- மல்லிகை மணம் கொடுக்கும்.
- அதை சாகுபடி செய்தால் பணமும் கொடுக்கும்.
- செண்ட் கணக்கில் போட்டால்கூட ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
1. அதிக லாபம் தரும் ரகம்
§ குண்டு மல்லிகை சிறந்த ரகம்.
§ கூடுதலான மகசூல்தரும் ரகம்.
2. எந்த மண் ஏற்றது ..?
- வளமான மண்ணாக இருக்க வேண்டும்.
- அது வடிகால்வசதி வுள்ளதாக இருக்க வேண்டும்.
- நீர் வசதியும் இருக்க லேண்டும்.
- மணல்பாங்கான இருமண்பாடு நிலமாக இருக்க வேண்டும்.
3. பூ பறிக்க ஆள் வேண்டும்.
- பூக்களை பறிக்க ஆட்கள் வேண்டும்.
- பறித்த பூக்களை மார்க்கெட்டிற்கு அனுப்ப பஸ்வசதி வேண்டும்.
- வேர்க் குச்சிகளையும் நடலாம்.
- எக்டர் ஒன்றுக்கு 6400 செடிகள் தேவை.
4. பருவத்தே பயிர்செய்
- ஜுன், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய
- மாதங்களில் நடுங்கள்.
5. குழிகளில் நடுங்கள்
- 30 செ.மீ. நீளம், 30 செ.மீ. அகலம், 30 செ.மீ. ஆழம் உள்ள குழிகளை வெட்டுங்கள்.
- ஒரு குழிக்கும், இன்னொரு குழிக்கும், 1.25 மீட்டர் இடைவெளி கொடுங்கள்.
- ஒருகுழி வரிசைக்கும், இன்னொரு குழி வரிசைக்கும் 1.25 மீட்டர் இடைவெளி கொடுங்கள்.
- ஒரு குழிக்கு 2 கிலோ தொழு எரு இடுங்கள்.
- குழிகளில் பதியன்களை அல்லது வேர்க்குச்சிகளை நடுங்கள்.
6. நீர் கட்டுங்கள்
- செடி நட்ட உடனே நீர் பாய்ச்சுங்கள்.
- பின்னர் வாரம் ஒருமுறை நீர் கட்டுங்கள்.
- மண்ணின் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் கொடுங்கள்.
7. எருவும் உரமும் இடுங்கள்
தேவைக்கு ஏற்ப இயற்கை உரங்களை நடுங்கள்
8. கவாத்து
- கவாத்து நவம்பர் மாதம் செய்யுங்கள்.
- தரையிலிருந்து 60 செ.மீ. உயரத்திற்கு விட்டு செடிகளை வெட்டி விடுங்கள்.
9. பயிர்பாதுகாப்பு
இயற்கைமுறை பயிர்பாதுகாப்பு முறைகளை கடைபிடியுங்கள்
10. மல்லிகையை தாக்கும் பூச்சிகள்
- மொக்கு துளைப்பான்
- பூ ஈக்கள்
11. மல்லிகையை தாக்கும் நோய்கள்.
- இலை மஞ்சளாதல்
- வேர் அழுகல் நோய்
12. அறுவடை செய்யுங்கள்
- மார்ச் ஏப்ரல் மாதங்களில் மல்லிகை பூக்கத் தொடங்கும்.
- முழு வளர்ச்சியடைந்த மொக்குகளை பறிக்க வேண்டும்.
- மல்லிகை மொக்குகளை விடியற்காலையில் பறிக்கவேண்டும்.
- பறித்தவுடன் கூடைகளில் அல்லது பைகளில் போட்டுமார்க்கெட்டுக்கு அனுப்பி விற்பனை செய்யுங்கள்.
- ஒரு ஹெக்டரில் 6,750. கிலோ பூ மொக்குகள் மகசூலாக கிடைக்கும்.
Image Courtesy:Thanks Google |
No comments:
Post a Comment