Select Your Favorite Topic! Enjoy Reading!!

Thursday, June 2, 2016

உலக சுற்றுச்சூழல் தினம் 2016 - பகுதி --2 (WORLD ENVIRONMENT DAY- 2016)

 Images Courtesy: Thanks Google

முன் கட்டுரை  சுருக்கம்:

1972 ஆம் ஆண்டு முதல் உலக சுற்றுச் சூழல் தினம்  கொண்டாடப்படுகிறது.  ஒவ்வொரு  ஆண்டும் ஜுன் 5 ஆம்  நாள்  சுற்றுச்சூழல் தினமாக   யூ. என். ஓ.  (U N O)   என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள்  சபை அறிவித்துள்ளது. ‘சட்டவிரோதமான வனவிலங்குகள் வேட்டைக்கும் வியாபாரத்திற்கும் கட்டுப்பாடு”  ஏன்பதுதான்;  இந்தஆண்டு வுலக சுற்றுச்சூழல் தினத்தின் ‘தீம்“ அல்லது  செயல்பாட்டுப்  பொருள்.  யானைகள்,  காண்டா மிருகங்கள்,(RHINOCEROS), புலிகள், கொரில்லாக்கள், மற்றும்  கடல் ஆமைகள் தான்  இந்த சட்ட விரோத  வியாபாரத்தின்  மூலாதாரமாக இருக்கும் முக்கிய உயிரினங்கள்.  
-------------------------------------------------------------------------------------------------------------------------      
உலகம் முழுவதும்  அதன் கொம்புக்காக    காண்டாமிருகங்கள் கொல்லப்படுகின்றன.  இந்த  காண்டாமிருகக் கொம்புகளை  வைத்து என்ன செய்கிறார்கள் ? 

சீனா, ஜப்பான், உட்பட்ட ஆசிய நாடுகள் இந்த கொம்புகளை வைத்து  விலை  உயர்ந்த  மருந்துகளை தயாரித்து  பல மில்லியன் பணம் பார்த்தனர். ஆயிரம் ஆண்டுகளாக சீனா இந்த கொம்பு வியாபாரத்தை  தங்கள் நாட்டில்  கொம்பு சீவி  தைத்திருந்தது.

உடல் வெப்பம் குறைப்பான் என்று  இந்தகாண்டாமிருகக்  கொம்புகளை வகைப்படுத்தி இருக்கிறது  மருத்துவத்துறை.  எந்தக் காய்ச்சலாக இருந்தாலும்  அதை குணப்; படுத்துவதில்   காண்டாமிருக  கொம்புகளுக்கு  நிகர்  எதுவும் இல்லை என்கிறார்கள்  சீனர்கள்;.   வலிப்பு நோய்க்கும் இது கை கண்ட மருந்து என கொண்டாடுகிறார்கள்;.  இன்னும் பலவற்றிற்கு  ரகசிய  வைத்தியமும்   பார்த்தனர்;.

இதுபற்றிய இன்னொருஆச்சரியமான செய்தி !   இதன் கொம்புகளைக்;;  கடைந்து   மிகவும்  விலை வுயர்ந்த கோப்பைகள் செய்கிறார்கள்.   இந்த கோப்;;பைகளில் பானங்களை அருந்துவது என்பது ,  சமூகத்தின்  சாதாரணமக்கள்   கனவுகூட காணமுடியாது.  

பணம்படைத்த  ஒருவரைக் கொல்ல  சாப்பாட்டில் விஷம் வைத்து கொடுப்பார்கள். அவர் தற்செயலாக அதனை பூனைக்கு போடுவார்.  அல்லது காக்காவுக்கு வைப்பார்.  சாப்பிட்ட உடனே  அவை  சுருண்டு விழுந்துவிடும். உடனே அவர் சாப்பாட்டில்  விஷம் கலந்;திருப்பதைக் கண்டுபிடித்து விடுவார். இந்திய சினிமாக்களில் மிக மலிவாக  இன்றுவரை கையாளப்படும் காட்சி இது.   
ஆனால் காண்;டாமிருக கொம்புகளில்  செய்யப்பட்ட  பாத்திரங்களில்  விஷம்கலந்த உணவை  அல்லது  பானத்தை  கொடுத்தால் அது காட்டிக் கொடுத்து விடுமாம். 

காண்டாமிருகக் கொம்புகளை அதிகம் பயன்படுத்தும்  நாட்டிற்கு  1970  ஆம் ஆண்டில்  ஒரு விருது அறிவித்திருந்தால்,  அதனை ஜப்பான் நாடு தட்டிப்பறித்திருக்கும். ஆனால் இன்றைய நிலையில் ‘பாவம்    காண்டாமிருகங்களை  தொடக்கூடாது”  என்று  ஜப்பான் சைவவிரதம் மேற்கொண்டுள்ளதாம்.

