Select Your Favorite Topic! Enjoy Reading!!

Tuesday, June 21, 2016

திறந்த வெளிகளில் மண்புழு உரத் தயாரிப்பு - 12

Image Courtesy: Thanks Google
  • கொட்டகை இல்லை பரவாயில்லை
  • தொட்டி இல்லை பரவாயில்லை
  • பெட்டி இல்லை பரவாயில்லை
  • நிழல் இல்லை பரவாயில்லை
  • கவலை வேண்டாம், திறந்த வெளிகளில் கூட மண்புழு உரம் தயாரிக்கலாம்.
  • ஆனால் அந்த இடத்தில் இழை தழை கொடுக்கும் மரங்கள் இருக்க வேண்டும்.



மண்புழு உரம் தயாரிப்பைத் தொடங்கிய பின்னால் கூட மரங்களை நட்டு வளர்க்கலாம்.

பொன்னாவாரை, வேம்பு, புங்கன், கிளைரிசிடியா, குமிழ், போன்ற தட்டுப்பாடு இல்லாமல் தழை தரும் மரங்கள் உள்ள இடம் பொருத்தமானது.


தேவைப்படும் பொருட்கள்

  • திறந்த வெளி; நிலப்பரப்பு (6 x 3 அடி)
  • பக்கத்தில் தழை தரும் மரங்கள்
  • பிறகு கூட மரங்களை நடலாம்
  • உதாரணத்திற்கு பொன்னாவாரை, வேம்பு, புங்கன், கிளைரிசிடியா, குமிழ்
  • மணல் 100 முதல் 120 கிலோ
  • தேங்காய் உறி மட்டைகள் எண்ணிக்கையில் 500
  • கரும்பு சோகை, வைக்கோல் அல்லது  உலர்ந்த இலைகள்; - 150 கிலோ
  • மாட்டுச்சாணம் - 250 முதல் 300 கிலோ
  • தண்ணீர் - 20 முதல் 25 குடம்
  • பசுந்தழைகள். 150 கிலோ
  • மண்புழு - 2 கிலோ அல்லது  எண்ணிக்கையில் 2000


தயாரிக்கும் முறை;

திறந்த வெளியில் ஒரு இடத்தை தேர்வு செய்யவும். 3.5 அடி அகலம், 6 அடி நீளத்திற்கு முளைக்குச்சி அடித்து கயிறுகட்டி  மார்க்செய்யவும். முன்குறித்த அளவில் 0.5 அடி ஆழத்திற்கு குழி எடுக்கவும். குழியில் மணலை சீராகப் பரப்பவும். அதன் மீது தேங்காய் உறி மட்டைகளை, முதுகுப் பகுதி கீழே இருக்குமாறு அடுக்குங்கள். பின்னர் 0.5 அடி உயரத்திற்கு வைக்கோல் கரும்பு சோகை அல்லது தாவரக் கழிவை பரப்புங்கள். இதுதான் புழுப்படுக்கை.

புழுப்படுக்ககையின் மீது சாணத்தை கரைத்து சோரத் தெளியுங்கள். அதன் மீது 0.5 அடி கனத்திற்கு மாட்டுச் சாணத்தை பரப்புங்கள். பின்னர் பசுந்தழைகளையும் அதன் மீது தோட்டத்து மண்ணையும் 0.5 அடி உயரத்திற்குப் போட்டு தண்ணீர் தெளிக்கவும். புழுப் படுக்கையில் நான்கு அடி இடைவெளியில் 6 அடி கனமான கம்புகளை செங்குத்தாக நிறுத்தவும். இப்போது ஒரு அடுக்கு புழுப்படுக்கை தயார்.

இதுபோல 5 அடி வரை பல அடுக்குகளைப் போட்டு பழுப்படுக்கையை தயார் செய்ய வேண்டும். பின்னர் புழுப்படுக்கையில் செருகிய கம்புகளை எடுத்து விடவும். கம்புகள் எடுத்த துவாரத்தின் மூலம், புழுப்படுக்கையில் ஏற்படும் சூடும் ஆவியும் வெளியேறும். புழுப்படுக்கையின் மீது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சீராக தண்ணீர் தெளிக்கவும். 75 முதல் 90 நாட்களில் புழுப்படுக்கையில் உள்ள சூடு தணிந்திருக்கும். இந்த சமயத்தில் ஒரு சதுர அடிக்கு 200 கிராம் மண்புழுக்கள் என்ற அளவில் புழுப்படுக்கையில் விடுங்கள். அதன் பிறகு இரண்டாவது வாரத்திலிருந்து மண்புழுபடுக்கை உரமாக மாறுவதைப் பார்க்கலாம். புழுப்படுக்கை முழுவதுமாக உரமாக மாறிய பின் தண்ணீர் தெளிப்பதை நிறுத்துங்கள். பின்னர் 3 அல்லது 4 நாட்களில் மண்புழு உரத்தை அறுவடை செய்யுங்கள். அறுவடை செய்த மண்பழு உரத்தை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

27. உள்ளுர் மண்புழுக்களை சேகரிப்பது எப்படி?

‘மண்புழுக்கள்’ இருக்க கூடிய நிலப்பரப்பை முதலில் தேர்ந்தெடுங்கள். பின்னர் 500 கிராம் நாட்டு சக்கரை அல்லது வெல்லத்தை 20 லிட்டர் நீரில் கரையுங்கள்.
500 கிராம் புதிய சாணத்தை தனியாகக் கொஞ்சம் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். இரண்டு கரைசல்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்குங்கள். மண்புழுக்கள் இருக்கும் நிலப்பரப்பில் ஒரு மீட்டர் நீளம் ஒரு மீட்டர் அகலம் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். இந்த நிலப்பரப்பில் சாண-வெல்லக் கரைசலைத் தெளியுங்கள். பின்னர் கரைசல் தெளிந்த மண்பரப்பில் வைக்கோல் அல்லது உலர்ந்த சருகுகளைப் பரப்புங்கள்.

அதன் மீது சாணத்தை பரப்புங்கள். ஒரு பழைய சாக்கு அல்லது கோணியைப் போட்டு அந்த இடத்தை மூடுங்கள். பின்னர் 10 முதல் 15 நாட்களுக்கு அந்தப் பகுதியில் தண்ணீர் தெளியுங்கள். நிலப்பரப்பின் அருகிலும் நிலத்தின் அடிப்பகுதியிலும் இருக்கும் மண்புழுக்கள், வெல்லம்-சாணக் கரைசல் தெளித்த இடத்தில் ஏறி வரும். இந்த மண்புழுக்களை சேகரித்து மண்புழுஉரம் தயாரிக்க பயன்படுத்தலாம்.

Image Courtesy: Thanks Google

Monday, June 20, 2016

உலகச் சந்தையின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன - 13


Image Courtesy: Thanks Google


மண்புழு உரத்தை டன் ஒன்றுக்கு ரூ.4000 முதல் ரூ.5000 வரை விற்பனை செய்கிறார்கள்.
ரசாயன உரங்களை விற்பனை செய்யும் கடைகளைப் போல மண்புழு உரங்களை விற்பனை செய்யும் கடைகள் ஏதும் இல்லை.
சில தனிப்பட்ட விவசாயிகள் உள்ளுரில் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கிறார்கள்.

ஆனால் வரும் காலத்தில் மண்புழு உரத்திற்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.
காய்கள், பழங்கள், பூப்பயிர்கள் மற்றும் அழகுத்தோட்டம் வைத்திருப்போர், நாற்று உற்பத்தி செய்வோரும் மண்புழு உரத்தை விரும்பி வாங்குகிறார்கள்.
ரசாயன உரங்களைப் போல கவர்ச்சிகரமாக பேக்கிஙகு;களில் அடைத்து விற்பனை செய்தால் மண்புழு உரம் நல்ல விலைக்குப் போகும்.
நீங்கள் உற்பத்தி செய்யும் இடத்தில் விற்பனை வாய்ப்பு இருந்தால், கோணிகளில் தேவைக்கு ஏற்ப பேக் செய்யுங்கள்.

நகர்ப்புற நர்சரிகளில் விற்பனை செய்ய அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகளில் போடுங்கள்.
நீங்கள் ஏற்றுமதி செய்ய தயார் என்றால் இறக்குமதி செய்வோரும் தயாராக இருப்பார்கள்.
உலகச் சந்தையின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன.

Image Courtesy: Thanks Google

மர நிழலில் மண்புழு உர உற்பத்தி - 11

Image Courtesy; Thanks Google
  • கொஞ்சம் மர நிழல், கொஞ்சம் மண்புழு, கொஞ்சம் மக்கிய தொழு உரம் இருந்தால் போதும்.
  • சிக்கனமாக மண்புழு உரம் தயார் செய்ய முடியும்.
  • இதில்; தேவைப்படும் மூலதனம், நம்முடைய ஆர்வம் மற்றும் அக்கறை.

