Select Your Favorite Topic! Enjoy Reading!!

Wednesday, June 1, 2016

உலக சுற்றுச்சூழல் தினம் 2016 - பகுதி 1 ( WORLD ENVIRONMENT DAY)



Image Courtesy: Thanks Google
சர்வதேச அளவில்  1972  ஆம்ஆண்டிலிருந்து ஒவ்வொரு  ஆண்டும்  ஜுன்  5  ஆம் தேதி  உலக சுற்றுச்சுழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
         
இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, “அரசும்  மக்களும்  தங்கள் பல்வேறு  வேற்றுமைகளை எல்லாம்  ஒதுக்கி வைத்து விட்டு, இயற்கை வளங்களை பாதுகாத்து அவற்றை நம் வருங்கால சந்ததிக்கு பயன்தரும் வகையில் விட்டுச் செல்ல வேண்டும்” என்று  வேண்டுகோள் விடுத்துள்ளார், பான் கி மூன் அமெரிக்க  ஐக்கிய  நாடுகளின்  செயலாளர்.  

இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நோக்கத்தை  அடிப்படையாகக் கொண்டு  கொண்டாடப் படுகிறது .    
     
வன உயிரினங்களையும், அவை சார்ந்த பொருட்களையும் சட்ட விரோதமாக  வியாபாரம் செய்வதற்கு எதிராக குரல்  கொடுப்பதும்  செயல்படுவதும்தான்  2016  ஆம் ஆண்டு  உலக சுற்றுச்சூழல் தினத்தின்  செயல் நோக்கம். 

இதன் அடிப்படையில் உலக நாடுகள்  அனைத்தும், இந்த ஆண்டில் சுற்றுச்சூழல் தினத்தை  அனுசரிக்கின்றன.  

இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் ஸ்லோகன் (SLOGAN) ஆங்கில கோஷம் (GO WILD FOR LIFE). தோராயமாக இதை மொழி பெயர்ப்பதென்றால்  “ஒரு  உயிரைக் காப்பாற்ற முனைந்து  போராடு”  என்பதுதான்.

வனவிலங்குகளை  வேட்டையாடுவதும்   அவற்றின் அரிய பொருட்களை வியாபாரம் செய்வதற்கும்  உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த இரண்டு காரியங்களும்  தங்குதடையின்றி, உலகம் முழுவதும் உற்சாகமாக   நடந்து கொண்டுதான்  வருகிறது என்கிறார்கள். 

வடிவேல் பாணியில் சொல்வதானால் வனவிலங்கு வேட்டையும் வியாபாரமும்    தடை  செய்யப்பட்டுள்ளது,  ஆனால்  தடை  செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் கூட  தந்தத்திற்காக  யானைகளை  வேட்டையாடுவதும் , ஏற்றுமதிக்காக  கடலாமைகளை   மண்ணுள்ளி  பாம்புகளை   கடத்துவதும்,   அங்கொன்றும் இங்கொன்றுமாக  நடந்து கொண்டுதான்;  வருகிறது . 
திருடராய்  பார்;த்து   திருந்தாவிட்டால்  திருட்டை  ஒழிக்க  முடியாது  என்ற   பிரபலமான எம். ஜி. ஆர்   பாட்டுமாதிரி  அவர்களாக  மனம் திரும்ப வேண்டும்.  மனம் திருந்த வேண்டும்.

வெளிநாடுகளில்  அதிகமாக  யானைகள்,  ரினோசரஸ் என்னும் காண்டாமிருகங்கள்,  புலிகள்,  கொரில்லாக்கள்   என்னும்  மனிதக்  குரங்குகள், மற்றும்  கடலாமைகள்,  இந்த   சட்டவிரோத வியாபாரத்திற்கு  தீனி போடுகின்றன. 

ஒயில்ட் லைஃப்(WILD LIFE)   என்பது பிராணிகள்  விலங்குகள்  மட்டுமின்றி  தாவரங்கள் மற்றும்  மரங்களையும்  குறிக்கும். வன  உயிரினங்கள்  தொடர்பான குற்றங்கள்  என்றால்  அவற்றிற்கு  அடிப்படையாக  இருப்பவை  மேலே  சொன்ன  ஐந்து  உயிரினங்கள்தான்.

