Select Your Favorite Topic! Enjoy Reading!!

Sunday, June 19, 2016

வீடுகளில்; மண்புழு உரம் தயாரிக்கும்; முறை - 9

Image Courtesy: Thanks Google


  • வீட்டில் மண்பழு உரம் தயாரிப்பவர்கள் அதிர்ஷ்ட்டசாலிகள்.
  • ரசாயன மருந்துகளின் விஷம் இல்லாத உணவை சாப்பிடுகிறார்கள்
  • இவர்களுக்கு டாக்டர் செலவு மிச்சம்.
  • விஷம் இல்லாத காய்கறிகளை சமைக்கிறார்கள்.
  • காய்கறிகளுக்கு ஆகும் செலவினை  மிச்சம் பிடிக்கிறார்கள்.

இரட்டை நாக்கு வேண்டும்.

உலகின் மொத்த கழிவுகளில் 50-60 சதவிதம் அங்ககக் கழிவுகள்தான்  இதில் அதிகமானவை சமையலறைக் கழிவுகள்தான்.  மிக அதிகமான மீதேன் வாயுவை வெளியேற்றுவது சமையலறைக் கழிவுகள்தான். கழிவுப் பொருட்களை இயற்கையான முறையில் மறு சுழற்சி செய்கின்றன மண்புழுக்கள். நகரவாசிகள் தொட்டிகளிலும் பெட்டிகளிலும் செடிகளை வளர்க்கலாம். அழகுச் செடிகள், காய்கறிச் செடிகள்;, மரங்கள் அனைத்தும்; வளர்க்கலாம். அதற்குத் தேவையான உரங்கள் மற்றும் எருவினை காசு கொடுத்து வாங்குகிறார்கள். வீடுகளில் மற்றும் அப்பார்ட்மெண்ட்களில் கூட மண்புழு உரம் தயார் செய்யலாம். உங்கள் சமையலறைக் கழிவுகளே இதற்கு போதுமானது. மண்புழு உரத்தின் மூலம் உற்பத்தி செய்யும் காய்கறிகளை ருசிக்க இரட்டை நாக்கு வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்

  • ஒரு மரப் பெட்டி
  • 40 - 50 மண்புழுக்கள்
  • காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகள்
  • காப்பி அல்லது தேநீர் தயாரிப்புக் கழிவுகள்
  • இதர சமையலறைக் கழிவுகள்
  • மணல்
  • நைலான் வலை
  • ஒரு பழையதுணி, 
  • நியுஸ் பேப்பர், 
  • உலர்ந்த புற்கள்


பெட்டியில் போடக்கூடாதவை எவை ?

  • உப்பு கலந்த கழிவுகள்
  • ஊறுகாய்
  • எண்ணெய்
  • வினிகர்
  • இறைச்சி
  • கொழுப்பு
  • பால் பொருட்கள்


செய்முறை விளக்கம்

ஒரு சிறிய மரப்பெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். காலி பெயிண்ட் டப்பாக்களைக்கூட உபயோகிக்கலாம். பெட்டியின் அடிப்பகுதியில் ஒரு நைலான் வலையைப் பொருத்துங்கள். பெட்டியில் இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு மணலை பரப்புங்கள். அதன் மீது சமையல் அறைக் கழிவுகளை பரப்புங்கள். காய்கறி மற்றும் பழங்களின் தோல்கள் அனைத்தும் இதில் அடங்கும்;. அதன் மேல் இலை தழைகளைப் பரப்புங்கள். உலர்ந்த இலைச் சருகுகளையும் பரப்புங்கள். சிறுசிறு துண்டுகளாக கிழிக்கப்பட்ட நியூஸ் பேப்பர்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் அளவாக தண்ணீர் தெளியுங்கள். தண்ணீரை அதிகம் ஊற்றக் கூடாது. இப்படி தினமும் சமையல் அறைக் கழிவுகளை சேகரித்து அந்த மரப் பெட்டியில் போட்டு தண்ணீர் தெளியுங்கள். மரப்பெட்டி நிரம்பிய பின் அதனுள் 40 முதல் 50 மண்புழுக்களை புழுப்படுக்கையில் விடுங்கள். தினமும் தண்ணீர் தெளியுங்கள்.

நான்காவது வாரம் பெட்டிக் கழிவுகள் மண்புழு உரமாக மாறுவதைப் பார்க்கலாம்.

கழிவுகள் ழுழுவதும் உரமாக மாறிய பின்னால் உரத்தினை மட்டும் பெட்டியிலிருந்து பிரித்து எடுக்கலாம். பெட்டியின் அடிப் பகுதியில் இருக்கும் மண்புழுக்கள் இரண்டாம் தயாரிப்புக்கு உதவும.; பின்னர் செடிகளுக்குப் போடலாம்.

கவனிக்க வேண்டியவை

பெட்டியை, எப்போதும் மூடி வையுங்கள். கழிவுப்பொருட்களை எப்போதும் ஈரமாக வையுங்கள். அதிக குளிரும் ஆகாது, அதிக வெப்பமும் ஆகாது.
                                                                      
Image Courtesy: Thanks Google






No comments:

Post a Comment