தேவைப்படும் பொருட்கள்:

  1. நிழலுடன் கூடிய மரத்தடி
  2. தேங்காய் உரி மட்டைகள் 500 முதல் 600
  3. மக்கிய தொழு உரம் சுமார் 500 கிலோ
  4. தேவையான அளவு தோட்டத்து மண்
  5. சாக்கு - 4 அல்லது 5
  6. மண்புழுக்கள் சுமார் 2 கிலோ
  7. தண்ணீர் 12 முதல் 15 குடம்


செயல் விளக்கம்:

மரத்தடி நிழலுடன் கூடிய ஒரு இடத்தை தெரிந்தெடுங்கள். மரத்தைச் சுற்றிலும் மூன்று அடி அகலத்திற்கு சமப்படுத்துங்கள். சமப்படுத்திய நிலப்பரப்பு வட்ட வடிவமாக இருக்கட்டும். சமப்படுத்திய  3 அடி விட்டத்திற்கும் 0.5 அடி ஆழத்திற்கும் சிறிய பள்ளம் எடுக்கவும். அந்த பள்ளத்தில்  தேங்காய் உறி மட்டைகளை முதுகுப் பக்கம் கீழே இருக்குமாறு சீராக அடுக்குங்கள். பின்னர் தேங்காய் உறி மட்டைகள்; மறையும்வரை 4 அங்குல உயரத்திற்கு தோட்டத்தின் மண்ணை பரப்புங்கள். அந்த மண் நனையுமாறு சீராக தண்ணீர் தெளியுங்கள். அதன்மீது தொழு உரத்தை அரை அடி உயரத்திற்கு பரப்பவும். மீண்டும் தண்ணீர் தெளியுங்கள். இப்படியாக தொழு உரத்தை நான்கு அடுக்கு போடுங்கள். இந்த அடுக்குகள் இரண்டு அடி உயரத்திற்கு மேல் போகாமல் பரப்புங்கள்.

ஓவ்வொரு அடுக்குக்கும் இரண்டு அல்லது மூன்று  குடம் தண்ணீர் தெளியுங்கள். அதற்கு மேல் இரண்டு அங்குல உயரத்திற்கு மாட்டு சாணம். அதன் மீது சீராக தண்ணீர் தெளியுங்கள். பின்னர் தோராயமாக இரண்டு கிலோ அல்லது 1000 மண்புழுக்களை சாணத்தின் மீது விடவும். விரைவாக சாணத்தைக் துளைத்துக் கொண்டு மண்புழுக்கள் உள்ளே சென்று விடும். பின்னர் மண்புழு படுக்கையை ஈரச் சாக்குகள் கொண்டு மூடவும்.

பராமரிப்பு:

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை பழுப்படுக்கை மீது சீராக 4 முதல் 5 குடம் தண்ணீரை தெளிக்கவும். தண்ணீர் தெளிப்பதை 50 முதல் 60 நாட்கள் வரை செய்யுங்கள். 15 முதல் 20 முறை தண்ணீர் தெளிக்க வேண்டி இருக்கும்.

அறுவடை:

வழக்கம் போல், தண்ணீர் தெளிப்பை நிறுத்தி, 3 (அ) 4 நாள் கழித்து, மேலாக அறுவடை செய்து, நிழலில் உலர்த்தி, சலித்து, கோணிகளில் சேமித்து, தேவையின் போது பயன்படுத்துங்கள்.
Image Courtesy; Thanks Google

தொட்டி முறை மண்புழு உர உற்பத்தி - 10


Image Courtesy: Thanks Google

  • மண்புழு என்றாலே, கட்டுங்கள் தொட்டியை:  போடுங்கள் கொட்டகையை: வாங்குங்கள் வங்கிக் கடனை என்கிறார்கள்.
  • எல்லோரும் பயன்படுத்தும் மண்புழு உர உற்பத்தி முறை இது.
  • இதில் கொஞ்சம் செலவு அதிகம்.
  • சிமெண்ட் தொட்டி கட்டி அதற்கு மேல் கொட்டகை போடும் இந்த முறைக்கு வங்கிகள் கடனை வாரித் தருகின்றன.


வட்டிக்கு கடன் வாங்கி செய்யும் கம்ப சூத்திரமான வேலை இல்லை இது. மண்புழு தயாரிப்பில் நல்ல அனுபவம் பெற்ற பின் இதனை வியாபார ரீதியில் செய்யலாம். எப்போதும் தக்கை மீது கண் வைத்திருக்கும் தூண்டில்காரர்களைப் போல திறமைசாலிகள் இதையும் கண்படும் தொழிலாக மாற்றி விடுகிறார்கள்.

மண்புழு உரத்தை நீங்கள் ஏற்றுமதி செய்ய தயாராக இருந்தால் பலர் இறக்குமதி செய்ய தயாராக இருக்கிறார்கள்.


தேவைப்படும் பொருட்கள்

  • 6 x 3 x 2 அடி அளவுள்ள சிமெண்ட் தொட்டி.
  • தேவையான அளவு கூழாங்கற்கள்.
  • தேவையான அளவு தோட்டத்து மண்.
  • தேவையான அளவு மணல்
  • மாட்டுச் சாணம் சுமார் 500 கிலோ
  • தேவையான அளவு வைக்கோல்
  • தேவையான அளவு இலை தழைகள்.
  • 12 முதல் 15 குடம் தண்ணீர்
  • நிழலான இடம் அல்லது கொட்டகை.


தொட்டியும் கொட்டகையும் அமைத்தல்

6 அடி நீளம் 3 அடி நீளம் மற்றும் 2 அடி அழம் உள்ள சிமெண்ட் தொட்டியை அமையுங்கள். நிழல் உள்ள இடத்தில் தொட்டியை அமையுங்கள. நிழல் இல்லை என்றால் தொட்டிக்கு மேல் கொட்டகை போடுங்கள்.

தொட்டியின் நீளத்தை தேவைக்கு ஏற்ப கூட்டலாம் அல்லது குறைக்கலாம். தொட்டியின் அகலம் மாறாது, ஆழம் மாறாது. அதிகப்படியான ஈரம் வடிய வசதி செய்யுங்கள். இதற்கு தொட்டியின் அடிப்பகுதியில் ஒரு சிறிய துவாரத்தை அமையுங்கள்.

மண்புழு உர உற்பத்தி செயல்முறை

சிமெண்ட் தொட்டியில் 3 அங்குல உயரத்திற்கு கூழாங்கற்களை பரப்புங்கள்.
அதன் மீது கூழாங்கற்கள் மறையும் அளவுக்கு மணலைப் பரப்புங்கள். பின்னர் 3 அங்குல உயரத்திற்கு தோட்டத்து மண்ணை சீராகப் பரப்பவும். அதன் மீது போதுமான அளவு தண்ணீர் தெளிக்கவும். அடுத்து 6 அங்குல உயரத்திற்கு மாட்டு சாணத்தை தொட்டிக்குள் பரப்பவும். பின்னர், வைக்கோல், பசுந்தழைகள் மற்றும் சமையலறைக் கழிவுகளை 6 அங்குல உயரத்திற்கு பரப்பவும். அதன்மீது சாணக்கரைசலை தெளிக்கவும். மீண்டும் இரண்டாம் அடுக்கு சாணம் இட்டு போதுமான அளவு தண்ணீர் தெளித்து வைக்கோல், இலைச் சருகுகள், பசுந்தழை, சமையலறைக் கழிவு, என இட்டு மீண்டும் சாணக்கரைசலை  தொட்டி நிறையும் வரை மூன்றாவது, நான்காவது, அடுக்களை அடுக்கவும். அடுக்குகளின் உயரம் 2 அடிக்கு மேல் போகக் கூடாது.

அடுக்குகள் மீது வைக்கோல் அல்லது சாக்கு போட்டு மூடவும். தொட்டியில் 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வரவும். 30 வது நாள் தொட்டியில் சுமார் இரண்டு கிலோ மண்புழுக்களை தொட்டியில் விடவும். தொடர்ந்து 60 நாட்களுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை தெளித்து வந்தால் தொட்டிக் கழிவுகள் அனைத்தும் உரமாகிவிடும்.


வழக்கம்போல் அறுவடை

கழிவுகள் முழுவதுமாக உரமாக மாறி விட்டதா என்று பாருங்கள். மாறி விட்டிருந்தால், 3 அல்லது 4 நாட்களுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்துங்கள்.
அடுத்த நாள் நாம் மேலாக இருக்கும் மண்புழு உரத்தை சேகரித்துக் கொள்ளலாம்.

மண்புழு குளியல் நீர் சேகரிப்பு

சிமெண்ட் தொட்டியின் அடிப்பகுதியில் ஒரு துவாரம் இட்டு ஒரு சிறிய குழாயைப் பொருத்துங்கள். இது மண்புழுவின் குளியல் நீர் சேகரிக்க உதவும்.
மண்புழுவின் உடலில்பட்டு வடியும் நீர்தான் மண்புழு குளியல் நீர். இது மண்புழு தொட்டியின் அடி துவாரத்த்ன் மூலம் சேகரம் ஆகும். இதனை சேகரித்து திரவ உரமாகப் பயன்படுத்தலாம்.
Image Courtesy: Thanks Google

Sunday, June 19, 2016

வீடுகளில்; மண்புழு உரம் தயாரிக்கும்; முறை - 9

Image Courtesy: Thanks Google


  • வீட்டில் மண்பழு உரம் தயாரிப்பவர்கள் அதிர்ஷ்ட்டசாலிகள்.
  • ரசாயன மருந்துகளின் விஷம் இல்லாத உணவை சாப்பிடுகிறார்கள்
  • இவர்களுக்கு டாக்டர் செலவு மிச்சம்.
  • விஷம் இல்லாத காய்கறிகளை சமைக்கிறார்கள்.
  • காய்கறிகளுக்கு ஆகும் செலவினை  மிச்சம் பிடிக்கிறார்கள்.