சில விலங்குகள்  மற்றும் தாவரங்கள்  பல்கிப்பெருகி  இருந்தவை  நம்மூர்  சந்தன மரங்கள் மாதிரி  காணாமல்  போய்விட்டன.  இப்படி  காலப்போக்கில்  காணாமல்போகும் பிராணிகள்;  மற்றும்  தாவரங்கள் பற்றி உலகிலுள்ள எல்லா  நாடுகளிலும் தங்கள்  கைகளில்  ஒரு நீளமான பட்டியலை  வைத்துள்ளன.  அருகிவரும்  அல்லது காணாமல் போகும்  உயிரினங்களை  ஆங்கிலத்தில் என்டேஞ்சர்டு ஸ்பீசிஸ் (ENDANGERED SPECIES) என்கிறார்கள்.  

இப்படி சர்வதேச அளவில்  ஒரு பட்டியல் வைத்திருக்கிறார்கள்.  வியட்நாமின் ஜாவன்  ரைனோ  (JAVAN RHINO)   கேமரூன்  நாட்டின் வெஸ்ட்டர்ன் பிளாக்; ரைனோ(WESTERN BLACK RHINO) ,  கேம்பியா நாட்டின் கிரேட் ஏப்ஸ் (GREAT APES)  ஹெல்மட்டட் ஹார்ன்பில்  (HELMETED HORNBILL) பறவை , பங்கோலின் (PANGOLIN) என்னும்  எறும்புத்தின்னியும், இந்தப் பட்டியலில் உள்ளன.  
இவை தவிர சில  ஆர்ச்கிட் பூக்களும்  (ORCHID FLOWERS)  ரோஸ்வுட்  (ROSEWOOD)   மரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறும்.

உலகம் முழுவதும் இந்த  சுற்றுச்சூழல்  தினத்தை கொண்டாடினும் ,  அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை  அங்கோலா  என்னும் ஆப்பிரிக்க நாட்டினை  ஹோஸ்ட்  கண்ட்ரி   (HOST COUNTRY) என்று  அறிவித்துள்ளது .   ஒலிம்பிக் விளையாட்டுக்கள்  ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு  நாட்டில்  நடைபெறுவதைப்போல, உலக சுற்றுச்சூழல் தினத்தை  இந்த ஆண்டு  கொண்டாடுவதற்கு  சிறப்பான நாடாக  அங்கோலாவை  தெர்ந்தெடுத்துள்ளது,  அமெரிக்க  ஐக்கிய  சபை. 

தந்தங்களுக்காக  யானை  வேட்டையும், கொம்புகளுக்காக  காண்டாமிருகமும்  வேட்டையாடுவது  ஆப்பிரிக்க நாடுகளின்  மிகப் பெரிய பிரச்சனை. இந்த இரண்டு பெரும் பிரச்சனைகள்  குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்துவதும்,  அதற்கு எதிரான  செயல்பாடுகளை  முடுக்கிவிடும்  வகையில் இந்த உலக  சுற்றுச்சூழல் தினத்தை  அங்கோலா  நாடு  கொண்டாட உள்ளது.  

நாமும்  நம் தமிழ்நாட்டில்  செம்மரக்  கடத்தல்  மற்றும்      சந்தன மரக்கடத்தலுக்கு எதிரான  விழிப்புணர்வை    ஏற்படுத்தலாம்.  கடத்தப்படும்  கடலாமைகளையும்  மண்ணுள்ளி  பாம்புகளையும் தடை செய்வதற்கான   நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். முக்கியமாக வன உயிர்களை பாதுகாப்பது என்பதும் வனங்களை உருவாக்குவது, பராமரிப்பது, மேம்படுத்துவது என்பது எல்லாம் ஒரே காரியம்தான்.
                     
Image Courtesy: Thanks Google



          



         

No comments:

Post a Comment