Image Courtesy:Thanks Google |
- மணமும் பணமும் தரக்கூடிய பயிர்.
- மனதைமயக்கும் மணம் கொண்டது.
- பூச்சி நோய் தாக்காத பயிர்.
1. எங்கு பயிர் செய்யலாம் ..?
• குளிர்ச்சியான பகுதிகளில் பயிரிடலாம்.
• வடிகால் வசதி கொண்ட நிலம் தேவை.
• இருமண்பாடான மண் சிறந்தது.
2. நல்ல ரகம் எது ..?
நாட்டு ரகம் நடவுக்கு நல்ல ரகம்.
3. மேட்டுப் பாத்தியில் விதையுங்கள்
• மேட்டுப் பாத்தி அமையுங்கள்.
• பாத்தியில் விதைக்க வேண்டும்;.
• ஒரு ஹெக்டேர் பரப்பு நடவு செய்ய 1.5 கிலோ விதை தேவை.
• 30 நாட்கள் வரை நாற்றுக்களை பாத்தியில் பராமரிக்க
வேண்டும்.
4. நாற்றுக்களை பாத்திகளில் நடுங்கள்
• பாத்திகளை அமையுங்கள்.
• 10 செ.மீ. இடைவெளியில் நாற்றுக்களை வரிசையாக
நடுங்கள்.
• ஒரு வரிசைக்கும், இன்னொரு வரிசைக்கும் 15 செ.மீ
இடைவெளி கொடுங்கள்.
5. பாசனம்
• நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுங்கள்.
6. தேவைக்கு ஏற்ப இயற்கை உரங்களை இடுங்கள்.
7. இயற்கை பூச்சி பூசண மருந்துகளை பயன்படுத்துங்கள்
• பூச்சி நோய்கள் அதிகம் தாக்குவதில்லை.
8. அறுவடை செய்வது எப்படி ..?
• நடவுசெய்த 2 ½ மாதத்திலிருந்து மரிக்கொழுந்து அறுவடை
செய்யலாம்.
• 30 அல்லது 40 நாள் இடைவெளிகள் தொடர்ந்து அறுவடை
செய்யுங்கள்.
• இதன் வயது 5 முதல் 6 மாதங்கள்.
• மணக்கும் மரிக்கொழுந்தை மார்க்கெட்டில் விற்றால் பணம்
கிடைக்கும்.
Image Courtesy:Thanks Google |
No comments:
Post a Comment