இரட்டை நாக்கு வேண்டும்.

உலகின் மொத்த கழிவுகளில் 50-60 சதவிதம் அங்ககக் கழிவுகள்தான்  இதில் அதிகமானவை சமையலறைக் கழிவுகள்தான்.  மிக அதிகமான மீதேன் வாயுவை வெளியேற்றுவது சமையலறைக் கழிவுகள்தான். கழிவுப் பொருட்களை இயற்கையான முறையில் மறு சுழற்சி செய்கின்றன மண்புழுக்கள். நகரவாசிகள் தொட்டிகளிலும் பெட்டிகளிலும் செடிகளை வளர்க்கலாம். அழகுச் செடிகள், காய்கறிச் செடிகள்;, மரங்கள் அனைத்தும்; வளர்க்கலாம். அதற்குத் தேவையான உரங்கள் மற்றும் எருவினை காசு கொடுத்து வாங்குகிறார்கள். வீடுகளில் மற்றும் அப்பார்ட்மெண்ட்களில் கூட மண்புழு உரம் தயார் செய்யலாம். உங்கள் சமையலறைக் கழிவுகளே இதற்கு போதுமானது. மண்புழு உரத்தின் மூலம் உற்பத்தி செய்யும் காய்கறிகளை ருசிக்க இரட்டை நாக்கு வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்

  • ஒரு மரப் பெட்டி
  • 40 - 50 மண்புழுக்கள்
  • காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகள்
  • காப்பி அல்லது தேநீர் தயாரிப்புக் கழிவுகள்
  • இதர சமையலறைக் கழிவுகள்
  • மணல்
  • நைலான் வலை
  • ஒரு பழையதுணி, 
  • நியுஸ் பேப்பர், 
  • உலர்ந்த புற்கள்


பெட்டியில் போடக்கூடாதவை எவை ?

  • உப்பு கலந்த கழிவுகள்
  • ஊறுகாய்
  • எண்ணெய்
  • வினிகர்
  • இறைச்சி
  • கொழுப்பு
  • பால் பொருட்கள்


செய்முறை விளக்கம்

ஒரு சிறிய மரப்பெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். காலி பெயிண்ட் டப்பாக்களைக்கூட உபயோகிக்கலாம். பெட்டியின் அடிப்பகுதியில் ஒரு நைலான் வலையைப் பொருத்துங்கள். பெட்டியில் இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு மணலை பரப்புங்கள். அதன் மீது சமையல் அறைக் கழிவுகளை பரப்புங்கள். காய்கறி மற்றும் பழங்களின் தோல்கள் அனைத்தும் இதில் அடங்கும்;. அதன் மேல் இலை தழைகளைப் பரப்புங்கள். உலர்ந்த இலைச் சருகுகளையும் பரப்புங்கள். சிறுசிறு துண்டுகளாக கிழிக்கப்பட்ட நியூஸ் பேப்பர்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் அளவாக தண்ணீர் தெளியுங்கள். தண்ணீரை அதிகம் ஊற்றக் கூடாது. இப்படி தினமும் சமையல் அறைக் கழிவுகளை சேகரித்து அந்த மரப் பெட்டியில் போட்டு தண்ணீர் தெளியுங்கள். மரப்பெட்டி நிரம்பிய பின் அதனுள் 40 முதல் 50 மண்புழுக்களை புழுப்படுக்கையில் விடுங்கள். தினமும் தண்ணீர் தெளியுங்கள்.

நான்காவது வாரம் பெட்டிக் கழிவுகள் மண்புழு உரமாக மாறுவதைப் பார்க்கலாம்.

கழிவுகள் ழுழுவதும் உரமாக மாறிய பின்னால் உரத்தினை மட்டும் பெட்டியிலிருந்து பிரித்து எடுக்கலாம். பெட்டியின் அடிப் பகுதியில் இருக்கும் மண்புழுக்கள் இரண்டாம் தயாரிப்புக்கு உதவும.; பின்னர் செடிகளுக்குப் போடலாம்.

கவனிக்க வேண்டியவை

பெட்டியை, எப்போதும் மூடி வையுங்கள். கழிவுப்பொருட்களை எப்போதும் ஈரமாக வையுங்கள். அதிக குளிரும் ஆகாது, அதிக வெப்பமும் ஆகாது.
                                                                      
Image Courtesy: Thanks Google

Friday, June 17, 2016

மண்புழு உர உற்பத்தியில் கவனிக்க வேண்டியவை - 8

Image Courtesy: Thanks Google
சாணம் சேகரிப்பது எப்படி ?

10 முதல் 15 நாள் சாணத்தை பயன்படுத்தலாம். உலர்ந்து போன சாணத்தை உபயோகிக்கக் கூடாது. தேவையான சாணத்தை நிழலான இடத்தில் குவியலாக சேமிக்கலாம். அதில் கல்,மண் தூசு துப்பட்டை சேரக் கூடாது. இரண்டு நாளுக்கு ஓரு முறை சாணத்தை மண்வெட்டியால்  கிளறி விடவும். இதிலிருந்து மீதேன் வாயு வெளியேறி சூடு குறையும். இப்படி ஆறிய சாணத்தை பயன்படுத்துங்கள். சாணத்திற்கு பதிலாக மக்கிய பயிர்க்கழிவு, மக்கிய கோழி உரம், பட்டுப்பூச்சி வளர்ப்புமனைக் கழிவு, சமையல் கழிவு ஆகியவற்றைக் கூட பயன்படுத்தலாம்.


புழுப்படுக்கையில்  தண்ணீர் தெளிக்கும் முறை

ஈரம், குளிர்ச்சி, இருட்டு மூன்றும் மண்புழுவிற்கு  அவசியமானவை. மண்புழுக்கள் ஈரம் இல்லாத இடத்தை விட்டு வெளியேறிவிடும். மண்புழுக்கள் படுக்கையில் தொடர்ச்சியாக ஈரம் இருக்க வேண்டும். ஈரம் அதிகமும் அதற்கு ஆகாது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்கலாம்.

தேங்காய் உறிமட்டை மற்றும் மணல் போடுவது ஏன் ?;

மண்புழு படுக்கையை விட்டு புழுக்கள் தப்பிக்காமல் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. அடி மண்ணுக்கும் புழுப்படுக்கைக்கும் போடப்பட்ட வெலிதான் தென்னை உறிமட்டைகளும் மணலும். மேலும் கூடுதலாக ஊற்றும் தண்ணீரை தேங்காய் உறிமட்டைகளும், மணலும் வடித்;து விடும்.

மண்புழு படுக்கையை பராமரிக்கும் வழிமுறை

புழுப்படுக்கையை வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கவும.; தோட்டத்தில் கிடைக்கும் கழி கம்புகள், மற்றும் ஒலைகளைப் பயன்படுத்தி கொட்டகை போடலாம்.  கோழி, காகம் போன்றவற்றிடமிருந்து புழுக்களைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு தரை மட்டத்திலிருந்து 4 அல்லது 5 அடி உயரத்திற்கு கம்பி வலையை கொட்டகையைச் சுற்றி பொருத்தலாம். புழுப்படுக்கையைச் சுற்றிலும் மஞ்சள் அல்லது மிளகாய்த்துள் கோலமிடுவது போல போடலாம். இது எறும்பு மற்றும் கரையான்களிடமிருந்து மண்புழுக்களை பாதுகாக்கும். அதன் பின்னர் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை 5 முதல் 6 குடம் தண்ணீர் தெளிக்க வேண்டும். இதனால் தொடர்ந்து புழுப் படுக்கையை ஈரமாக வைத்துக் கொள்ளலாம். 40 முதல் 60 நாட்களில் புழுப்படுக்கை முழுமையாக மண்புழு உரமாக மாறிவிடும்.

அறுவடைக்கு முன் தண்ணீர் தெளிப்பை நிறுத்துங்கள்

புழுப்படுக்கை முழுவதும் உரமாக மாறிவிட்டதா ? பாருங்கள். பினனர்; 2 முதல் 3 நாட்களுக்கு தண்ணீர் தெளிப்பதை நிறுத்துங்கள். இப்போது புழுப்படுக்கையில் புழுக்கள் அடிப்பகுதிக்கு சென்றுவிடும். பின்னர் மேலாக இருக்கும் மண்புழு உரத்தை அறுவடை செய்யுங்கள். அறுவடை செய்ததை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நிழலில்; உலர்த்துங்கள்.  பின்னர் சல்லடையில் சலித்து கோணிகளில் சேமியுங்கள். சேமித்த உரத்தை தேவைக்கு ஏற்ப பயிர்களுக்குப் பயன்படுத்துங்கள்.


