Image Courtesy: Thanks Google |
- பஞ்சகவ்யம் ஒரு இயற்கை உரம்.
- பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய், ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது.
- உரமாகவும், பூச்சிக் கொல்லி மற்றும் பூசணக் கொல்லியாகவும், பயன்படுகிறது.
- மண்ணிண் பௌதீக தன்மையை மேம்படுத்தி, நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவுகிறது.
- இதை காசு கொடுத்து வாங்க வேண்டாம். நாமே தயாரித்துக் கொள்ளலாம்.
- பசுவின் சாணம் - 7 கிலோ
- பசுவின் கோமியம் - 10 லிட்டர்
- பசு நெய் -1 கிலோ
- பசும்பால் - 3 லிட்டர்
- பசுவின் தயிர் - 2 லிட்டர்
- தண்ணீர் -10 லிட்டர்
- இளநீர் - 2 லிட்டர்
- வெல்லம் -3 கிலோ
- நன்கு கனிந்த பூவன் வாழைப்பழம் - 12
- அகன்ற வாய் உள்ள பிளாஸ்டிக் (அ) மண் பாத்திரம் - 1
- பாத்திரத்தின் வாயை கட்டி மூடுவதற்கான துணி – 1
- பஞ்சகவ்யத்தை கலக்குவதற்கான கொம்பு (அ) குச்சி – 1
செயல்;முறை விளக்கம்.
- பசும் சாணம் 7 கிலோவுடன் 1 கிலோ பசுநெய்யை ஊற்றி நன்கு பிசையவும்.
- சாணம் நெய் கலவையை, அந்த பாத்திரத்தில் இட்டு, துணியினால் அதன் வாயினை கட்டி, 3 நாட்களுக்கு வைத்திருக்கவும்.
- பாத்திரத்தை ஒரு நிழலான இடத்தில் வைக்கவும.;
- அந்த பாத்திரத்தில், 4 வது நாள், 10 லிட்டர் கோமியம், 10 லிட்டர் தண்ணீர், ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரைக்கவும்.
- பாத்திரத்தின் வாயினை துணியினால், வேடு கட்டி மூடவும்.
- இந்த கலவையை 15 நாட்களுக்கு வைத்திருக்கவும்
- ஓவ்வொரு நாளும். காலை (அ) மாலை வேளையில், ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிவிட வேண்டும்.
- பதினாறாவது நாள், பசுவின் பால் 3 லிட்டர், பசுவின் தயிர் 2 லிட்டர், இளநீர் 3 லிட்டர், வெல்லம் 3 கிலோ, கனிந்த பூவன் வாழைப் பழங்கள் 12, ஆகியவற்றை இந்த கலவையுடன் சேர்த்து, நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
- மீண்டும் பாத்திரத்தை மூடி, நிழலில் 30 நாட்கள் வைத்திருக்கவும்.
- ஒவ்வொரு நகளும் மறவாமல், கலவையை, நன்றாக கலக்கிவிட வேண்டும்.
- முப்பத்தி ஒன்றாவது நாள், பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.
- பெருந்துளிகளாக வீழ்வதற்கேற்ப, கைத்தெளிப்பானில் தெளி முனையை மாற்றிக் கொள்ளவும்.
- ஒரு எக்டேர் பரப்பிற்கு, 50 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை, பாசன நீரில் கலந்து பாய்ச்சலாம்;.
- நடவு செய்யும் பயிர் நாற்றுக்களை, 3 சத பஞ்ச கவ்யம் கரைசலில் நனைத்து நடவு செய்யலாம்.
- இஞ்சி, மஞ்சள், போன்றவற்றின் விதைக் கிழங்குகளையும், பஞ்ச கவ்யம் கரைசலில், நேர்த்தி செய்து, நடவு செய்யலாம்.
- கரும்பு விதைக் கரணைகளை, 3 சத பஞ்ச கவ்யா கரைசலில், 30 நிமிடம் ஊற வைத்து நடவு செய்யலாம்.
- சேமிக்கும் விதைகளை 3 சத பஞ்ச கவ்யா கரைசலில், நனைத்து, உலர வைத்து, பாதுகாக்கலாம்.
- பஞ்சகவ்யம் 3 சத கரைசல் தயார் செய்ய 300 மிலியை, 10 லிட்டர் நீருடன் கரைத்துக் கொள்ளவும்.
அமுதக்கரைசல்
- மிகவும் சுலபமாக தயாரிக்கக் கூடிய இயற்கை உரம்.
- பசும் சாணம், பசும் கோமியம், பயறு மாவு, வெல்லம் ஆகியவை இருந்தால் போதும்.
- முக்கியமாக மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கி பயிர் மகசூலை அதிகரிக்கும் திரவ உரம்.
- 20 லிட்டர் அமுதக்கரைசல் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்
- 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரம் - 1
- புதிய சாணம் - 2 கிலோ
- பசுவின் கோமியம் - 2 லிட்டர்
- கருப்பட்டி அல்லது வெல்லம் - 200 கிராம்,;,
- பயறு மாவு - 200 கிராம்
- தண்ணீர் - 20 லிட்டர்.
செயல்முறை விளக்கம்
- 20 லிட்டர் தண்ணீரில் சாணம், கோமியம், பயறு மாவு, வெல்லம், அனைத்தையும் கரைக்கவும்.
- மண் பாண்டம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் இந்த கரைசலை தயாரிக்கவும்.
- பாத்திரத்தின்; வாயினை ஒரு துணியினால் வேடுகட்டி மூடவும்.
- பாத்திரத்தை நிழலான இடத்தில் 48 மணி நேரம் வைத்திருக்கவும்.
- காலையும் மாலையும் ஒரு குச்சியினால் நன்கு கலக்கவும்.
- மூன்றாவது நாள் அமுதக்கரைசல் தயார்.
- இதனை ஒரு லிட்டர் அமுதக் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிர்களின் வேர்ப்பகுதியில் ஊற்றவும்.
- அல்லது பாசன நீரில் கலந்து விடலாம்.
- தொடர்ந்து அமுதக் கரைசலை வேர்ப் பகுதி மண்ணில் ஊற்றுவதால் அதனை வளமானதாக மாற்ற முடியும்.
Image Courtesy; Thanks Google