Select Your Favorite Topic! Enjoy Reading!!

Sunday, June 12, 2016

மண்ணைப் பொன்னாக்கும் மந்திரம் மண்புழுக்கள் - 1

Image Courtesy: Thanks Google
வேளாண்மை அறிவியலின் முரட்டு முள் தோல் நோக்கி, சிக்கலான பழப் பிரதேசத்தின் குடல் நீக்கி,  முட்டி நிற்கும் கொட்டை நீக்கி சுளைகளை மட்டும் சுவைக்கத் தரும் சுலபமான கட்டுரை தொகுப்பு இது. 

மண்புழு உரம்  ஏன் ? எங்கே ? எப்படி ? யார் ? எப்பொழுது ? அதன் சிறப்புக்கள், அதை தயாரிக்கும் முறைகள், அதனால் விளையும் பயன்கள் அத்தனையும் இதில் அடக்கம்.

1. மண் புழு உரம் - ஏன் வேண்டும்?

நேற்று சிக்கன்குனியா, இன்று டெங்கு, பன்றிக்காய்ச்சல் நாளை ?
நாம் சாப்பிடும் சாப்பாட்டில் பாதிதான்  சாப்பாடு மிகுதி ?
தாய்ப்பாலில் கூட டீடீடீ பிஎச்சி விஷம் இருப்பது பழைய செய்தி ஆகிவிட்டது.
ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் நம் நிலத்து மண்ணை மலடாக்கிவிட்டன.
விவசாயத்தை லாபம் இல்லாத தொழிலாக மாற்றிவிட்டது ரசாயன விவசாயம்.
இந்தியாவில் உற்பத்தி ஆகும் காய்கறி பழங்கள் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள் அயல் நாட்டினர் 
உலகம் முழுவதும் இன்று இயற்கை விவசாயம் முழு வீச்சில் தொடங்கிவிட்டது.
ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் ஓரங்கட்டிவிட்டால் விவசாயம் லாபகரமாகிவிடும் என்ற சூட்சுமம் அவர்களுக்கு புரிந்துவிட்டது.
இயற்கை உரங்கள்தான் நம் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது என்பதை தெரிந்து கொண்டார்கள்.
அதனால்தான் அவர்கள் " இது ஆர்கானிக் காய்கறியா ? இது ஆர்கானிக் பழமா ? " என்று மார்கெட்டில் கேட்டு வாங்குகிறார்கள். 
நம் நாட்டிலும்; விவசாயிகள் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பத்; தொடங்கி இருக்கிறார்கள்.
ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களைப் போடுங்கள், என்று தமிழ்நாடு அரசின் விவசாயத்துறை சிபாரிசு செய்கிறது.
கூடுமானவரை ரசாயன உரங்கள் போடுவதை நாம் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய பல்கழைக்கழகமும் சொல்லுகிறது.
விவசாய விஞ்ஞானிகளும், வேளாண்துறை வல்லுநர்களும் இதையே சொல்லுகிறார்கள்.
விவசாயத்தில் தேர்ச்சி பெற்ற விவசாயிகளும் இதனை ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.
தொழுஉரம், மக்குஉரம், பசுந்தழை உரம், பசுந்தாள் உரம், கோழி எரு, மீன் எரு, எலும்புத்தூள், உயிரியல் உரங்கள் மண்புழு உரம் இப்படி பலவகையான இயற்கை உரங்கள் நமக்கு பரிச்சயமாகிவிட்டன.
இயற்கை உரங்களில் மண்புழு உரம் இடும் பழக்கம் விவசாயிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
ரசாயன உரங்களுக்கு ஒரே மாற்று மண்புழு உரம்தான்.
Image Courtesy: Thanks Google


No comments:

Post a Comment