Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, May 27, 2016

1. காளான் வளர்ப்பு

Image Courtesy: Thanks Google

  
1. சிப்பிக்காளான்  வளர்ப்பு
காளான் புரதச்சத்து நிறைந்தது.
குறைவான கொழுப்பு சத்து கொண்டது.
வைட்டமின் சத்துக்ககள் அதிகம் வுடையது.
மாவுச் சத்தும் அடங்கியது.

2. பெரிய இடம் தேவையில்லை
மிகச்சிறிய இடமே போதும்.
வீட்டு வராந்தாவில் வளர்க்கலாம்.
குடிசைகளில் வளர்க்கலாம்.

3. காளான் படுக்கை  
காளான் வளர்க்க எளிமையான பொருட்களே போதும்.
வைக்கோலை பயன் படுத்தலாம்.
மக்காச்சோள சக்கையையும் பயன்படுத்தலாம்.
இவை இரண்டும் இல்லாதவர்கள் வாழை மட்டையை பயன் படுத்தலாம்.

4. காளான் வளர்க்கத் தேவையான பொருட்கள்
காளான் விதை.
வைக்கோல்.
பாலித்தீன் பைகள் அளவு: 0 செ.மீ. நீளம் ஒ   30 செ.மீ.  அகலம்  
கொண்டவை, 
பைகளில் எதிர் எதிராக 1 செ.மீ  துவாரங்கள் 
வேண்டும்.
நல்ல தண்ணீர்.

5. வைக்கோலை என்ன செய்ய வேண்டும்  ?
வைக்கோலை சிறியதுண்டுகளாக நறுக்குங்கள்.
துண்டுகளை நல்ல தண்ணீரில் 6 மணிநேரம் ஊறவையுங்கள்.
ஊற வைத்த வைக்கோலை ஒரு பாத்திரத்தில் போடுங்கள். 
பின்னர் ஒரு மணி நேரம்  வேக வையுங்கள்.
அதன் பின் தண்ணீரை வடித்து  வைக்கோலை உலர வையுங்கள்.
உலர்ந்த வைக்கோல் துண்டுகளை பாலித்தீன் பைகளில் 10 செ. மீ.  உயரத்திற்கு நிரப்புங்கள். 

6. காளான் விதையை என்ன செய்ய வேண்டும் ..?
புட்டியில் உள்ள காளான் விதையை  குச்சியினால் கிளறுங்கள்.
கிளறிய விதையை இரண்டு பாகங்களாக பிரித்து எடுங்கள்.
ஒவ்வொரு பாகத்தையும் நான்கு அல்லது ஐந்து பாகங்களாக பிரியுங்கள்.
பிரித்த விதைப் பகுதிகளை பாலீத்தின் பையில் வைக்கோலின் மேல் சீராகத்தூவுங்கள்.
வைக்கோலையும் காளான் விதையையும் நான்கு அல்லது ஐந்து அடுக்குகளாக நிரப்புங்கள்.
நிரப்பிய பின்னர் பாலித்தீன் பையின் வாயை நூலினால் கட்டுங்கள்.  இதற்குப் பெயர் காளான் உருளை.

7. காளான் உருளைகளை பராமரிப்பது எப்படி..?
காளான் உருளைகளை காளான் குடிலுக்குள் வைக்க வேண்டும்.
காளான் குடிலில் நல்ல ஈரப்பதம் ( 80 முதல் 95  சதம் )  இருக்க வேண்டும்.
குடிலில் குறைந்த வெப்பநிலை  (24 செல்சியஸ் ) இருக்க வேண்டும்.
காளான் குடிலின் ஓரத்தில் சாக்குப்பைகளைக் கட்டி தொங்கவிடுங்கள்.
சாக்குப்பைகளை தண்ணீரால் நனையுங்கள்.
தரையில் மணலை  நிரப்பி  தண்ணீர் தெளியுங்கள்.
அகலமான மண்தொட்டியை வையுங்கள்  அதில்  நீரை நிரப்புங்கள்.
இப்படி இந்த அறையின் ஈரப்பதத்தையும் வெப்ப நிலையையும் சீராக வைத்திருங்கள்.

8. காளான் மொட்டுக்கள்
காளான் மொட்டுக்கள்  12 நாட்களில் தோன்றும்.
இப்போது பாலித்தீன் பையை  கிழித்து எடுங்கள்.
மொட்டுக்கள் விரிந்து  குடைபோல் காளான்வளர ஆரம்பிக்கும்.

9. காளான் செடி
விரிந்து வளர்ந்த காளான் 25 நாட்களில் அறுவடைக்குத் தயார்.
வளர்ந்த காளான்களை அறுவடை செய்யுங்கள்.
பிறகு 10 நாட்களுக்குள் இரண்டு முறை அறுவடை செய்யலாம்.
வைக்கோலின் எடையில் 40 முதல் 80 சதம் காளானின் மகசூல் கிடைக்கும்.
அறுவடை செய்த காளானை 24 மணி நேரத்திற்குள்  பயன்படுத்திவிட  வேண்டும்.
காளானை காயவைத்தும் டப்பாக்களில் அடைத்தும் வைத்துக் கொள்ளலாம்.
ஒரு கிலோ காளானை  40 ரூபாய் வரை  விற்கலாம்.
இதை பெரிய  நட்சத்திர ஹோட்டல்களிலும் காய்கறி  மார்க்கெட்டிலும் வைத்து விற்பனை செய்யலாம்.

10. காளான் ஆம்லெட் 
காளானில் ஆம்லெட், சூப், கட்லெட், பஜ்ஜி,  ஆகிய சுவையான  உணவுப்  பொருட்களை தயார் செய்யலாம்.

11. காளான் வளர்ப்புப் பயிர்ச்சி 
வேளாண்மைக் கல்லூரிகளில், ஒவ்வொரு மாதமும் ஒருநாள்  காளான் வளர்ப்பு பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.
காளான் விதைப்புட்டி  வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கும்.  
மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.  
                              
Image Courtesy:Thanks Google
                       








   



No comments:

Post a Comment