மண்புழு உரத்தை தொடர்ந்து உற்பத்தி செய்யும் முறை

செல்போன் ரீசார்ஜ் செய்வது போல புழுப் படுக்கையில் பசும் சாணத்தால் ரீசார்ஜ் செய்தால் போதும். மீண்டும் மீண்டும் மண்பழு உரம் அறுவடை செய்யலாம்.

அந்த புழுப்படுக்கையில் மீண்டும் ஒரு 500 கிலோ சாணத்தை முன் போல 5 அடுக்குகளாக ரீசார்ஜ் செய்யவும.; அறுவடை செய்யும் போது புழுக்கள் அத்தனையும் அடிப் பகுதியில் தங்கி இருக்கும். இப்போது புதிய புழுக்களைப் போட வேண்டாம். முன் சொன்னது போல 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றி பராமரியுங்கள். இப்போது 60 நாட்கள் காத்திருக்க வேண்டாம். 30 நாட்களிலேயே கூட எடுக்கலாம். காரணம் இப்போது புழுக்கள் அதிகம் இருக்கும்.

கூடுதலாக இருக்கும் மண்புழுக்களை எடுத்து தனியாக இன்னொரு பழுப்படுக்கையைக் கூட தயார் செய்யலாம். ரசாயன உரங்கள் மாதிரி ஒவ்வொரு மூட்டைக்கும் காசுகொட்டி அழ வேண்டாம்.
Image Courtesy: Thanks Google

மண்புழு உரம் தயாரிப்பு (கேள்வி பதில்) - 7


Image Courtesy: Thanks Google
கேள்வி: 1. மண்பழு உரம் தயாரிக்கவிரும்பும் விவசாயிகள் முதலில் என்ன செய்ய வேண்டும் ? 
  • மண்புழு உரம் தயாரிப்பில் பல முறைகள் உள்ளன. 
  • இதில் எந்த முறையில் செய்தால் செலவு குறையும் என்று பாருங்கள்.
  • கூடுமானவரை நம் கைவசம் உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள் 
  • பக்கத்து கிராமங்களில் யாராவது மண்புழு உரம் தயார் செய்கிறார்களா? என்று பாருங்கள்.
  • அவர்களுடைய அனுபவங்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.
  • குவியல் முறை, தொட்டி முறை, பெட்டி முறை குழி முறை, மரத்தடியில் தயாரிக்கும் முறை, திறந்தவெளியில் தயாரிக்கும் முறை என்று அனைத்து முறைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.


2. மண்புழு தயாரிப்பில் என்னென்ன மண்புழு வகைகளை பயன்படுத்தலாம் ? 

உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை 6000 வகை. இவை 20 குடும்பங்களைச் சேர்ந்தவை. இந்தியாவில் இருப்பவை மட்டும் 500 வகை. தமிழ்நாட்டில் அதிகம்  உர உற்பத்திக்காக வளர்க்கப்படுபவை சுமார்  மூன்று வகை. இந்திய மண்புழு, ஐரோப்பிய மண்புழு, மற்றும் ஆஃப்ரிக்க மண்புழு

இந்திய மண்புழு 
(PERIONYX EXCAVATUS)

இது நம்ம ஊர் மண்புழு. இமயமலைப்பகுதி இதன் தாயகம். வட அமெரிக்காவில்இது ரொம்ப பிரபலம்.  வியாபார ரீதியாக வகை இது . வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலம் பகுதிக்கு ஏற்றது. புழுக்கள் மெல்லியதாக இருக்கும். செம்புழுக்களைவிட வேகமாக ஊர்ந்து செல்லும். ஈரம் குறைவாகவும் வெப்பம் அதிகமாகவும் இருக்கும் இடங்களில் கூடுதலாக உரத்தை உற்பத்தி செய்யும். சமையலறைக் கழிவு, பண்ணைக்கழிவு, கழிவு நீர் கால்வாய் ஆகியவற்றில் வசிக்கும். இதன் அறிவியல் பெயர் பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ்

2. ஐரொப்பிய செம்புழு 
(EISENIA  FETIDA)

அழுகிக் கொண்டிருக்கும் தாவரக் கழிவு, கம்போஸ்ட் மற்றும் எருக்களில் வசிக்கும்.பரவலாக உர உற்பத்திக்கு ஏற்றவை. ஐரோப்பா இதன் தாய் மண். பல நாடுகளில் இவை அறிமுகம் ஆகி உள்ளன. புழுக்களை அழுத்திப் பிடித்தால் அவற்றின் உடலில் ஒருவித மோசமான வாடை வீசும் திரவம் சுரக்கும். மண்கண்டத்தின் மேல் பகுதிலேயே வசிக்கும். அதற்கு பிடிக்காது பகல் வெளிச்சம். பிடித்தமானது இருட்டு. தினசரி சாப்பிடுவது, தன் உடல் எடையைப் போல் இரண்டு மடங்கு. எண்ணிக்கையில பெருக்கம் அடைவது, 90 நாட்களில் இரு மடங்கு. ஐசினியா ஃபெட்டிடா, இதன் அறிவியல் பெயர்

3. ஆப்ரிக்க மண்புழு 
(EUDRILUS  EUGENIAE)

மேல் பகுதி மண்கண்டத்தில் வசிக்கும் மண்புழுக்களில் ஒன்று. மேல் மட்ட மண்புழுக்கள்தான் அதிக மண்புழு உரத்தை உற்பத்தி செய்யும்.மிக வேகமாக இனப்பெருக்கம் ஆகும்.8 முதல் 10 வாரங்களில்  முழு வளர்ச்சி அடையும்.
வளர்ந்த புழு ஒன்று 2.5 கிராம் எடை இருக்கும் உடலில் ஊதா மற்றும் சாம்பல் நிறம் பூசியது போல் இருக்கும். புழுவின் பின்புற உடல் சீராக சரிந்து சென்று கூர்மையாக ழுடிவடையும். இதன் தாய்வீடு மேற்கு ஆப்ரிக்காவின் வெப்பமான பகுதி. வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாக மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் வகை. யூட்ரில்லஸ் யூஜினியா என்பது இதன் அறிவியல் பெயர்


கேள்வி 3. மண்புழு உரம் தயாரிப்பில் சிக்கனமான செலவு குறைந்த முறை எது ?

குவியல் முறைதான் சிக்கனமானது. எவ்வுளவு சிறிய இடத்திலும் இதனை தயார் செய்ய முடியும். குவியல் முறையில் சிமெண்ட் தொட்டி கட்ட வேண்டாம். காசு செலவில்லா சிக்கன முறை இது. சிறிய வீட்டுத் தோட்டம் கூட இதற்குப் போதும்.


கேள்வி 4. குவியல் முறையில் மண்புழு உரம் தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை ?

1. பழுப் படுக்கை அமைப்பதற்கு தேவைப்படும் நிழலான ஒரு இடம்
2. சுமார் 1000 அல்லது 2 கிலோ மண்புழுக்கள்
3. சுமார் 500 கிலோ ஆறிய பசும் சாணம்
4. 10 முதல் 12 லிட்டர் குளோரின் கலக்கப்படாத தண்ணீர்
5. சுமார் 500 தேங்காய் உறிமட்டைகள்
6. 100 கிராம் மிளகாய்த்  தூள் அல்லது மஞ்சள் தூள்
7. குளோரின் கரைக்காத தண்ணீர் 10 முதல் 15 குடம்

கேள்வி 5. குவியல் முறையில் மண்புழு உரம் தயார் செய்யும் முறையை விளக்கமாக சொல்லுங்கள்.

நிழல் உள்ள இடத்தை தேர்ந்தெடுங்கள். அது கொட்டகை அல்லது மரத்தடியாக இருக்கலாம். 15 அடி நீளம் மற்றும் 3.5 அடி அகலத்திற்கு நிலப்பரப்பை அளந்து முளை அடித்துக் கொள்ளுங்கள். இதுதான் புழுப்படுக்கை. இதன் அகலம் 3.5 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. நீளம் வேறு படலாம். புழுப் படுக்கையில் 0.5 அடி அழத்திற்கு மண்வெட்டியால் வெட்டி மண்ணை எடுத்துவிடவும். அப்படி எடுத்த பள்ளத்தில் அதில் சீராக மணலை நிரப்பவும். பரப்பிய மணலின் மீது தேங்காய்  உறி மட்டைகளை  முதுகுப்புறம் மணலில் படுமாறு அடுக்கவும். ஏற்கனவே சேகரித்து வைத்திருக்கும் பசும் சாணம் 100 கிலோவை அதன் மீது சீராகப் பரப்பவும். அதன்மீது 4 முதல் 5 குடம் தண்ணீரை சீராக தெளிக்கவும். மீண்டும் 100 கிலோ சாணத்தை புழுப் படுக்கையின் மீது சீராகப் பரப்பவும். அதன்மீது 2 முதல் 3 குடம் தண்ணீரை சீராகத்  தெளிக்கவும். இப்படி 5 அடுக்கு சாணத்தை போட்டு 5 முறை சீராகத் தண்ணீர் தெளிக்கவும். இப்போது புழுப்படுக்கையின் உயரம் 2 அடிக்கு மெல் இருக்கக் கூடாது.

