Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, June 17, 2016

மண்புழு உர உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை - 8

Image Courtesy: Thanks Google
சாணம் சேகரிப்பது எப்படி ?

10 முதல் 15 நாள் சாணத்தை பயன்படுத்தலாம். உலர்ந்து போன சாணத்தை உபயோகிக்கக் கூடாது. தேவையான சாணத்தை நிழலான இடத்தில் குவியலாக சேமிக்கலாம். அதில் கல்,மண் தூசு துப்பட்டை சேரக் கூடாது. இரண்டு நாளுக்கு ஓரு முறை சாணத்தை மண்வெட்டியால்  கிளறி விடவும். இதிலிருந்து மீதேன் வாயு வெளியேறி சூடு குறையும். இப்படி ஆறிய சாணத்தை பயன்படுத்துங்கள். சாணத்திற்கு பதிலாக மக்கிய பயிர்க்கழிவு, மக்கிய கோழி உரம், பட்டுப்பூச்சி வளர்ப்புமனைக் கழிவு, சமையல் கழிவு ஆகியவற்றைக் கூட பயன்படுத்தலாம்.


புழுப்படுக்கையில்  தண்ணீர் தெளிக்கும் முறை

ஈரம், குளிர்ச்சி, இருட்டு மூன்றும் மண்புழுவிற்கு  அவசியமானவை. மண்புழுக்கள் ஈரம் இல்லாத இடத்தை விட்டு வெளியேறிவிடும். மண்புழுக்கள் படுக்கையில் தொடர்ச்சியாக ஈரம் இருக்க வேண்டும். ஈரம் அதிகமும் அதற்கு ஆகாது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்கலாம்.

தேங்காய் உறிமட்டை மற்றும் மணல் போடுவது ஏன் ?;

மண்புழு படுக்கையை விட்டு புழுக்கள் தப்பிக்காமல் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. அடி மண்ணுக்கும் புழுப்படுக்கைக்கும் போடப்பட்ட வெலிதான் தென்னை உறிமட்டைகளும் மணலும். மேலும் கூடுதலாக ஊற்றும் தண்ணீரை தேங்காய் உறிமட்டைகளும், மணலும் வடித்;து விடும்.

மண்புழு படுக்கையை பராமரிக்கும் வழிமுறை

புழுப்படுக்கையை வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கவும.; தோட்டத்தில் கிடைக்கும் கழி கம்புகள், மற்றும் ஒலைகளைப் பயன்படுத்தி கொட்டகை போடலாம்.  கோழி, காகம் போன்றவற்றிடமிருந்து புழுக்களைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு தரை மட்டத்திலிருந்து 4 அல்லது 5 அடி உயரத்திற்கு கம்பி வலையை கொட்டகையைச் சுற்றி பொருத்தலாம். புழுப்படுக்கையைச் சுற்றிலும் மஞ்சள் அல்லது மிளகாய்த்துள் கோலமிடுவது போல போடலாம். இது எறும்பு மற்றும் கரையான்களிடமிருந்து மண்புழுக்களை பாதுகாக்கும். அதன் பின்னர் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை 5 முதல் 6 குடம் தண்ணீர் தெளிக்க வேண்டும். இதனால் தொடர்ந்து புழுப் படுக்கையை ஈரமாக வைத்துக் கொள்ளலாம். 40 முதல் 60 நாட்களில் புழுப்படுக்கை முழுமையாக மண்புழு உரமாக மாறிவிடும்.

அறுவடைக்கு முன் தண்ணீர் தெளிப்பை நிறுத்துங்கள்

புழுப்படுக்கை முழுவதும் உரமாக மாறிவிட்டதா ? பாருங்கள். பினனர்; 2 முதல் 3 நாட்களுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்துங்கள். இப்போது புழுப்படுக்கையில் புழுக்கள் அடிப்பகுதிக்கு சென்றுவிடும். பின்னர் மேலாக இருக்கும் மண்புழு உரத்தை அறுவடை செய்யுங்கள். அறுவடை செய்ததை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நிழலில்; உலர்த்துங்கள்.  பின்னர் சல்லடையில் சலித்து கோணிகளில் சேமியுங்கள். சேமித்த உரத்தை தேவைக்கு ஏற்ப பயிர்களுக்குப் பயன்படுத்துங்கள்.


மண்புழு உரத்தை தொடர்ந்து உற்பத்தி செய்யும் முறை

செல்போன் ரீசார்ஜ் செய்வது போல புழுப் படுக்கையில் பசும் சாணத்தால் ரீசார்ஜ் செய்தால் போதும். மீண்டும் மீண்டும் மண்பழு உரம் அறுவடை செய்யலாம்.

அந்த புழுப்படுக்கையில் மீண்டும் ஒரு 500 கிலோ சாணத்தை முன் போல 5 அடுக்குகளாக ரீசார்ஜ் செய்யவும.; அறுவடை செய்யும் போது புழுக்கள் அத்தனையும் அடிப் பகுதியில் தங்கி இருக்கும். இப்போது புதிய புழுக்களைப் போட வேண்டாம். முன் சொன்னது போல 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றி பராமரியுங்கள். இப்போது 60 நாட்கள் காத்திருக்க வேண்டாம். 30 நாட்களிலேயே கூட எடுக்கலாம். காரணம் இப்போது புழுக்கள் அதிகம் இருக்கும்.

கூடுதலாக இருக்கும் மண்புழுக்களை எடுத்து தனியாக இன்னொரு பழுப்படுக்கையைக் கூட தயார் செய்யலாம். ரசாயன உரங்கள் மாதிரி ஒவ்வொரு மூட்டைக்கும் காசுகொட்டி அழ வேண்டாம்.
Image Courtesy: Thanks Google

No comments:

Post a Comment