Image Courtesy:Thanks Google |
- சாமந்தி கிராமப்புற மக்கள் விரும்பி அணிவது.
- கதம்ப மாலையில் அதிகம் இடம்பெறுவது சாமந்தி.
- ஒரு ஹெக்டரில் 20 டன் வரை பூ மகசூல்தருவது,
1. எங்கு பயிர் செய்யலாம் ..?
• வெப்பமான பகுதிகள்.
• வடிகால் வசதிகொண்ட இருமண்பாடான மண்.
2. என்ன ரகங்கள் போடலாம் ..?
- கோ. 1
- கோ. 2
- எம் டி யு. 1
- கன்றுகளை ஏற்கனவே சாகுபடி செய்த விவசாயிகளிடம் பெறலாம்.
- எங்கு கிடைக்கும் என்ற விவரம் தோட்டக் கலைத்துறை அலுவலர்களிடம் பெறலாம்.
3. நடவுக்கு கன்றுகள்
• ஒரு ஹெக்டேர் நடவு செய்ய 1, 11, 000. கன்றுகள் தேவை .
• ஏற்கனவே சாகுபடி செய்த பயிரிலிருந்து பக்கக்கன்றுகளை எடுங்கள்.
• 15 செண்ட் பரப்பில் எடுக்கும் கன்றுகள் போதுமானது.
4. எப்போது எப்படி நடவு செய்வது ..?
• ஜுன் , ஜுலை மாதங்களில் நடவு செய்யுங்கள் .
• நடவு வயலில் 30 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமையுங்கள்.
• பார்களின் ஒரு பக்கத்தில் 30 செ.மீ. இடைவெளியில் கன்றுகளை நடுங்கள்.
5. பாசனம் கொடுங்கள்
• நட்டவுடன் ஒரு தண்ணீர் கொடுங்கள்.
• முதல் மாதத்தில் வாரம் இரண்டு முறை தண்ணீர் கட்டுங்கள்.
• தொடர்ந்து வாரம் ஒருமுறை தண்ணீர் கட்டுங்கள்.
6. இயற்கை உரங்களை தேவைக்கு ஏற்ப இடுங்கள்.
7. சாமந்தியை தாக்கும் பூச்சிகள்
• இலைப்பேன்
• அசுவணி
• கம்பளிப்புழு
• இயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துங்கள்
8. சாமந்தியை தாக்கும் நோய்கள்
• வேர் அழுகல் நோய்
• இலைப்புள்ளி நோய்
• இயற்கை நோய்க்கொல்லிகளை பயன்படுத்துங்கள்
9. அறுவடைக்கு தயார்
- நடவுப்பயிரின் வயது 6 முதல் 8 மாதங்கள்.
- மருதாம்பு பயிரின் வயது 4 மாதங்கள்.
- மூன்றாம் மாதத்திலிருந்து பூக்களை பறியுங்கள்.
- மாதம் மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறை பூக்களைப் பறியுங்கள்.
- நடவுப்பயிர் ஒரு ஹெக்டேரில் 20 டன் மகசூல் தரும்.
- மருதாம்புப்பயிர் ஒரு ஹெக்டேரில் 10 டன் மகசூல் கிடைக்கும்.
Image Courtesy:Thanks Google |
No comments:
Post a Comment