பின்னர் கைவசம் உள்ள மண்புழுக்களை புழுப்படுக்கையில் பரவலாக விட வேண்டும். விடப்பட்ட மண்புழுக்கள் சாணப்படுக்கையை துளைத்துக் கொண்டு உட்புறம் சென்று விடும். பின்னர் புழுப் படுக்கையைச் சுற்றிலும் ஒரு அடி இடைவெளிவிட்டு மஞ்சள் தூள் அல்லது மிளகாய் தூளை கோலம் பேடுவது போல போடவும். இதனால் எறும்பு மற்றும் கறையான்கள் புழுப்படுக்கையில் ஏறாமல் தடுக்கலாம்.

கேள்வி 6. மண்புழு உரத்தை எப்போது அறுவடை செய்யலாம் ?

60 நாள் முதல் அறுவடை செய்யலாம். அறுவடைக்கு மூன்று நாட்களுக்கு முன் குவியலில் தண்ணீர் தெளிப்பதை நிறுத்த வேண்டும். புழுக்கள் குவியலின் கீழ்பகுதிக்கு சென்றுவிடும். மேலாக சேர்ந்திருக்கும் மண்புழு உரத்தை அறுவடை செய்யலாம். இதே புழுபடுக்கையை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் அறுவடை செய்யலாம்.

கேள்வி 7. மண்புழு உரத்தை பயிர்களுக்கு எவ்வளவு இடலாம் ?

ஏக்கருக்கு 2000 கிலோ. பழ மரங்களுக்கு – 10 முதல் 15 கிலோ. இளம் கன்றுகளுக்கு – 1 முதல் 2 கிலோ. தொடர்ந்து இடுவது மிகவும் நல்லது.தொட்டிச்செடிகளுக்கு – 100 கிராம்; முதல் 250 கிராம் வரை போடலாம்

கேள்வி 8. இதனை விற்பனை செய்ய முடியுமா ?

செய்ய வேண்டும். செய்ய முடியும். முடியாதது எதுவும் இல்லை. பாக்கட் செய்து நகரங்களில் விற்கலாம்.ஏற்றுமதிக்குக்கூட வாய்ப்பு உள்ளது.
VERMI COMPOST
Image Courtesy: Thanks Google


Wednesday, June 15, 2016

உரம் தயாரிப்புக்கு ஏற்ற மண்புழு வகைகள் - 6

Images Courtesy: Thanks Google
இந்திய மண்புழு
ஐரொப்பிய செம்புழு

ஆப்ரிக்க மண்புழு
உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை 6000 வகை
இவை 20 குடும்பங்களைச் சேர்ந்தவை.
இந்தியாவில் இருப்பவை மட்டும் 500 வகை.
தமிழ்நாட்டில் அதிகம்  வளர்க்கப்படுபவை சுமார்  மூன்று வகை.
இந்திய மண்புழு, ஐரோப்பிய மண்புழு, மற்றும் ஆஃப்ரிக்க மண்புழு

இந்திய மண்புழு

பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ்
(PERIONIX EXCAVATUS)


  • இது நம்ம ஊர் மண்புழு
  • இமயமலைப்பகுதி இதன் தாயகம்.
  • வட அமெரிக்காவில் இது   ரொம்ப பிரபலம் 
  • வியாபார ரீதியான  வகை இது 
  • வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலம் பகுதிக்கு ஏற்றது
  • புழுக்கள் மெல்லியதாக இருக்கும்
  • ஐரொப்பிய செம்புழுக்களைவிட வேகமாக ஊர்ந்து செல்லும் 
  • ஈரம் குறைவாகவும் வெப்பம் அதிகமாகவும் இருக்கும் இடங்களில் கூடுதலாக உரத்தை உற்பத்தி செய்யும்
  • சமையலறைக் கழிவு, பண்ணைக்கழிவு, கழிவு நீர் கால்வாய் ஆகியவற்றில் வசிக்கும்
  • இதன் அறிவியல் பெயர் பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ்



ஐரொப்பிய செம்புழு
(EISENIA  FETIDA)


  • அழுகிக் கொண்டிருக்கும் தாவரக் கழிவு, கம்போஸ்ட் மற்றும் எருக்களில் வசிக்கும்.
  • பரவலாக உர உற்பத்திக்கு ஏற்றவை.
  • ஐரோப்பா இதன் தாய் மண் 
  • பல நாடுகளில் இவை அறிமுகம் ஆகி உள்ளன. 5. புழுக்களை அழுத்திப் பிடித்தால் அவற்றின் உடலில் ஒருவித மோசமான வாடை வீசும் திரவம் சுரக்கும்.
  • மண்கண்டத்தின் மேல் பகுதிலேயே வசிக்கும்.
  • அதற்கு பிடிக்காது பகல் வெளிச்சம் 
  • பிடித்தமானது இருட்டு 
  • தினசரி சாப்பிடுவது, தன் உடல் எடையைப் போல் இரண்டு மடங்கு. 
  • எண்ணிக்கையில பெருக்கம் அடைவது, 90 நாட்களில் இரு மடங்கு
  • ஐசினியா ஃபெட்டிடா, இதன் அறிவியல் பெயர் 


ஆப்ரிக்க மண்புழு
(EUDRILUS  EUGENIAE)


  • மேல் பகுதி மண்கண்டத்தில் வசிக்கும் மண்புழுக்களில் ஒன்று. 
  • மேல் மட்ட மண்புழுக்கள்தான் அதிக மண்புழு உரத்தை உற்பத்தி செய்யும்.
  • மிக வேகமாக இனப்பெருக்கம் ஆகும்.
  • 8 முதல் 10 வாரங்களில்  முழு வளர்ச்சி அடையும்.
  • வளர்ந்த புழு ஒன்று 2.5 கிராம் எடை இருக்கும் 
  • உடலில் ஊதா மற்றும் சாம்பல் நிறம் பூசியது போல் இருக்கும். 
  • புழுவின் பின்புற உடல் சீராக சரிந்து சென்று கூர்மையாக ழுடிவடையும்.
  • இதன் தாய்வீடு மேற்கு ஆப்ரிக்காவின் வெப்பமான பகுதி. 
  • வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாக மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் வகை 
  • யூட்ரில்லஸ் யூஜினியா என்பது இதன் அறிவியல் பெயர்


Tuesday, June 14, 2016

மண்புழு உரத்தின் ஊட்டச் சத்துக்கள் ஒரு ஒப்பீடு - 5

Image Courtesy: Thanks Google

வளர்ச்சி ஊக்கிகள், கிரியா ஊக்கிகள், வைட்டமின்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது மண்புழு உரம்.

இதர இயற்கை உரங்களைவிட  கூடுதலான சத்துக்களை உள்ளடக்கியது மண்புழு உரம். இயற்கை உரங்களில் உள்ள சத்துக்கள் (சதவிகிதத்தில் (%) கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வ.எண் இயற்கை உரம்  தழைசத்து மணிசத்து சாம்பல்சத்து
1 மாட்டுச் சாணம்               0.15                0.1                 0.05
2 மாட்டு சிறுநீர்                       0.2                0.01                 0.20
3 ஆட்டுச் சாணம்               0.65                0.50                 0.25
4 கோழி எரு                               0.8                0.06                 0.3
5 ஆட்டு சிறுநீர்                       1.7                0.02                 0.214
6 மனிதக் கழிவு                       1.60                1.2                 0.55
7 பன்றி எரு                               0.6                0.5                 0.2
8 மண்புழு உரம்                       2.5                1.35                 1.70


11. மண்புழு உரத்தில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள்

மண்புழு உரத்தில் நுண்ணூட்டச் சத்துக்கள் கீழ்கண்ட அளவில் உள்ளன.
வ.எண் நுண்ணூட்டச் சத்துக்கள் அளவு

1 துத்தநாகம்                                    24.6 பி.பி.எம்.
2 இரும்பு                                            447.3 பி.பி.எம்
3 மாங்கனீசு                                    509.7 பி.பி.எம்.
4 தாமிரம்                                      61.5 பி.பி.எம்

Image Courtesy: Thanks Google

Monday, June 13, 2016

இறைக்காத போர்வெல்லை இறைக்க வைப்பது எப்படி ? சுரக்காத கிணற்றை சுரக்க வைப்பது எப்படி ?

Image Courtesy: Thanks Google
(பண்ணைகுட்டை, வற்றிப்போன போர்வெல், தண்ணீர் கிடைக்காத போர்வெல்கள், வறண்டுபோன கிணறுகள், மற்றும் பாழடைந்த கிணறுகள் மூலம் மழைநீர் அறுவடை)

கேள்வி: 01. வயலில் பண்ணைகுட்டை அமைப்பதனால் என்ன பயன் ?
ஓன்று மழைநீரை சேமிக்க முடியும், இரண்டாவது நிலத்தடி நீரை மேம்படுத்தலாம், தேங்கி நிற்கும் தண்ணீரை பழமரக்கன்றுகளுக்கு எடுத்து ஊற்றலாம். நல்ல தண்ணீரில் வளரும் மீன்வகைகளை வளர்க்கலாம்.

