Select Your Favorite Topic! Enjoy Reading!!

Tuesday, May 17, 2016

ஈயம் பித்தளை செம்பு பேரீச்சம் பழம் ! - பகுதி -16

காற்றுத்துருத்தி 
ஈயம் பூசுதல்


Image Courtesy:Thanks Google

அரசு  இலைகள் 
பல்லுக்கு நடுவே நாக்கு பத்திரமாய் இருப்பதுபோல மாசுக்கு மத்தியில் அது பாதிக்காதவாறு வாழ நாம் பழகிக் கொள்ளவேண்டும்.
  
                                      மாசு பார்த்தால் காசு பார்க்க முடியாது  

குரோமியம், லெட் என்னும் ஈயம், நைட்ரஜன் ஆக்சைடு, சலஃபர் டை ஆக்சைடு, ஹைட்ர{ன் சல்ஃபைடு ஆகிய ரசாயனங்கள் தோல் தொழிற்சலைகளில் இருந்து வெளியேறி நம்மைச் சுற்றி இருக்கும் காற்றை (யுஆடீஐநுNவு யுஐசு) மாசுபடுத்துகின்றன என்று பார்த்தோம். அதில் எப்படி நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்றும் பார்த்தோம்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இன்னும் கூட ஒரு குரல் என் காதுகளில் ஒலிக்கிறது. “ஈயம் பித்தளை செம்பு பேரீச்சம் பழம்”. சைக்கிளில் பேரிச்சம் பழம் விற்;றுக்கொண்டு கொண்டு வருவார். காசு கொடுத்தும் வாங்கலாம.; ஈயம் பித்தளை செம்பு இதில் ஏதாவதொன்றை எடைக்கு போட்டும் பேரீச்சம்பழம் வாங்கலாம். நாங்கள் (10 வயசு பையன்கள்)  கையில் கிடைக்கும் ஈயம் அல்லது பித்தளை சேகரித்து வைத்திருப்போம்;. பித்தளை அதிகம் கிடைக்காது. ஈயமதான்;; கைகளில் சிக்கும். 10 அல்லது 15 நாளைக்கு ஒரு முறை வருவார். அதை வாங்கிக்கொண்டு பேரிச்சம் பழம் கொடுப்பார். அவர் வந்துபோனால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

சின்ன வயசிலேயே எங்களுக்கு அறிமுகமான உலோகங்கள் இந்த மூன்றுதான். “ஈயம் பூசலையோ ஈயம” என்று குரல் கொடுத்தபடி ஒரு சாயபு வருவார். செம்பு பித்தளைப்; பாத்திரங்களுகளுக்கு ஈயம் பூசிக் கொடுப்பார். ஈயம்பூச வித்தியாசமான அடுப்பை அவரே அமைப்பார். அதில் அடுப்பக் கரியை போட்டு நெருப்பு மூட்டுவார். அந்த அடுப்பை ஊதுவதற்கு ஆட்டுத்தோலால் செய்த ஒன்றை கருவியை  உபயோகிப்பார். அந்தகாலத்தில் ஆச்சரியமூட்டும்படியான உபகரணம் அது. அதை துருத்தி என்று சொல்லுவார்கள். ஈயம் பூசுபவர் வந்தால் அன்று முழுக்க அங்கேதான் இருக்கும் எங்களுக்கு ஜாகை. அந்த துருத்தியின் வாயைப்பிளந்து அதைமூடி அமுக்கி மெல்ல அந்த காற்று அடுப்புக்குள் சென்று கொழுந்துவிட்டு சிவப்பும் நீலமுமாய் எரியவைக்கும்; நெருப்பைப் பார்க்க அதிசயமாய் இருக்கும் எங்களுக்கு. 

ஈயம் பூசாத பாத்திரத்தில் சாப்பிடக்கூடாது. விஷம். வெண்கல செப்புப்ப்பாத்திரங்கள்; வசதியானவர்கள் வீட்டில்தான் இருக்கும். விசேஷமான நாட்களில் முகம் பார்க்கிற மாதிரி பளபளவென துலக்கிவைப்பார்கள்.

இப்படி ஈயம் எல்லோருக்கும் அறிமுகமான உலோகம். அறிவியல் ரீதியாக ஈயம் வெயிட்டான உலோகம்.; இது ‘ஹெவி வெயிட் மெட்டல்ஸ்  என்ற பிரிவில் சேரும்;. 
ஈயம் எங்கிருந்து வருகிறது ? எப்படி காற்றில் கலக்கிறது? 

