Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, May 27, 2016

8. முந்திரி சாகுபடி.

Image Courtesy: Thanks Google

  • மிக மோசமான மண்ணிலும் வளரும்.
  • மிகுந்த வறட்சியுள்ள பகுதிகளிலும் வளரும்.
  • நல்ல வருமானம் தரும்.

1. எங்கு சாகுபடி செய்யலாம் ..?
  • வெப்பமான பகுதி.
  • குறைந்த மழை.
  • வடிகால் வசதியுள்ள எல்லா நிலத்திலும் வரும்.
  • பனிப்பெய்யும் மலைப் பகுதி  ஏற்றதல்ல.

2. ஒட்டுக்கன்றுகளை நடுங்கள்.
  • ஒட்டுக் கன்றுகள்  தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் கிடைக்கும்.
  • விதை மூலமும் பயிர் செய்யலாம்.
  • ஒட்டுக்கன்றுகள் உடனடி மகசூலும், அதிக மகசூலையும் தரும்.
  • நிலத்தை நான்கு முறை உழுங்கள்.

7 மீட்டர் இடைவெளியில் குழி எடுங்கள்.
  • குழியின் அளவு நீளம் 45 செ.மீ.
  • அகலம் 45 செ.மீ. ஆழம் 45 செ.மீ.
  • 10 கிலோ தொழு உரத்துடன் குழியிலிருந்து எடுத்தமேல் மண்ணைக்கலந்து குழியை நிரப்புங்கள்.
  • பின்னர் நாற்றுக்களை நடுங்கள்.
  • மழைக்காலத்தில் நடுங்கள்.

3. இயற்கை உரம் இடுங்கள்

4. உங்கள் கவனத்திற்கு  சில  குறிப்புக்கள்
  • மழைக்காலத்தில் மரங்களுக்கு இடையே உழவு செய்யுங்கள். தட்டைப்பயறு,  உளுந்து போன்றவற்றை பயிரிடலாம் 
  • சணப்பு, கொளிஞ்சி ,  பசுந்தாள்  உரப் பயிர்களை மரங்களுக்கிடையே பயிரிடலாம்.
  • பசுந்தாள் உரப்பயிர்கள் பூக்கும் முன் மடக்கி உழவு செய்யலாம்.

5. என்ன பூச்சி  தாக்கும் ..?
  • தேயிலைக்கொசு
  • தண்டு துளைப்பான் 
  • வேர் துளைப்பான்  
  • துளைப்பான்; புழு 
  • இலைகளையும் பூங்கொத்துக்களையும்  தாக்கும் புழுக்கள்

6. என்ன நோய் தாக்கும் ?
  • பிங்க்  நோய்

7. எப்போது அறுவடை செய்யலாம் ..?
  • காய்கள் பச்சை நிறம் மாறி  முழுச்சிவப்பாகவோ அல்லது முழு
  • மஞ்சளாகவோ  அல்லது மஞ்சள் சிவப்பு கலந்த நிறமாகவோமாறியபின்  அறுவடை செய்யவேண்டும்.
  • சிவப்பு மஞ்சள் பழத்தின்மீது ஒட்டியிருக்கும் முந்தரிகொட்டையை திருகி தனியே பிரித்து அறுவடையை முடிக்க வேண்டும்.

8. மரம் எப்போது அறுவடைக்கு வரும் ?
  • நான்காம் ஆண்டிலிருந்து காய்க்கத் தொடங்கும்.
  • எட்டாம் ஆண்டிலிருந்து அதிகமாக காய்க்கும்.
  • நூறு ஆண்டுகளுக்கு பிறகு பழைய மரங்களை வெட்டிவிட்டு பதிய மரங்களை நடவேண்டும்.
Image Courtesy: Thanks Google

          




No comments:

Post a Comment