Select Your Favorite Topic! Enjoy Reading!!

Sunday, May 29, 2016

12. அப்பார்ட்மெண்ட் மற்றும் வீடுகளில் மண்புழு உரம் தயாரித்தல் - VERMI COMPOST IN APARTMENTS

Image Courtesy: Thanks Google

சமையலறைக் கழிவுகளைக் கொண்டு வீடுகளில் மற்றும் அப்பார்ட்மெண்ட்களில் கூட மண்பழு உரம் தயாரிக்கலாம். 
  • உற்பத்தி செய்த மண்புழு உரத்தை தொட்டிகளிலும், பெட்டிகளிலும்; வளர்க்கும் செடிகளுக்கு போடலாம்.
  • இதனால் நச்சுத் தன்மை இல்லாத காய்கறிகளும் பழங்களும் சமையலுக்கு கிடைக்கும்.
  • இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான காய்கறிகள் மற்றும் பழங்களை நீங்களே உற்பத்தி செய்யலாம். 
  • என்னென்ன பொருட்கள் தேவை?
  • சுமார் 10 முதல் 15 கிலோ கம்போஸ்ட் ;தயாரிப்பதற்கு எற்ற ஓரு பிளாஸ்டிக் பாத்திரம். 
  • 2 பாத்திரத்திற்கு ஒரு மூடிபாத்திரத்தின் அடியில் வடியும் நீரை சேகரிக்க ஓர அகன்ற தட்டு. 
  • ஓரு அங்குல அகலத்திற்கு கிழிக்கப்பட்ட அல்லது நறுக்கப்பட்ட நியூஸ் பேப்பர் காகிதங்கள். 
  • (பாத்திரத்தில் 3-ல் ஒரு பங்கு நிரம்பும் அளவிற்கு.)போதுமான அளவு தண்ணீர். 
  • மண்புழுக்கள்  (50 புழுக்களுக்கு குறையாமல்)
  • தேவையான அளவு தோட்டத்து மண்.

செயல்முறை
  • தனி வீடுகளில் (அ) அப்பார்ட்மெண்ட்-களில் கம்போஸ்ட் தயாரிக்க ஏற்ற பிளாஸ்டிக் தொட்டியினை வாங்கிக் கொள்ளுங்கள்.
  • பிளாஸ்டிக் தொட்டி அகன்ற வாயுடையதாக இருக்கட்டும்.தொட்டியை மூடுவதற்கு மூடி கிடைத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.
  • அந்த மேல் மூடியில் ஓட்டைகளைப் போட்டு காற்றோட்டத்திற்கு வழி செய்யுங்கள்.
  • அதிகப்படியான நீர் வடிவதற்கு ஏற்ப தொட்டியின் அடிப்பகுதியிலும் ஓட்டைகளைப் போடுங்களகிழிக்கப்பட்ட (அ) நறுக்கப்பட்ட காகிதத் துண்டுகளை நனைத்து hட்டியில் போடவும். 
  • நீர் வடியும் அளவிற்கு நனைக்க வேண்டாம்.மேலாக பரப்பப்;பட்டிருக்கும் காகிதங்களை விலக்கி அதில் மண்புழுக்களை விடுங்கள்.
  • மண்புழுக்களோடு கொஞ்சம் தோட்டத்து மண்ணையும் சேர்த்து போடுங்கள்.சிறிது நேரம் வெயிலில் வையுங்கள். 
  • மேலாக இருக்கும் மண்புழுக்கள் காகிதக் குவியலைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்லும்.அடுத்து சேகரித்து வைத்திருக்கும், காயகறி; கழிவுகள், பழத்தோல்கள், சமையலறைக் கழிவுகள், அனைத்தையும்; தொட்டிக்குள் பரப்புங்கள்.
  • கழிவுகளுக்கு மேல் நியூஸ் பேப்பர்  துண்டுக்காகிதங்களைப் பரப்புங்கள்.
  • பிளாஸ்டிக் தொட்டி நிரம்பும்வரை சமையலறைக் கழிவுகளையும், தோட்டத்து மண்ணையும் போட வேண்டும்.பின்னர் தினமும் தண்ணீர் தெளியுங்கள். 
  • தொட்டியில் உள்ள கழிவுகள் முழுமையாக மண்புழு உரமாக மாறிவிட்டதா?  என்று பாருங்கள்.
  • மாறிய பின் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டு, 2 (அ) 3  நாட்கள் கழித்து மேலாக மண்புழு உரத்தை மேலாக சேகரிக்கலாம்.
  • தொட்டியின் அடியில் அதிக எண்ணிக்கையில் மண்புழுக்கள் இருப்பதனால்,  தொட்டியினை மீண்டும் மீண்டும் சமையலறைக்  கழிவு மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
சமையல் கழிவுடன் போடக்கூடாதவை
•    இறைச்சி
•    எலும்புகள்.
•    பால் பொருட்கள் (மோர் தவிர)
•    வளர்ப்பு பிராணிகளின் கழிவுகள்.
•    ரசாயனப் பொருட்கள்.
•    பிளாஸ்டிக் பொருட்கள்.
•    நாறத்தை வகைப்பழக் கழிவுகள்.
•    காய்களின் கழிவுகள்.

சமையல் கழிவுகள் பட்டியல்
  • சாதாரண நியூஸ் பேப்பர் காகிதங்கள்.
  • தேநீர் பைகள். (பிளாஸ்டிக் அல்ல)
  • முட்டை ஓடுகள்.
  • பழத்தோல்கள்
  • மிச்ச சொச்சமான உணவுப் பொருட்கள்.
  • காய்கறிக் கழிவுகள்.
  • உலர்ந்த இலைகள். (சருகுகள்)

சில முக்கிய குறிப்புக்கள்
  • புழுக்கள் அதிகம் இருந்தால்  விரைவில் உரமாக மாற்றிவிடும்.
  • தோராயமாக  10 முதல் 12  வாரங்களில் கழிவுகள் உரமாக மாறிவிடும். 
  • புழு வளர்ப்புத் தொட்டீயின் மூடியின் மேல் போடும் ஓட்;டைகள் காற்றோட்டத்தை அளிக்கும்.
  • தொட்டியின் அடிப்பக்கம் போடும் ஓட்டைகள் அதிகப்படியான நீரை வடிக்கும்.தொட்டியின் பக்கவாட்டிலும்  போடும் ஓட்டைகள் தொட்டியில் உருவாகும் வெப்பத்தை தணித்து காற்றோட்டத்தை ஏற்படுத்தும்.
  • இந்த உரம் தயாரிக்க தொடங்கும்போது மட்டும் மண்புழுக்களை விலை கொடுத்து வாங்கவேண்டும்.
  • மண்புழு உரம் தயாரிப்பவர்கள்  ஒரு புழு ஒரு ரூபாய் என விற்பனை செய்கிறார்கள்.
  • எந்த வகை மண்புழுவை வளர்க்கலாம்?
  • ரெட் விரிக்லர்ஸ் (RED WRIGGLERS) என்று சொல்லப்படும் மண்புழுக்கள் சமையலறைக் கழிவுகளை உரமாக மாற்றுவதில் திறமைசாலிகள்.
  • ஐசினியு  ஃபெட்டிடா (EISENIA FETIDA)என்பது இதன் அறிவியல் பெயர்.
  • இந்த 90 நாட்களில் புழுப்படுக்கையில் விடும் புழக்கள் இரண்டு மடங்காக பெருகி;விடும்.
Image Courtesy: Thanks Googl 



No comments:

Post a Comment