Select Your Favorite Topic! Enjoy Reading!!

Monday, June 13, 2016

மண்புழுவினால் முதல் லட்சாதிபதி ஆன பெண் - 4

மேரி அப்பெல்ஹோப்

வீட்டிலேயே, 1972 ல் முதன் முதலாக மண்புழு உரம் தயாரித்த புண்ணியவதி மேரி அப்பொலெப். மேரி அப்பொலெப் மிச்சிகன் நாட்டைச் சேர்ந்த ஒரு பயாலஜி டீச்சர். மீன் பிடிப்பதற்காக புழு விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் மேரி தூண்டில் போட்டுசிவப்பு மண் புழுக்களை வாங்கினார். அதன் உற்பத்தி செய்த “வெர்மி கம்ப்போஸ்ட்” ஐ காசாக்கினார் மேரி.

1979-ல் மேரி இது பற்றிய ஒரு புத்தகம்  எழுதினார். புத்தகத்தின் பெயர் “குப்பையைத் தின்னும் மண்புழுக்கள்.” மக்கள்  போட்டி போட்டு வாங்கினர் குப்பையைத் தின்னும் மண்புழுக்களை. புத்தகம் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. மண்புழுவினால் முதல் லட்சாதிபதி ஆனவர் பயாலஜி டீச்சர் மேரி அப்பொலெப்.

                            இந்தியாவின் முதல் மண்புழு ஆராய்ச்சி நிலையம்

1970 களில் நெதர்லேண்ட்ஸ், இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் அதிக அளவில் “மண்புழு” உரம் உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். இதே காலகட்டத்தில் ‘தி பவால்கர் எர்த்வோர்ம் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் ( வுhந டீயஎயடமயச நுயசவாறழசஅ சுநளநயசஉh ஐளெவவைரவந) இந்தியாவில் மண்புழு ஆய்வுகளைத் தொடங்கியது.

இத்தாலி, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் மண்புழு உரம் பெருமளவில் புழக்கத்தில் உள்ளது.
மண்ணை பொன்னாக மாறும் மாயாஜாலம்
ரசாயன உரத்தின் அபாயம் நீங்கும். உணவுப் பொருட்கள் நச்சுத்தன்மையிலிரந்து விடுபடும். விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு குறையும். விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு கிடைக்கும். உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்தும்விளை பொருட்களின் சுவையை அதிகரிக்கும். மண்ணில் அங்ககச்சத்தைக் கூட்டும்.

நுண்ணுயிர்கள் பெருக உதவும். மண்ணின் நீர்பிடிக்கும் தன்மையைக் கூட்டும்.  மண்ணின் கார அமில நிலையைக் சீராக்கும். பூச்சி  நோய் தாக்குதல் குறையும். களைகள் குறையும். தழைச்சத்தை 5 மடங்கு அதிகமாக்கிக் கொடுக்கும். சாம்பல் சத்தை 7 மடங்களாகப் பெருக்கும்.  சுண்ணாம்புச் சத்தைப் போல 1.5 மடங்கு அதிகமாக்கும்.

மண்ணில் காற்றோட்டம், பொல பொலப்புத் தன்மை, வடிகால் வசதி, ஈரத்தை ஈர்க்கும் தன்மை, ஆகியவற்றை சீர் செய்கிறது.

இதுதான்  மண்ணை பொன்னாக மாற்றும் மாயாஜாலம்.
மேரி அப்பெல்ஹோப் எழுதிய புத்தகம் 

Image Courtesy: Thanks Google

No comments:

Post a Comment