Select Your Favorite Topic! Enjoy Reading!!

Wednesday, June 15, 2016

உரம் தயாரிப்புக்கு ஏற்ற மண்புழு வகைகள் - 6

Images Courtesy: Thanks Google
இந்திய மண்புழு
ஐரொப்பிய செம்புழு

ஆப்ரிக்க மண்புழு
உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை 6000 வகை
இவை 20 குடும்பங்களைச் சேர்ந்தவை.
இந்தியாவில் இருப்பவை மட்டும் 500 வகை.
தமிழ்நாட்டில் அதிகம்  வளர்க்கப்படுபவை சுமார்  மூன்று வகை.
இந்திய மண்புழு, ஐரோப்பிய மண்புழு, மற்றும் ஆஃப்ரிக்க மண்புழு

இந்திய மண்புழு

பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ்
(PERIONIX EXCAVATUS)


  • இது நம்ம ஊர் மண்புழு
  • இமயமலைப்பகுதி இதன் தாயகம்.
  • வட அமெரிக்காவில் இது   ரொம்ப பிரபலம் 
  • வியாபார ரீதியான  வகை இது 
  • வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலம் பகுதிக்கு ஏற்றது
  • புழுக்கள் மெல்லியதாக இருக்கும்
  • ஐரொப்பிய செம்புழுக்களைவிட வேகமாக ஊர்ந்து செல்லும் 
  • ஈரம் குறைவாகவும் வெப்பம் அதிகமாகவும் இருக்கும் இடங்களில் கூடுதலாக உரத்தை உற்பத்தி செய்யும்
  • சமையலறைக் கழிவு, பண்ணைக்கழிவு, கழிவு நீர் கால்வாய் ஆகியவற்றில் வசிக்கும்
  • இதன் அறிவியல் பெயர் பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ்



ஐரொப்பிய செம்புழு
(EISENIA  FETIDA)


  • அழுகிக் கொண்டிருக்கும் தாவரக் கழிவு, கம்போஸ்ட் மற்றும் எருக்களில் வசிக்கும்.
  • பரவலாக உர உற்பத்திக்கு ஏற்றவை.
  • ஐரோப்பா இதன் தாய் மண் 
  • பல நாடுகளில் இவை அறிமுகம் ஆகி உள்ளன. 5. புழுக்களை அழுத்திப் பிடித்தால் அவற்றின் உடலில் ஒருவித மோசமான வாடை வீசும் திரவம் சுரக்கும்.
  • மண்கண்டத்தின் மேல் பகுதிலேயே வசிக்கும்.
  • அதற்கு பிடிக்காது பகல் வெளிச்சம் 
  • பிடித்தமானது இருட்டு 
  • தினசரி சாப்பிடுவது, தன் உடல் எடையைப் போல் இரண்டு மடங்கு. 
  • எண்ணிக்கையில பெருக்கம் அடைவது, 90 நாட்களில் இரு மடங்கு
  • ஐசினியா ஃபெட்டிடா, இதன் அறிவியல் பெயர் 


ஆப்ரிக்க மண்புழு
(EUDRILUS  EUGENIAE)


  • மேல் பகுதி மண்கண்டத்தில் வசிக்கும் மண்புழுக்களில் ஒன்று. 
  • மேல் மட்ட மண்புழுக்கள்தான் அதிக மண்புழு உரத்தை உற்பத்தி செய்யும்.
  • மிக வேகமாக இனப்பெருக்கம் ஆகும்.
  • 8 முதல் 10 வாரங்களில்  முழு வளர்ச்சி அடையும்.
  • வளர்ந்த புழு ஒன்று 2.5 கிராம் எடை இருக்கும் 
  • உடலில் ஊதா மற்றும் சாம்பல் நிறம் பூசியது போல் இருக்கும். 
  • புழுவின் பின்புற உடல் சீராக சரிந்து சென்று கூர்மையாக ழுடிவடையும்.
  • இதன் தாய்வீடு மேற்கு ஆப்ரிக்காவின் வெப்பமான பகுதி. 
  • வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாக மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் வகை 
  • யூட்ரில்லஸ் யூஜினியா என்பது இதன் அறிவியல் பெயர்


No comments:

Post a Comment