Select Your Favorite Topic! Enjoy Reading!!

Wednesday, May 25, 2016

9. துலுக்க சாமந்தி சாகுபடி

Image Courtesy:Thanks Google

  • கிராப்புற பெண்கள் விரும்பி அணியும்  பூ.
  • எவ்வித சிரமமுமின்றி செய்யக்கூடிய பயிர்.
  • ஒரு ஹெக்டரில் 18  டன்  மகசூல் தரக்கூடிய பூப்பயிர்.
1. எங்கு சாகுபடி செய்யலாம் ..?

வெப்பமான பகுதிகள் ஏற்றவை.
பாசன வசதி உள்ள இடங்கள்.
வடிகால் வசதிகொண்ட  இருமண்பாடான நிலங்கள்.

2. எவ்வளவு விதை தேவை ..?

• ஒரு ஹெக்டருக்கு 1.5  கிலோ விதை தேவை.
• விதைக்கும் முன்னர் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்துடன்      50 மில்லி  ஆறிய அரிசிக்கஞ்சியை  கலக்குங்கள்.
• அசோஸ்பைரில்லம் கலவையுடன் விதையைக்கலந்து
  விதையுங்கள்.

3. எங்கு விதைக்க வேண்டும் ..?

• தேவையான அளவில் மேட்டுப்பாத்தி  அமையுங்கள்.
• மேட்டுப்பாகத்தில்;;; அமையுங்கள்.
• ஆண்டு முழுவதும் விதைக்கலாம்.
   4. பார்களில் நடவு செய்யுங்கள்
• 45  செ.மீ. இடைவெளியில் பார்களை அமையுங்கள்.
• நான்கு வார வயதுடைய நாற்றுக்களை பறித்து  நடவேண்டும்.
• நாற்றுக்களை 35 செ.மீ. இடைவெளியில் நடுங்கள்.

5. பாசனம் கொடுங்கள்

• நட்டவுடன் பாசனம் கொடுங்கள்.
• பின்னர்  வாரம் ஒரு முறை பாசனம் கொடுங்கள்.
• பின்னர் தேவையை அனுசரித்து தண்ணீர் கொடுங்கள்;.
• தண்ணீர்  தேங்கக்கூடாது.

6. இயற்கை எருவும் உரமும்  இடுங்கள்

7. எப்போது அறுவடை செய்ய வேண்டும்..?

  • துலுக்க சாமந்தியின் வயது 130 முதல் 150 நாட்கள்.
  • நடவுசெய்த 60 ஆம் நாள்முதல்  பூக்களைப் பறிக்கலாம்.
  • மூன்று நாட்களுக்கொரு முறை பூக்களைப் பறிக்க வேண்டும்.
  • ஒரு ஹெக்டேர் பரப்பில் 18 டன்  பூ மகசூல் கிடைக்கும்.
  • பூக்களைப் பறித்தவுடன் மார்க்கெட்டிற்கு  விற்பனை செய்ய அனுப்புங்கள்.

Image Courtesy:Thanks Google

                         


No comments:

Post a Comment