சிகளை  வெட்டி  விடவும்.

10. கோக்கோ எப்போது காய்;க்க  தொடங்கும்  ..?

  • நான்கு அல்லது ஐந்து வருடங்களில் காய்க்கத் தொடங்கும்.
  • ஆறு வருடங்கள் கழித்து அதிகமாக காய்க்கும். 

11. காய்களை எப்போது அறுவடை செய்யலாம் ..?                                                

  • காய்கள் நன்றாக முற்றி பழுத்து  மஞ்சள் அல்லது   ஆரஞ்சு நிறம்  வந்தவுடன் கத்திகொண்டு  அறுத்து எடுங்கள்.
  • கையினால் பிடித்து இழுத்தால்,  அடிமரத்திலும்,  கிளைகளிலும்  பட்டைகள்  உறிந்துவிடும். 
  • அதனால்  அடுத்து  பூப்பது குறைந்து விடும். 

12. என்ன நோய் தாக்கும்  ..?

  • தண்டு வீக்க நோய்.
  • காய்  கருகல் நோய்.

13. இயற்கைமுறைகளை கைக்கொண்டு பூச்சி மற்றும் பூசணங்களை கட்டுப்படுத்துங்கள்

   
Image Courtesy:Thanks Google






















No comments:

Post a Comment