மெட்டல் ப்ராசசிங், அயன் அண்ட் ஸ்டீல் ஃபவுண்டரீஸ், காப்பர் ஸ்மெல்டர்ஸ், தொழிலகங்களின் பாய்லர்கள், கண்ணாடி  மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகள்தான் ஈயத்தை வெளியேற்றி காற்று மண்டலத்திற்கு அனுப்பி வைக்கின்றன. காற்றில் கலக்கும் ஈயம் சுவாசிப்பின்போது நமது உடலில் நுழைகிறது. நுழையும் ஈயத்தை ரத்தம் உடல் முழுக்க இருக்கும் செல்களுக்கு விநியோகிக்கிறது. இவை அத்தனையும் எலும்புகளில் சேகரம் ஆகிறது. பின்னர் மெல்ல நமக்கு குடைச்சல் தர ஆரம்பிக்கிறது.

அதிகப்படியான ஈயம் சேகரம் ஆகும்போது நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். கைகால் இயக்கம் பாதிக்கப்படலாம். சிறுநீரகங்கள் செயலிழந்து போகலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகலாம். பொதுவான உடல் வளர்ச்சி பாதிக்கப்படலாம். குழந்தைகளிடையே வித்தியாசமான மனப்பான்மை உருவாகும். படிப்பில் மந்தமாக இருப்பார்கள். எதையும் புரிந்துகொள்ள சிரமப்படுவார்கள். குழந்தைகளின் ‘இன்;டலிஜென்ட் கோஷன்ட்’ என்னும் புத்திசாலித்தனம் குறைவாகும்.

நீளம் அகலத்தை அளக்க பயன்படும் மீட்டர் என்னும் அலகுமாதிரி இண்டலிஜென்ட் கோஷண்ட் (INTELLIGENT QUOTIENT)என்பது புத்திசாலித்தனத்தை அளக்கும் ஒரு அலகு. வில்லியம் ஸ்டெர்ன்(WILLIAM STERN)என்பவர் 1912 ல் இந்த ஆங்கில வார்தையை முதன்முதலாகப் பயன்படுத்தினார். மீட்டர் டேப்பை வைத்து எவ்வளவு உயரம் என்று அளப்பது மாதிரி புத்திசால்த்தனத்தை அளக்க முடியும் என்றார் வில்லியம். அதற்கு சில சோதனைகளையும் அவர் பரிந்துரை செய்தார். இதனை சோதிக்க இப்போது புதுப்புது சோதனைகள் தினம்தினம் முளைக்கின்றன. சராசரிகளின் ஐ கியூ (I Q) 85 முதல் 115 வரை இருக்குமாம். என்னை மாதிரி ஆட்களுக்கு 5 சதவிகித ஆசாமிகளுக்கு 75 வரைகூட குறைவாக இருக்குமாம். புத்திசாலிகளுக்கு 125 மேல் இருக்குமாம். 

சர்வதேச சுகாதார நிறுவனம்; (WORLD HEALTH ORGANIZATION) தனது ஆய்வுப்படி 2012 ம் ஆண்டில் காற்று மாசினால் உலகம் முழுவதும் இற்ந்தவர்களின் எண்ணிக்கை 3.7 மில்லியன் என அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் இறந்ததற்குக் காரணம் ஹார்ட் அட்டாக்.

போக்குவரத்துத்துறை (TRANSPORT) காற்றை மாசுபடுத்துகிறது. ஏனர்ஜி மற்றும் வேஸ்ட் மேனேஜ்மெணட் துறை (ENERGY & WASTE MANAGEMENT) மாசுபடுத்துகிறது. கட்டிடங்கள் கட்டுமானத்துறை (CONSTRUCTION OF BUILDINGS) மாசுபடுத்துகிறது. விவசாயத்துறை (AGRICULTURE) மாசுபடுத்துகிறது. இவற்றை எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடியாது. 


“மாசு பார்த்தால் காசு பார்க்க முடியாது”. 

பல்லுக்கு நடுவே நாக்கு பத்திரமாய் இருப்பதுபோல மாசுக்கு மத்தியில் அது பாதிக்காதவாறு வாழ நாம் பழகிக் கொள்ளவேண்டும். 

இதற்கு நமக்கு கைவசம் உள்ள ஒரே சர்வரோக சர்வலோக நிவாரணி தாவரங்கள்தான் மரங்கள்தான். மரங்கள் நம்மை மரணத்திலிருந்து மீட்கிறது  என்கிறார் டாக்டர் ஜோசப் மெர்கோலா. மாற்று மருத்துவமுறை போதிக்கும் இவர் நியூயார்க் டைம்ஸ் பத்ரிக்கையில் எழுதும் பிரபல எழுத்தாளரும்கூட.

Reference: https://www.tceq.texas.gov/airquality/sip/criteria-pollutants/sip -lead/#what-is-lead – Texas Commision on environmental Quality
2. https://en.wikipedia.org/wiki/Intelligence_quotient
Image Courtesy:Thanks Google 


No comments:

Post a Comment