ஆனால் சில பேர் பண்ணைகுட்டைபோடுவதால் ஒரு பகுதி நிலம் வீணாய் போவதாக கருதுகிறார்கள். எவ்வளவு தண்ணீரை அதன் மூலம் சேமிக்க முடியும் என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  

நம் வயலில் சிறியதாக 5 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் 1 மீட்டர் அகலத்தில் ஒரு பண்ணை குட்டை அமைக்கலாம். இந்த பண்ணைகுட்டையின் அளவு 10 கனமீட்டர். ஒரு கனமீட்டர் குழியில் அல்லது பள்ளத்தில் 1000 லிட்டர் நீர்சேகரம் ஆகும். அப்படி என்றால் 10 கனமீட்டர் கொள்ளளவு கொண்;ட ஒரு பண்ணைகுட்டை ஒரு முறை நிரம்பினால் 10000 லிட்டர் தண்ணீர் சேகரம் ஆகும். 10000 லிட்டர் நீரை நிலத்தடியில் நீராக சேர்க்கும். ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 30000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். 

இந்த கணக்கு தெரிந்தவர்கள் யாரும் பண்ணைகுட்டையை வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். 

02. ஆரம்பத்தில் தண்ணீர்தந்த போர்வெல்கள் போகப்போக குறைந்து ஒரு சில ஆண்டுகளில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. இதுபோல பொய்த்துப்போன போர்வெல்களை சரிசெய்யமுடியுமா?

லட்சக்கக்கான ரூபாய் செலவு செய்து பேர்போடறோம். இறைத்துக்கொண்டிருந்த போர் இறைக்காமல் போனால் அதை அப்படியே கைக்கழுவிவிடுவோம். அப்படி இல்லாமல்  வரண்டுபோன அந்த போர்வெல்லை வரத்து உள்ளதாக மாற்றிவிட முடியும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்றுதான்.  கிணற்றைச்சுற்றிலும் ஐந்தடிக்கு ஐந்தடி அல்லது பத்தடிக்கு பத்தடி மழைநீர் உறிஞ்சு குழியை அமைக்கலாம். ஐந்தடி நீள அகல ஆழமுள்ள குழி எடுக்க வேண்டும். 5 அடி ஆழமுள்ள அந்த குழியின் அடியில் 2 அடிக்கு பெரிய செங்கல் ஜல்லிகளை நிரப்ப வேண்டும். அதன்மீது ஒண்ணரை ஜல்லியை அரையடிக்கு நிரப்ப வேண்டும். அதன்மீது முக்கால் ஜல்லியையும் அரையடிக்கு நிரப்ப வேண்டும். இந்த மூன்று அடுக்குகளை போட்டபின்னால் ஒரு அடி உயரத்திற்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும். அதன் பிறகு பெய்யும் மழை நமது நிலத்தில் எங்கு பெய்தாலும் நமது உறிஞ்சு குழியில் இறங்குமாறு செய்ய வேண்டும்.

நல்லமழை கிடைத்தால் ஒரே ஒரு பருவமழையில்கூட நமது போர்வெல் உயிர் பிழைத்துவிடும். இந்த நீர் உறிஞ்சுகுழி எவ்வளவு பெரியதாக உள்ளதோ அந்த அளவுக்கு சீக்கிரமாக, நின்றுபோன போர்வெல்லை நீர் இறைக்கும் போர்வெல்லாக மாற்றிவிடமுடியும்.

கேள்வி:03. இதுவரை போர்வெல்லில் மழைநீரை சேகரிக்கும் முறையை சொன்னீர்கள். அதுபோல வரண்டுபோன கிணறுகளில் நீர்மட்டத்தை உயர்த்த வழி உள்ளதா ? 
பெய்யும் மழைநீர் மண்கண்டத்தின் ஊடாக இறங்கி ஊற்றோட்டமாக கிணற்றை அடைய அதிக நாட்கள் பிடிக்கும். ஆனால் கிணற்று நீர் உறிஞ்சுக்குழிகள் அமைத்தால் ஓரே நாளில்கூட கிணற்றின் நீhமட்டம் உயர்ந்துவிடும்.

இதனைச் செய்வதும் சுலபம். இதற்கு அதிக செலவும் ஆகாது. இதற்கு தேவைப்படும் பொருட்களும் அதிகம் இல்லை. 

கிணற்றில் இருந்து 4 அல்லது 5 அடி தள்ளி ஒரு குழி எடுக்க வேண்டும். அந்தக்குழி 5 அடி நீள அகலமும் 3 அடி ஆழமும்; இருக்க வேண்டும். அந்தக் குழியின் அடிப்பகுதியில் ஒரு 2.5 இன்ச் பிவிசி குழாயை பொருத்த வேண்டும். அதன் ஒரு நுனியை குழியிலும் மறு நுனியை கிணற்றிலும் இருக்குமாறும் பொருத்த வேண்டும். குழியிலிருந்து கிணற்றில் வடியுமாறு குழாயை மேலிருந்து கீழாக சரிவாகப் பொருத்த வேண்டும். குழியில் இருக்கும் நுனியில் சல்லடை போன்ற கம்பி வலையை பொருத்த வேண்டும். இதனால் நீருடன் மணல் கலந்து கிணற்றுக்குள் செல்வதைத் தடுக்கும்.

குழியின் அடிப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு உடைந்த செங்கல் ஜல்லிகளை நிரப்ப வேண்டும்.

அதன் மீது ஒண்ணரை ஜல்லிகளையும் முக்கால் ஜல்லிகளையும் ஒன்றின்மேல் ஒன்றாக நிரப்ப வேண்டும்.

குழியில் அரையடி பள்ளம் இருக்குமாறு ¾ ஜல்லி அடுக்கின்மீது ஆற்று மணலை நிரப்ப வேண்டும். இப்போது கிணற்று நீர் உறிஞ்சுக்குழி தயார்.
இதைச்செய்து முடித்த பின்னால் மறக்காமல் இன்னொரு காரியத்தை செய்ய வேண்டும்.

உங்கள் நிலத்தில் பெய்யும் மழை அனைத்தும் இந்த நீர் உறிஞ்சுக் குழியில் வருமாறு வாட்டம் கொடுக்க வேண்டும். இப்போது குறைவான அளவு மழை பெய்தாலும் கிணற்று நீர் உறிஞ்சுக் குழியில் இறங்கி தானாக கிணற்றில் வடியும். நல்ல மழை பெய்தால் ஒரேமழையில்கூட அரைவாசி கிணறு நிரம்பிவிடும். இது உங்கள் நிலத்தடி நீர்மட்டத்தையும் உயரச்செய்யும்.

கேள்வி: 04. சில வயல்களில் சில கிணறுகள் பாழடைந்துபோய் இருக்கின்றன. அவற்றை என்ன செய்யலாம் ?
நமது வயல்களில் பாழடைந்த கிணறுகள் இருந்தால் அதைப்பற்றி கவலைப்படவேண்டாம். அந்த கிணறுகளைக்கூட மழைநீரை அறுவடை செய்ய பயன்படுத்தலாம். 

பெய்யும் மழை நீர் அந்த கிணறுகளில் சேகரம் ஆகும்படி வாட்டம் செய்யலாம். அதிலும் கிணற்று நீர் உறிஞ்சு குழிகளை அமைத்தால் அதில் சேகரம் ஆகும் தண்ணீர் நிலத்தடி நீராக மாறும். அந்த வயலில் உள்ள இறைத்துக்கொண்டிருக்கும் போர்வெல் அல்லது கிணற்றுக்கு உதவியாக அது இருக்கும்.

05. நமது வயலில் போர்போடும்போது தண்ணீர் கிடைக்காமல் போய்விடுகிறது. அல்லது சொற்பமாக தண்ணீர் மட்டுமே வருகிறது. வேண்டாம் என அந்த போர்வெல்களை ஒதுக்கிவிடுகிறோம். அப்படி ஒதுக்கப்பட்ட போர்வெல்களை என்ன செய்யலாம் ?

அந்தமாதிரி விடப்பட்ட போரின் துளைகளை மண்போட்டு மூடி அடைத்துவிடாதீர்கள். வயலில் வாட்டம் செய்துவிட்டால் அந்த துளைகளின் வழியாகவும் மழைநீர் இறங்கி நிலத்தடி நீரை சேமிக்கும்.

விவசாய பெருமக்களே, இதுவரை நாம் மழைநீரை எப்படி சேமிக்கலாம் என்று பார்த்தோம்.

இது பருவமழைக்காலம். தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டது. இந்த ஆண்டு சராசரி மழையைவிட அதிக மழை கிடைக்கும் என்கிறார்கள் மழை விஞ்ஞானிகள்.

