விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை
கட்டுரை
அலக்ஸாண்டர் என்பவர் யார் ? அவர் ஒரு மாவீரன். குதிரையும் யானையும் அலக்ஸாண்டரின் நடைவண்டிகள். வேலும் வாளும்தான் அலக்ஸாண்டரின் நோட்டு புத்தகங்கள். தலைக்கவசமும் மார்புக் கவசமும்தான் அவ ரின் சீருடைகள். போர்க்களங்கள் விளையாட்டு மைதானங்கள். கிரேக்க ஞானி அரிஸ்ட்டாட்டில்தான் அலக்ஸாண்டரின் பள்ளிக்கூடம்.
அலக்ஸாண்டர் மாவீரன் மட்டுமல்ல. ஒரு சிறந்த வைத்தியனும்கூட. ஒரு கரித்துண்டை கையில் கொடுத்தால் கூட பாறைகளில் கவிதைகள் மாதிரி ஓவியம் தீட்;டுவதில் வல்லவர் அலக்ஸாண்டர்.
அலக்ஸாண்டர் ஒரு மாவீரன் என்றுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு ஞானியும் கூட. அறுவது வயதில் ஞானிகள் உணர்ந்ததை அவர் முப்பது வயதில் உணர்ந்தார்.
எதை எடுத்துவந்தோம் ? எதை எடுத்துச்செல்ல என்கிறது பகவத்கீதை.
“ உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். ”
என்று சினிமாவில் எம்.ஜி.ஆர். பாடுவதாக அமைந்த அற்புதமான பாட்டு அது. அலக்ஸாண்டர் தன்னையும் அறிந்திருந்தார். இந்த உலகத்தையும் அறிந்திருந்;தார்.
அவர் சாகும் தருவாயில் சொன்னது இது. தான் இறந்து விடுவோம் என்று தெரிந்தது அவருக்கு. எந்த மருத்துவமும் தன்னை காப்பாற்றாது என்றும் தெரிந்தது. அப்போது சொன்னார்.
'நான் என் வாழ்வில் பெரும் செல்வத்தை சம்பாதித்தேன். அதற்காக அநியாயம்கூட செய்தேன். இன்னும் சில மணித்துளிகளில் நான் மரணமடைவேன். என்னை இந்த மண்ணுக்குள் புதைக்கும் போது என் கைகள் இரண்டையும் வெளியே எடுத்து வைத்து புதையுங்கள். என் விரல்களை விரித்து பிரித்து வையுங்கள். என் கைகளில் விரல்களைத்தவிர வேறு எதையும் அலக்ஸாண்டர் கொண்டு செல்லவில்லை என்று தெரிய வேண்டும்"
உலகத்தை தன் விரல்முனையில் வெற்றி கொண்ட அலக்ஸாண்டர் சாகும் போது இதைத்தான் சொன்னார்.
அலக்ஸாண்டர் இறக்கும் தருவாயில்ää பட்டினத்தாருக்கு சமமான ஞானவானாக இருந்தார். அதற்கு காரணம் அவர் கற்ற கல்வி. அவருக்கு பாடம் சொல்லித் தந்த குருநாதர். அலக்ஸாண்டரின் குரு அரிஸ்டாட்டில். அரிஸ்டாட்டிலின் குரு பிளாட்டோ. பிளாட்டோவின் குரு சாக்ரட்டீஸ்.
பைபிளும் இதைத்தான் சொல்லுகிறது.
வானத்தில் பறவைகளைப் பாருங்கள். அவை தனக்கென விதைப்பதுமில்லை… அறுப்பதுமில்லை…. சேமித்து வைப்பதுமில்லை…
No comments:
Post a Comment