Select Your Favorite Topic! Enjoy Reading!!

Monday, June 20, 2016

தொட்டி முறை மண்புழு உர உற்பத்தி - 10


Image Courtesy: Thanks Google

  • மண்புழு என்றாலே, கட்டுங்கள் தொட்டியை:  போடுங்கள் கொட்டகையை: வாங்குங்கள் வங்கிக் கடனை என்கிறார்கள்.
  • எல்லோரும் பயன்படுத்தும் மண்புழு உர உற்பத்தி முறை இது.
  • இதில் கொஞ்சம் செலவு அதிகம்.
  • சிமெண்ட் தொட்டி கட்டி அதற்கு மேல் கொட்டகை போடும் இந்த முறைக்கு வங்கிகள் கடனை வாரித் தருகின்றன.


வட்டிக்கு கடன் வாங்கி செய்யும் கம்ப சூத்திரமான வேலை இல்லை இது. மண்புழு தயாரிப்பில் நல்ல அனுபவம் பெற்ற பின் இதனை வியாபார ரீதியில் செய்யலாம். எப்போதும் தக்கை மீது கண் வைத்திருக்கும் தூண்டில்காரர்களைப் போல திறமைசாலிகள் இதையும் கண்படும் தொழிலாக மாற்றி விடுகிறார்கள்.

மண்புழு உரத்தை நீங்கள் ஏற்றுமதி செய்ய தயாராக இருந்தால் பலர் இறக்குமதி செய்ய தயாராக இருக்கிறார்கள்.


தேவைப்படும் பொருட்கள்

  • 6 x 3 x 2 அடி அளவுள்ள சிமெண்ட் தொட்டி.
  • தேவையான அளவு கூழாங்கற்கள்.
  • தேவையான அளவு தோட்டத்து மண்.
  • தேவையான அளவு மணல்
  • மாட்டுச் சாணம் சுமார் 500 கிலோ
  • தேவையான அளவு வைக்கோல்
  • தேவையான அளவு இலை தழைகள்.
  • 12 முதல் 15 குடம் தண்ணீர்
  • நிழலான இடம் அல்லது கொட்டகை.


தொட்டியும் கொட்டகையும் அமைத்தல்

6 அடி நீளம் 3 அடி நீளம் மற்றும் 2 அடி அழம் உள்ள சிமெண்ட் தொட்டியை அமையுங்கள். நிழல் உள்ள இடத்தில் தொட்டியை அமையுங்கள. நிழல் இல்லை என்றால் தொட்டிக்கு மேல் கொட்டகை போடுங்கள்.

தொட்டியின் நீளத்தை தேவைக்கு ஏற்ப கூட்டலாம் அல்லது குறைக்கலாம். தொட்டியின் அகலம் மாறாது, ஆழம் மாறாது. அதிகப்படியான ஈரம் வடிய வசதி செய்யுங்கள். இதற்கு தொட்டியின் அடிப்பகுதியில் ஒரு சிறிய துவாரத்தை அமையுங்கள்.

மண்புழு உர உற்பத்தி செயல்முறை

சிமெண்ட் தொட்டியில் 3 அங்குல உயரத்திற்கு கூழாங்கற்களை பரப்புங்கள்.
அதன் மீது கூழாங்கற்கள் மறையும் அளவுக்கு மணலைப் பரப்புங்கள். பின்னர் 3 அங்குல உயரத்திற்கு தோட்டத்து மண்ணை சீராகப் பரப்பவும். அதன் மீது போதுமான அளவு தண்ணீர் தெளிக்கவும். அடுத்து 6 அங்குல உயரத்திற்கு மாட்டு சாணத்தை தொட்டிக்குள் பரப்பவும். பின்னர், வைக்கோல், பசுந்தழைகள் மற்றும் சமையலறைக் கழிவுகளை 6 அங்குல உயரத்திற்கு பரப்பவும். அதன்மீது சாணக்கரைசலை தெளிக்கவும். மீண்டும் இரண்டாம் அடுக்கு சாணம் இட்டு போதுமான அளவு தண்ணீர் தெளித்து வைக்கோல், இலைச் சருகுகள், பசுந்தழை, சமையலறைக் கழிவு, என இட்டு மீண்டும் சாணக்கரைசலை  தொட்டி நிறையும் வரை மூன்றாவது, நான்காவது, அடுக்களை அடுக்கவும். அடுக்குகளின் உயரம் 2 அடிக்கு மேல் போகக் கூடாது.

அடுக்குகள் மீது வைக்கோல் அல்லது சாக்கு போட்டு மூடவும். தொட்டியில் 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வரவும். 30 வது நாள் தொட்டியில் சுமார் இரண்டு கிலோ மண்புழுக்களை தொட்டியில் விடவும். தொடர்ந்து 60 நாட்களுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை தெளித்து வந்தால் தொட்டிக் கழிவுகள் அனைத்தும் உரமாகிவிடும்.


வழக்கம்போல் அறுவடை

கழிவுகள் முழுவதுமாக உரமாக மாறி விட்டதா என்று பாருங்கள். மாறி விட்டிருந்தால், 3 அல்லது 4 நாட்களுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்துங்கள்.
அடுத்த நாள் நாம் மேலாக இருக்கும் மண்புழு உரத்தை சேகரித்துக் கொள்ளலாம்.

மண்புழு குளியல் நீர் சேகரிப்பு

சிமெண்ட் தொட்டியின் அடிப்பகுதியில் ஒரு துவாரம் இட்டு ஒரு சிறிய குழாயைப் பொருத்துங்கள். இது மண்புழுவின் குளியல் நீர் சேகரிக்க உதவும்.
மண்புழுவின் உடலில்பட்டு வடியும் நீர்தான் மண்புழு குளியல் நீர். இது மண்புழு தொட்டியின் அடி துவாரத்த்ன் மூலம் சேகரம் ஆகும். இதனை சேகரித்து திரவ உரமாகப் பயன்படுத்தலாம்.
Image Courtesy: Thanks Google




No comments:

Post a Comment