Image Courtesy:Thanks Google |
- மலர்களின் ராஜா ரோஜா.
- ரோஜா மாலைக்கு தனி மரியாதை வுண்டு.
- பெண்கள் விரும்பி சூடுவது ரோஜா.
- அதனால்தான் ஒரு பூ 10 ரூபாயக்கு விற்கப்படுகிறது.
1. முக்கியமான சமாச்சாரங்கள்
• பூக்களை பறித்தவுடன் எடுத்துச்செல்ல சாலை வசதி
உள்ளதா ..?
• பூக்களைப் பறிக்க ஆள்வசதி வுள்ளதா ..?
• உங்கள் பதில் ஆம் என்றால் நீங்கள் ரோஜா சாகுபடி
செய்யலாம்.
• இது எல்லா மலர்ப்பயிருக்கும் பொதுவானது.
2. எப்படிப்பட்ட மண்தேவை ..?
• மணற்பாங்கான இருமண்பாடு நிலம் ஏற்றது.
• பொதுவாக நல்ல வடிகால் வசதியுள்ள மண்வகை
சிறந்தது.
• சமவெளிப்பகுதிகளில் சாகுபடி செய்யவாம்.
3. ரகங்கள்
• எட்வர்ட் ரோஜா.
• ஆந்திர சிவப்பு ரோஜா.
4. நடவுச் செடிகள்
- ரோஜா பதியன்களை நடுங்கள்.
- வேர்க்குச்சிகளையும் பயன்படுத்தலாம்.
- பதியன்களும் குச்சிகளும் தனியார் நாற்றங்கால்களில் கிடைக்கும்.
- தோட்டக்கலைத் துறை அலுவலர்களிடம் கிடைக்கும்.
5. குழியெடுத்து நடவு செய்யுங்கள்
• குழிகளை 45 செ.மீ. நீளம்இ 45 செ.மீ. அகலம்இ 45 செ.மீ.
ஆழம் இருக்குமாறு எடுங்கள்.
• ஒரு குழிக்கும் இன்னொரு குழிக்கும் ஒரு மீட்டர் இடைவெளி கொடுங்கள்.
• குழிகளின் ஒரு வரிசைக்கும் இ இன்னொரு வரிசைக்கும் 2 மீட்டர் இடைவெளி கொடுங்கள்.
• குழிகளை ஆறப் போடுங்கள்.
• ஒரு குழிக்கு 10 கிலோ தொழு வுரம் இடுங்கள்.
6. நீர்ப் பாசனம்
• நடவு செய்தவுடன் ஒரு முறை.
• செடி பச்சைபிடித்து வளரும்வரை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை.
• பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சுங்கள்.
• மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு நீர்ப்பாய்ச்சுங்கள்.
7. இயற்கை எருவும் உரமும் இடுங்கள்.
8. கவாத்து செய்யுங்கள்
• பூத்து ஓய்ந்த கிளைகளில் பாதி அளவை நறுக்குங்கள்.
• பலவீனமான சிம்புகளை நறுக்கி விடுங்கள்.
• நோய் தாக்கிய குச்சிகளை வெட்டி அப்புறப்படுத்துங்கள்.
• கோணல் மாணவான குச்சிகளையும் நறுக்கி விடுஙகள்.
• பூ எடுக்காத சிம்புகளையும் வெட்டி எடுங்கள்.
• தேலையில்லாத குச்சிகளை கிளைகளை நீக்குவதற்கு கவாத்து என்று பெயர்.
• வெட்டி எடுத்த கிளைப்பகுதிகளில் நோய் தாக்காமல் இருக்க மாட்டு சாணத்தால் மூடிவையுங்கள்.
9. ரோஜாவைத் தாக்கும் பூச்சிகள்
• ரோஜா வண்டு
• சிவப்பு செதில் பூச்சி
10. ரோஜாவைத் தாக்கும் நோய்கள்
• கரும்புள்ளி நோய்
11. அறுவடை
• ரோஜா நடவு செய்த முதல் ஆண்டில் பூக்க ஆரம்பிக்கும்.
• இரண்டாம் ஆண்டிலிருந்து நிறைய பூக்களைக் கொடுக்கும்.
• கவாத்து செய்த 45 நாட்களுக்கு பின்னர் புஸ்ரீக்க ஆரம்பிக:கும்.
• முழுவதும் பூத்தபூக்களையே அறுவடை செய்யுங்கள்.
• விடியற்காலையில் பூக்களை பறிக்க வேண்டும்.
• பறித்த பூக்களை உடனே அருகிலுள்ள பூ மார்க்கெட்டிற்கு அனுப்பி வற்பனை டிசெய்யுங்கள்.
• ஒரு எக்டரில் 6 முதல் 7 ½ லோடு - டன் பூக்கள் கிடைக்கும்.
Image Courtesy:Thanks Google |
No comments:
Post a Comment