பெய்யும் மழையை அறுவடைசெய்து நிலத்தடி நீரை மேம்படுத்தி நீரை சிக்கனமாக பயன்படுத்தும் பயிர்களை  சாகுபடி செய்து சொட்டுநீர்ப்பாசனம் அமைத்து உற்பத்தியையும் வருமானத்தையும் லாபத்தையும் பெருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

இது பற்றி மேலும் விளக்கம் வேண்டுவோர் எங்களை கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம். விளக்கமும் ஆலோசனையும் இலவசமாகப் பெறலாம். இது தொடர்பான வேலைகளை நியாயமான கட்டணம் செலுத்தியும் செய்துகொள்ளலாம். 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: டி.ஞானசூரியபகவான், இயக்குநர், பூமி அறக்கட்டளை, 3ஃ265, மல்லகுண்டா ரோடு, தெக்குப்பட்டு ரூ அஞ்சல், வாணியம்பாடி தாலுக்கா, வேலூர் மாவட்டம். தொலைபேசி எண்:08526195370. 
மழை வருபோதே பிடித்துக்கொள்
Image Courtesy: Thanks Google



   

மண்புழுவினால் முதல் லட்சாதிபதி ஆன பெண் - 4

மேரி அப்பெல்ஹோப்

வீட்டிலேயே, 1972 ல் முதன் முதலாக மண்புழு உரம் தயாரித்த புண்ணியவதி மேரி அப்பொலெப். மேரி அப்பொலெப் மிச்சிகன் நாட்டைச் சேர்ந்த ஒரு பயாலஜி டீச்சர். மீன் பிடிப்பதற்காக புழு விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் மேரி தூண்டில் போட்டுசிவப்பு மண் புழுக்களை வாங்கினார். அதன் உற்பத்தி செய்த “வெர்மி கம்ப்போஸ்ட்” ஐ காசாக்கினார் மேரி.

1979-ல் மேரி இது பற்றிய ஒரு புத்தகம்  எழுதினார். புத்தகத்தின் பெயர் “குப்பையைத் தின்னும் மண்புழுக்கள்.” மக்கள்  போட்டி போட்டு வாங்கினர் குப்பையைத் தின்னும் மண்புழுக்களை. புத்தகம் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. மண்புழுவினால் முதல் லட்சாதிபதி ஆனவர் பயாலஜி டீச்சர் மேரி அப்பொலெப்.

                            இந்தியாவின் முதல் மண்புழு ஆராய்ச்சி நிலையம்

1970 களில் நெதர்லேண்ட்ஸ், இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் அதிக அளவில் “மண்புழு” உரம் உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். இதே காலகட்டத்தில் ‘தி பவால்கர் எர்த்வோர்ம் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் ( வுhந டீயஎயடமயச நுயசவாறழசஅ சுநளநயசஉh ஐளெவவைரவந) இந்தியாவில் மண்புழு ஆய்வுகளைத் தொடங்கியது.

இத்தாலி, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் மண்புழு உரம் பெருமளவில் புழக்கத்தில் உள்ளது.
மண்ணை பொன்னாக மாறும் மாயாஜாலம்
ரசாயன உரத்தின் அபாயம் நீங்கும். உணவுப் பொருட்கள் நச்சுத்தன்மையிலிரந்து விடுபடும். விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு குறையும். விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு கிடைக்கும். உற்பத்தி பொருட்களின் தரத்தை உயர்த்தும்விளை பொருட்களின் சுவையை அதிகரிக்கும். மண்ணில் அங்ககச்சத்தைக் கூட்டும்.

நுண்ணுயிர்கள் பெருக உதவும். மண்ணின் நீர்பிடிக்கும் தன்மையைக் கூட்டும்.  மண்ணின் கார அமில நிலையைக் சீராக்கும். பூச்சி  நோய் தாக்குதல் குறையும். களைகள் குறையும். தழைச்சத்தை 5 மடங்கு அதிகமாக்கிக் கொடுக்கும். சாம்பல் சத்தை 7 மடங்களாகப் பெருக்கும்.  சுண்ணாம்புச் சத்தைப் போல 1.5 மடங்கு அதிகமாக்கும்.

மண்ணில் காற்றோட்டம், பொல பொலப்புத் தன்மை, வடிகால் வசதி, ஈரத்தை ஈர்க்கும் தன்மை, ஆகியவற்றை சீர் செய்கிறது.

இதுதான்  மண்ணை பொன்னாக மாற்றும் மாயாஜாலம்.
மேரி அப்பெல்ஹோப் எழுதிய புத்தகம் 

Image Courtesy: Thanks Google

பயமுறுத்தும் பருவக்கால மாற்றம் - 3

Image Courtesy: Thanks Google

பருவக்கால மாற்றத்தினால் பருவ மழைக் காலம் தவறிப்போய்விடுகிறது.

சுனாமி, வரட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள், அடிக்கடி நம்மைத் தாக்கத் தொடங்கிவிட்டன.

எப்போதோ வந்து வருத்தும் வறட்சி அடிக்கொரு தடவை வந்து மிரட்டும் வேண்டாத விருந்தாளி ஆகிவிட்டது. 

மாதம் மூன்று முறை பெய்த மழை, முறை மாறி ஒர் ஆண்டில் பெய்யும் மழை ஒரே வாரத்தில் பெய்து விட்டு நம்மை வறட்சியில் தள்ளிவிட்டுப் போகிறது.

பயன்படாத இடத்திலும், பயன்படாத நேரத்திலும் பெய்யும் மழை நமக்கும் பயன்படாமலேயே போய்விடுகிறது.

 மண் உயிர் வாழும் பிராணிகள், நுண்ணுயிர்கள் மற்றும் தாவர வகைகளை அழித்து பல்லின பெருக்கத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டன, 

ரசாயன உரங்கள்

ரசாயன உரங்கள், இயற்கை வனங்களை சீர்கேடு அடையச் செய்வதாலும் பல்லினப் பெருக்கத்தை, குறைப்பதாலும், பருவக்கால மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.

மண்புழ உரம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது.

இது இயற்கை வளங்ளைப் பாதுகாக்க உதவுவதால், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை குறைக்க உதவுகிறது.

கையைக் கடிக்காத சாகுபடி செலவு

மண்புழு உரம் இடுவதால் களைகளும் பூச்சி நோய் தாக்குதலும் குறைகிறது.

இது மண்ணின் நீர் பிடிப்புத் தன்மையை அதிகரிப்பதால் நீர்ப்பாசனத்திற்கு ஆகும் செலவு குறைகிறது.

ரசாயன உரத்தை ஓப்பிடும்போது மண் புழு உரம் மிகவும் சிக்கனமானது.

மண்புழு உரம் தயாரிப்பது மிகவும் சுலபம்.

கடினமான தொழில் நுட்பங்கள் எதுவும் இல்லை.

யார் வேண்டுமானாலும் இதனைத் தயாரிக்க முடியும்.

மண்ணின் அங்ககச் சத்தினை, தன் கழிவின் மூலம் அதிகரிக்கிறது.

நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் மண்புழு உரத்தை தொடர்ந்து இடுவதன்மூலம் மண்ணை பொன்னாக  மாற்றிவிட முடியும்.

லட்சக்ணக்கான மண்புழுக்கள் துளையிட்டுச்சென்று மண்ணில் காற்றோட்டத்தை அதிகப்படுத்துகிறது.

இவை மண்ணை உணவாக உட்கொண்டு அவற்றை உரமாக மாற்றி வெளியேற்றுக்கின்றன.

மண்புழு உரத்தை தொடர்ந்து இடும் நிலங்களில் மண்புழு உர உற்பத்தி என்பது தொடர்ந்து நடைபெறுகிறது.

மண்புழு உரம் இடும் வயல்களில் மண்ணின் தன்மை ஆண்டுதோறும் மேம்பாடு அடைகிறது.

மண்புழு உரம் இடும் மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கம், உயர்ந்து கொண்டே போகிறது.

 மண்ணில் லகுவாகப் பெருகும் நுண்ணுயிர்கள் பயிர் ஊட்டச்சத்துக்களை மண்ணில் இருந்து எடுத்து பயிர்களின் வேர்களுக்கு அளிக்கின்றன.

மண்புழு உரம், சாகுபடி செலவுக் குறைத்து பயிர் மகசூலை அதிகரித்து, வருமானத்தையும், லாபத்தையும் அதிகரிக்கிறது.

Image Courtesy: Thanks Google


உங்கள் மண்ணுக்கு உயிர் இருக்கிறதா ? - 2


உங்க நிலத்து மண்ணுக்கு உயிர் இருக்கா ? இல்லையா ?
இதை எப்படி கண்டுபிடிக்கறது ? அதுக்கு வழி இருக்கு.
உங்கள் நிலத்து மண்ணைத் தோண்டிப் பாருங்கள். அதில் மண் புழு இருக்கிறதா?
இருந்தால் உங்கள் மண்ணில் உயிர் இருக்கிறது.


ரசாயன உரங்களைப் போட்டு, மண்ணில் இருந்த  நுண்ணுயிர்களை எல்லாம் அழித்து விட்டோம்.

நுண்ணுயிர்கள் இல்லாத மணணும்  உயிர் இல்லாத மண்ணும் ஒன்றுதான்.

மண்ணின் ; உற்பத்தி திறன் குறைந்து விட்டது. மகசூல் குறைந்து விட்டது. வருமானம் குறைந்து விட்டது. லாபமும் குறைந்து விட்டது. 

ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் கைகோர்த்தபடி, விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்ற கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்து விட்டன.

நாம் உற்பத்தி செய்யும் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை எல்லாம்  உரங்களும் பூச்சி மருந்துகளும் ஆட்சி செய்கின்றன. 

ஒரு காலத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யும் விவசாய விளை பொருட்களை மகிழ்ச்சியாக இறக்குமதி செய்தனர், வெளிநாட்டினர்.

