பழப்பயிர்களுக்கு
சொட்டு நீர்ப்பாசனம்
DRIP IRRIGATION
FOR FRUIT CROPS
சொட்டு நீர்ப்பாசனம்
DRIP IRRIGATION
FOR FRUIT CROPS
நம்ம ஊரில்
பழப்பயிர்களுக்கு
சொட்டுநீர்ப்பாசனம்
எவ்வளவு கொடுக்கலாம் ?
பழப்பயிர்களுக்கு சொட்டுநீர்ப்பாசனம் போட்டுப்பாருங்க, ஏகப்பட்ட தண்ணீரை மிச்சப்படித்தலாம்.
ரொம்பக் குறைவாக தண்ணீர் கொடுத்தால் போதும்.
சமீபத்துல இதப்பத்தி தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலை கழகத்துல ஒரு ஆராய்ச்சி செய்தாங்க.
கிட்ட்த்தட்ட 40 முதல் 68 சதம் தண்ணீரை மிச்சப்படுத்த முடியும்னு கண்டுபிடிச்சி இருக்காங்க.
அதுமட்டுமில்ல, சொட்டுநீர்ப்பாசனம் அதிகபட்சமா 98 சதம் வரைக்கும் பயிர் மகசூலை அதிகரிக்க முடியும்.
மானாவாரி நிலங்களுக்கும், அதுவும் குறைவாக நீர்வசதி உள்ள நிலங்களுக்கும் சொட்டுநீர்ப்பாசனம் ஒரு வரப்பிரசாதம்.
மழைக்காலத்த விட்டுட்டு மற்ற நாட்கள்ல சொட்டுநீர்ப்பாசனம் கொடுக்கலாம்.
பழப்பயிர்களுக்கு பூக்கும் பருவத்திலயும் காய்க்கும் பருவத்திலயும் தட்டுப்பாடு இல்லாம பாசனம் கொடுக்கணும்.
அப்படிக் கொடுத்தால், பூக்கள் அதிகம் கொட்டாது, காய்ப்பிடிப்பு அதிகரிக்கும்.
பூச்சி நோய்கள் பயிர்களை அதிகம் தாக்காது, களைகள் கண்டபடி வளராது.
பழங்களோட இனிப்பு சுவை, பழங்களின் அளவு, ஒட்டு மொத்தமான தரம் எல்லாம் அதிகரிக்கும்.
ஆனால் அறுவடைக்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன்னாடி பாசனம் கொடுக்க்க் கூடாது.
மா, வாழை, நாரத்தை வகைப்பழங்கள் (சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை, ஊறுகாய் நாரத்தை), கொய்யா, சப்போட்டா, பெருநெல்லி, திராட்சை, ப்ப்பாளி ஆகிய பழப்பயிர்களுக்கு ஒரு மரத்திற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவை ?
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் இதனை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து கொடுத்திருக்கும் அட்டவணையைப் பாருங்கள்.
வ.எண்
|
பயிர்
|
நீர் அளவு
லிட்டரில்
|
1
|
மா
|
30 - 50
|
2
|
வாழை
|
20 - 25
|
3
|
நாரத்தை வகை
|
22 - 30
|
4
|
கொய்யா
|
22 - 30
|
5
|
சப்போட்டா
|
20 - 30
|
6
|
பெருநெல்லி
|
15 - 25
|
7
|
திராட்சை
|
15 - 25
|
8
|
பப்பாளி
|
15 - 25
|
காய்ப்புக்கு முன்னால் இள வயசு மரங்களுக்கு மேலே சிபாரிசு செய்த அளவில் மூன்றில் ஒரு பங்கு கொடுத்தால் போதும்.
மரங்கள் வளர வளர கொடுக்கும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.
உலகத்திலேயே விவசாயத்தில் அதிக லாபம் பார்க்கும் நாடு இஸ்ரேல். அதற்குக் காரணம் அங்கு விவசாயிகள் 100 க்கு 100 சதம் பயன்படுத்துவது சொட்டுநீர்ப்பாசனம்.
ஆதாரம்:
No comments:
Post a Comment