ஜப்பானைத்  தொடர்ந்து  தென் கொர்pயா,  டைவான், ஆசிய நாடுகள், 1980  முதல்   1990  வரை  காண்டாமிருகக்  கொம்புகளில்  ஆர்வம்  காட்டின. இதனால் ஆயிரக்கணக்கில் காண்டாமிருகங்கள்  கொல்லப்பட்டன.

ராஜா ராணி காலத்தில்  பிச்சுவாக்கள்  என்பவை ரொம்பவும் பிரபலமானவை. அரச குடும்பத்தினர்  அல்லது   போர் வீரர்கள்,  இடுப்பு வாருடன் அணியும் ஆயுத  ஆபரணம்  பிச்சுவா. 

இதனை சிறுவாள்  என்றும்,  குறுவாள்  என்றும்  சொல்லலாம்.  அதைவிட  குத்துவாள் என்பது   பொருத்தமான வார்த்தை.  எதிர்பாராத தாக்குதல்களை சமாளிக்க  இந்த குத்துவாள்  உபயோகமாக இருக்கும்.   

இடுப்பு பெல்ட்டும்;   இரண்டு பக்கமும் தொங்கும் துப்பாக்கிகளும் இல்லை என்றால் கவ்பாய் படமே எடுக்க முடியாது. அதே பெல்ட்டில் அன்று பிச்சிவாக்கள் இன்று துப்பாக்கிகள்;.  

இந்த பிச்சுவாக்களுக்கு  அழகழகாய்  பிடிகள் போட  காண்டாமிருகத்தின் கொம்புகள்  பயன்படுத்தப்பட்டன.  யானைத்  தந்தங்களில் பிடிகள் போட்ட வாள்கள்  மற்றும் குத்து வாள்கள்,  இந்தியாவிலுள்ள பல மியூசியங்களில்  இன்றும்கூட பார்க்கலாம்.  ஆலை  இல்லாத ஊூர்  இலுப்பைப் பூ மாதிரி, ஆனைத்தந்தம்   இல்லாத இடங்களில்  காண்டாமிருகக்கொம்புகள்;.  இரண்டும்  கனமான  ஜீவன்கள்தான். 

இன்றும்கூட  சில மலைவாழ் மக்களின் வீடுகளின் எதிரில் இருக்கும் வைக்கோல்   போர்தான் அவர்களது குடும்ப அந்தஸ்தை  நிர்ணயிக்கும். அதுபோல  இன்று நகர்ப்புறங்களில்   வீட்டு  வாசலில் ‘கார்’  நின்றால்  அது இருக்கப்பட்ட கை என்று அர்த்தம்.  அதுபோல  காண்டாமிருகத்தின் கொம்புகளில் செய்யப்பட்ட பாத்திரங்கள் இருந்தால்,  அந்த வீட்டுக்காரர் கோடீஸ்வரன் என்று அர்த்தம், வியட்நாமில்.

அதனால் வியட்நாமில்  ஒருகாலத்தில்    இதன் உபயோகம் அதிகம்  இருந்தது.  அங்கு பிசினஸ் பேசும்  கூட்டங்கள்;,  மற்றும் குடும்ப விழாக்களில்  “கொண்டா  காண்டாமிருக  கொம்பு  சூப்பு  ஒரு அண்டா”  என்பார்கள்.   அதற்குப் பிறகுதான்  பேச்சு  கொண்டாட்டம்   எல்லாம்.


ஒருகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு தண்ணீர் கொடுப்பது மரியாதை.  அதற்குப்பிறகு  டீகாபி  கொடுப்பது  மரியாதை. இப்போது  டீகாபிக்கு பதிலாக  ‘கோக்’  கொடுப்பது மரியாதை என்று நினைக்கிறார்கள்.  
வியட்நாம் வீடுகளில் விருந்தினர்களுக்கு காண்டாமிருகத்தின் ‘கொம்புபானம்” தருவது மரியாதை என்று நினைக்கிறார்கள்.
  
அப்படிப்பட்ட காரியங்களை யெல்லாம் முடிவுக்கு கொண்டுவரும் வகையில்தான்  இந்த ஆண்டு சட்ட விரோதமான ‘வனவிலங்குகள்  வேட்டைக்கும் வியாபாரத்திற்கும் கட்டுப்பாடு”  என்பதை  முன்னிறுத்தி இந்த ஆண்டின்  உலக  சுற்றுச்சூழல் தினம்  கொண்டாடப் படுகிறது.

JAVAN RHINOCEROS
 Images Courtesy: Thanks Google
                        













  

No comments:

Post a Comment