Select Your Favorite Topic! Enjoy Reading!!

Sunday, May 29, 2016

11. கோழிக்கழிவு மண்புழு உரம் (POULTRY WASTE CUM VERMI COMPOST)

Image Courtesy: Thanks Google

  • கோழிக் கழிவைக் கொண்டும் மண்புழு உரம் தயரிக்கலாம்
  • பசும் சாணத்திற்கு பதிலாக மக்கிய கோழிக் கழிவை உபயோகிக்கலாம்.
  • பொட்டாசியம் கால்சியம் மக்னீசியம் போன்ற நுண்;சத்துக்கள் இதில் உள்ளன.
  • நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவை மற்ற இயற்கை எருக்களில்  இருப்பதைவிட அதிகம் உள்ளது.                                                           
  • மண்ணில் கரிம சத்தை அதிகரிக்கிறது.
  • நீர் உறிஞ்சும் தன்மை மேம்படுகிறது.
  • பிராணவாயுவைக்  கூட்டுகிறது..
  • உவர் மற்றும் களர்  நிலங்களை  சீர்திருத்துகிறது.

தேவைப்படுபவை                           

  • மரத்தடியில் நிழல் உடைய ஒரு இடம் அல்லது ஒரு சிறு கொட்டகை
  • 1000 முதல் 1500 மண்புழுக்கள், மக்கிய கோழி எரு                                   
  • போதுமான தண்ணீர்.
  • பசுந்தழைகள, புற்கள் மற்றும் இலைச்சருகுகள்.


செயல் விளக்கம்

  • மூன்றரை அடி அகலம் 10 அடி நீளமும் கொண்ட இடத்தில் புழுப்படுக்கை அமையுங்கள். 
  • புழுப்படுக்கை என்பது மண்புழுக்களுக்கு உண்ணவும் உறங்கவுமான இடம்.     
  • மூன்றரை அடி அகலம் 10 அடி நீளத்திற்கு  அரை அடி ஆழுத்திற்கு பள்ளம் எடுக்கவும்.
  • அந்த அரை அடி ஆழமான பள்ளத்தில் 2 அங்குல உயரத்திற்கு மணலை பரப்புங்கள்.
  • மணல் பரப்பின் மீது  தேங்காய் உறி மட்டைகளை அதன் முதுகுப்புறம் கீழே இருக்குமாறு அடுக்கவும்.
  • இப்படி அடுக்குவதற்கு 400 முதல் 500 உறிமட்டைகள் தேவைப்படும்.
  •  உறி மட்டைகளின் மீது 6 அங்குல உயரத்திற்கு மக்கிய கோழி உரத்தினை பரப்புங்கள்.
  • அதன்மீது  2 அல்லது 3 குடம் தண்ணீர் தெளியுங்கள்.
  • தண்ணீரை தெளித்தப் பின்  சேகரித்து வைத்திருக்கும் பசுந்தழைகளை ஒரு அடி உயரத்திற்கு பரப்பவும்.
  • இலை தழைகளைப் போடும்போது  பெரிய கிளைகளைத் தவிர்க்க வேண்டும்.
  • இலை தழை மற்றும் சருகுகளை பரப்பிய பின்னால் அதன்மீது சாணக் கரைசலை  சோரத் தெளிக்க வேண்டும்.
  • அதன்மீது மறுபடியும் 6 அங்குலம் மக்கிய கோழிக்கழிவை  போடவும்.
  • மீண்டும் 1 அடி பசுந்தழை  மற்றும் சருகுகள்  சாணக்கரைசல் தெளிப்பு   என்று இரண்டாவது  அடுக்கையும்  போடவும். 
  • இப்படியாக 2 அல்லது 3 அடுக்குகள் போட்டு போதுமான தண்ணீர் தெளிக்கவும். 
  • சுமார் 3 அல்லது 4 அடி உயரம்வரை    புழுப் படுக்கையை தயார் செய்த பின்னால்  மண்புழுக்களை விடவும். 
  • கடைசியாக  புழுப்படுக்கையை  ஈர சாக்கு கொண்டு மூடி வைக்கவும்.
  • பின்னர் தினசரி புழுப்படுக்கையின் மீது போதுமான தண்ணீர் தெளிக்கவும்.
  • ஐம்பது முதல் 60 நாட்களில் புழுப்படுக்கையில்  இடப்பட்ட கழிவுகளை முழுமையான உரமாக மாற்றிவிடும்.
  • பின்னர் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு  புழுப்படுக்கையின் மேல்பகுதியில் இருக்கும் மண்புழு உரத்தை  மட்டும் சேகரிக்கலாம். 
  • மண்புழுக்கள் புழுப்படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.
  • இப்போது புழுப்படுக்கையில் கிட்டத்தட்ட 2 மடங்கு மண்புழுக்கள் அதிகரித்திருக்கும்.
  • அதே புழுப்படுக்கையை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் மண்புழு உரம்          தயாரிக்கலாம்.                                             

கவனிக்க வேண்டியவை
•    புழுப்படுக்கையில் ஈரம் இவ்லையென்றால் புழுக்கள் இறந்துவிடும்.
•    ஈரம் அதிகம் இருந்தாலும் புழுக்கள் இறந்துவிடும்.
•    புழுப்படுக்கையின் அடியில் போடப்பட்டிருக்கும் தேங்காய் உறி மட்டைகளும் மணலும் அதிகப்படியான நீரை உறிஞ்சிக் கொள்ளும்.
•    புழுப்படுக்கைக்கு நிழல் அவசியம் வேண்டும்.
•    அதிகப்படியான வெப்பத்தை புழுக்கள் தாங்காது.
•    பாம்பு, பறவைகள,; எலி, எறும்புகள,; பிள்ளைப்பூச்சி போன்றவை மண்புழுவை உணவாகக் கொள்ளும்.
அவற்றிலிருந்து நாம் இவற்றை பாதுகாக்க வேண்டும்.

Image Compost: Thanks Google

No comments:

Post a Comment