Select Your Favorite Topic! Enjoy Reading!!

Monday, June 20, 2016

மர நிழலில் மண்புழு உர உற்பத்தி - 11

Image Courtesy; Thanks Google
  • கொஞ்சம் மர நிழல், கொஞ்சம் மண்புழு, கொஞ்சம் மக்கிய தொழு உரம் இருந்தால் போதும்.
  • சிக்கனமாக மண்புழு உரம் தயார் செய்ய முடியும்.
  • இதில்; தேவைப்படும் மூலதனம், நம்முடைய ஆர்வம் மற்றும் அக்கறை.

தேவைப்படும் பொருட்கள்:

  1. நிழலுடன் கூடிய மரத்தடி
  2. தேங்காய் உரி மட்டைகள் 500 முதல் 600
  3. மக்கிய தொழு உரம் சுமார் 500 கிலோ
  4. தேவையான அளவு தோட்டத்து மண்
  5. சாக்கு - 4 அல்லது 5
  6. மண்புழுக்கள் சுமார் 2 கிலோ
  7. தண்ணீர் 12 முதல் 15 குடம்


செயல் விளக்கம்:

மரத்தடி நிழலுடன் கூடிய ஒரு இடத்தை தெரிந்தெடுங்கள். மரத்தைச் சுற்றிலும் மூன்று அடி அகலத்திற்கு சமப்படுத்துங்கள். சமப்படுத்திய நிலப்பரப்பு வட்ட வடிவமாக இருக்கட்டும். சமப்படுத்திய  3 அடி விட்டத்திற்கும் 0.5 அடி ஆழத்திற்கும் சிறிய பள்ளம் எடுக்கவும். அந்த பள்ளத்தில்  தேங்காய் உறி மட்டைகளை முதுகுப் பக்கம் கீழே இருக்குமாறு சீராக அடுக்குங்கள். பின்னர் தேங்காய் உறி மட்டைகள்; மறையும்வரை 4 அங்குல உயரத்திற்கு தோட்டத்தின் மண்ணை பரப்புங்கள். அந்த மண் நனையுமாறு சீராக தண்ணீர் தெளியுங்கள். அதன்மீது தொழு உரத்தை அரை அடி உயரத்திற்கு பரப்பவும். மீண்டும் தண்ணீர் தெளியுங்கள். இப்படியாக தொழு உரத்தை நான்கு அடுக்கு போடுங்கள். இந்த அடுக்குகள் இரண்டு அடி உயரத்திற்கு மேல் போகாமல் பரப்புங்கள்.

ஓவ்வொரு அடுக்குக்கும் இரண்டு அல்லது மூன்று  குடம் தண்ணீர் தெளியுங்கள். அதற்கு மேல் இரண்டு அங்குல உயரத்திற்கு மாட்டு சாணம். அதன் மீது சீராக தண்ணீர் தெளியுங்கள். பின்னர் தோராயமாக இரண்டு கிலோ அல்லது 1000 மண்புழுக்களை சாணத்தின் மீது விடவும். விரைவாக சாணத்தைக் துளைத்துக் கொண்டு மண்புழுக்கள் உள்ளே சென்று விடும். பின்னர் மண்புழு படுக்கையை ஈரச் சாக்குகள் கொண்டு மூடவும்.

பராமரிப்பு:

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை பழுப்படுக்கை மீது சீராக 4 முதல் 5 குடம் தண்ணீரை தெளிக்கவும். தண்ணீர் தெளிப்பதை 50 முதல் 60 நாட்கள் வரை செய்யுங்கள். 15 முதல் 20 முறை தண்ணீர் தெளிக்க வேண்டி இருக்கும்.

அறுவடை:

வழக்கம் போல், தண்ணீர் தெளிப்பை நிறுத்தி, 3 (அ) 4 நாள் கழித்து, மேலாக அறுவடை செய்து, நிழலில் உலர்த்தி, சலித்து, கோணிகளில் சேமித்து, தேவையின் போது பயன்படுத்துங்கள்.
Image Courtesy; Thanks Google

No comments:

Post a Comment