ஆனால் இன்று, நம் பயன்படுத்தும் மிகையான ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பார்த்து பயப்படுகிறார்கள்.

அடுத்த மாநிலத்தவர் கூட அஞ்சுகிறார்கள். நம் உற்பத்தி செய்யும் பசும்பாலில் கூட பூச்சி மருந்துகளின் தாக்கம் இருப்பதால் உங்கள் பால் வேண்டாம் என்கிறார்கள். 

இன்றைய விவசாய பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு, மண்புழு உரம் மட்டும் தான்.
Image Courtesy: Thanks Google


Sunday, June 12, 2016

மண்ணைப் பொன்னாக்கும் மந்திரம் மண்புழுக்கள் - 1

Image Courtesy: Thanks Google
வேளாண்மை அறிவியலின் முரட்டு முள் தோல் நோக்கி, சிக்கலான பழப் பிரதேசத்தின் குடல் நீக்கி,  முட்டி நிற்கும் கொட்டை நீக்கி சுளைகளை மட்டும் சுவைக்கத் தரும் சுலபமான கட்டுரை தொகுப்பு இது. 

மண்புழு உரம்  ஏன் ? எங்கே ? எப்படி ? யார் ? எப்பொழுது ? அதன் சிறப்புக்கள், அதை தயாரிக்கும் முறைகள், அதனால் விளையும் பயன்கள் அத்தனையும் இதில் அடக்கம்.

1. மண் புழு உரம் - ஏன் வேண்டும்?

நேற்று சிக்கன்குனியா, இன்று டெங்கு, பன்றிக்காய்ச்சல் நாளை ?
நாம் சாப்பிடும் சாப்பாட்டில் பாதிதான்  சாப்பாடு மிகுதி ?
தாய்ப்பாலில் கூட டீடீடீ பிஎச்சி விஷம் இருப்பது பழைய செய்தி ஆகிவிட்டது.
ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் நம் நிலத்து மண்ணை மலடாக்கிவிட்டன.
விவசாயத்தை லாபம் இல்லாத தொழிலாக மாற்றிவிட்டது ரசாயன விவசாயம்.
இந்தியாவில் உற்பத்தி ஆகும் காய்கறி பழங்கள் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள் அயல் நாட்டினர் 
உலகம் முழுவதும் இன்று இயற்கை விவசாயம் முழு வீச்சில் தொடங்கிவிட்டது.
ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் ஓரங்கட்டிவிட்டால் விவசாயம் லாபகரமாகிவிடும் என்ற சூட்சுமம் அவர்களுக்கு புரிந்துவிட்டது.
இயற்கை உரங்கள்தான் நம் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பானது என்பதை தெரிந்து கொண்டார்கள்.
அதனால்தான் அவர்கள் " இது ஆர்கானிக் காய்கறியா ? இது ஆர்கானிக் பழமா ? " என்று மார்கெட்டில் கேட்டு வாங்குகிறார்கள். 
நம் நாட்டிலும்; விவசாயிகள் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பத்; தொடங்கி இருக்கிறார்கள்.
ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களைப் போடுங்கள், என்று தமிழ்நாடு அரசின் விவசாயத்துறை சிபாரிசு செய்கிறது.
கூடுமானவரை ரசாயன உரங்கள் போடுவதை நாம் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய பல்கழைக்கழகமும் சொல்லுகிறது.
விவசாய விஞ்ஞானிகளும், வேளாண்துறை வல்லுநர்களும் இதையே சொல்லுகிறார்கள்.
விவசாயத்தில் தேர்ச்சி பெற்ற விவசாயிகளும் இதனை ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.
தொழுஉரம், மக்குஉரம், பசுந்தழை உரம், பசுந்தாள் உரம், கோழி எரு, மீன் எரு, எலும்புத்தூள், உயிரியல் உரங்கள் மண்புழு உரம் இப்படி பலவகையான இயற்கை உரங்கள் நமக்கு பரிச்சயமாகிவிட்டன.
இயற்கை உரங்களில் மண்புழு உரம் இடும் பழக்கம் விவசாயிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
ரசாயன உரங்களுக்கு ஒரே மாற்று மண்புழு உரம்தான்.
Image Courtesy: Thanks Google

HARVEST WATER WHEN IT RAINS AND USE - 4

Image Courtesy: Thanks Google

(This is actually the content of my speech what I spoke in the 6 different schools of  Vaniambadi on WORLD  ENVIRONMENT  DAY (05.06.2016)

Dear  Children

I wish you all a very Happy  World  Environment  Day.   We all  assembled  here to celebrate  the  World  Environment Day. 

First of all  I  would like to thank the  School  authorities  to the confidence they have shown me.  They have entrusted  the  responsibility of addressing  you.

On June  5 th  of  Every Year  we are celebrating  as  World Environment Day since  1972.  The whole  world is  celebrating this day. 

On  behalf of all  the countries  in the world  the United  Nations Organization proposed this day  as  World  Environment Day  since 1972.  We too invite World   in  celebrating this day.

Bon  Hi  Moon, the Secretary of the United Nations Organization has  sent a Message  to  all.

The  People of the World  should  forget all their  differences and should work for the protection of the National  Resourses  and made  it  available  to the Next Generation.

The United Nations Organization will fix the Theme for the World Environment Day every year.

We are supposed to discourage by ILLEGAL Hunting  and Trade  of  Wild Lives.

People think Wild life means only animals. But it’s a common name for both. Animals  as well as  Plants.
                      
The United  Nations  Organization has  also developed a slogan for this World Environment Day 2016.   ‘Go  Wild  To  Life’   This is actually  the slogan  for this  World  Environment  Day.  In Tamil  Slogan  means  “kosham”  alias  Punch  Dialogue.  So that you can  Understand  easily.

நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” It’s a very popular punch dialogue of Rajini.

Like this    “Go  Wild  To   Life”  is  the  Kosham  for World  Environment Day 2016.

I have Translated   this Slogan in Tamil also.  So that You  can  understand  easily. 

 “கொல்லாதே கொல்லாதே 
 வனஉயிரைக் கொல்லாதே  !

செய்யாதே செய்யாதே 
வன உயிர் வியாபாரம் 
செய்யாதே !"

Laws to prevent Hunting and trading of Wild Lives all over the World.  Legal restrictions are there all over the World. Legal  prohibitions are there all over the World. There is control for  Killing  and  Trading  of  Wild  Lives all over the World. Even  then Wild life   things are transported   all over the World..

In India as well as Tamil Nadu similar illegal activities are going on     like 

Smuggling of Sea Turtles
Illegal cutting Sandal Wood
Illegal selling of sandal wood
Illegal Hunting of Sand in Snakes 
and trading of Sand in Snakes (Mannulli Pambu)
Illegal Killing of Elephants 
Illegal trading of  Ivories.
Illegal Cutting of Semmaram
Illegal selling of Semmaram

With this continuous hunting and trading, certain wild species are becoming extinct. Such wild lives are announced as endangered wild lives.

Two  species  of Rinoceros.  
Javan Rhinoceros  and  Western   Black  Rhinoceros.  
Also  Great apes and  Helmetted  Hornbills, a bird.   
Penguin and   certain Orchid  Flowers  
All are announced as Endangered  species  of  the  World.

One of the African country Angola  is  announced as the    host  country     by  United   Nations  Organization for this World Enviroment day of 2016.   In African countries,  particularly  Elephants  are  killed  in  thousands for their Ivories. And Rhinoceros are  being  killed for their  Horns.

Let  us  see,  How  things  are  going on  in  India to protect the wildlives?   We  have  400  Numbers  of  Wild  life  Sanctuaries  and  80  Numbers of  National Parks. 
 
Wild Life  Sanctuary  means  a  protected  place.  No one can enter into that area without the permission of the Forest officials.  No one can harm the Animals  and Plants inside the sanctuary.

We have six Prominent   Wild  Life  Sanctuaries  in Tamil Nadu .     Guindy  and  Vedanthangal are situated  near  Chennai .     Mudumalai  and  Anaimalai  are  located in  the  Western parts of  Tamil Nadu .    Kalakkadu Mundanthurai  and  Kodiyakkarai  are in the  southern  parts of  Tamil Nadu.

Tigers, Elephants,  Leopards,  Bison,  Deer,  Bears,  Wild  Pigs,   Snakes,  Monkeys,   Squirrel,   are the major wild lives of  Tamil Nadu.

Snow  Leopards,  Bengal Tiger,  Asian lion,  Pink  Frogs,  Giant  Squirrels,  Giant  Fruit  Bats,  Great  Apes,  King  cobra,  Asian Leopards, Pink  Headed  Ducks  are   the major endangered  wild lives of  India.

I can say  majority of tree  species might be  brought  under endangered  wild lives of India.

Why these animals are  Hunted  and  Traded ? For money.  For personal benefits. For profit making. For time pass too.

Rats  and  Water  Dogs  are killed for the soft Fur skins.    Snakes,  Tigers,  and Deers  for skins.  Black  Monkeys  and  crocodiles for medicines.   Elephants for   Ivory. Rhinoceros for horns.  Several  animals are Hunted and killed for  various other  purposes also.

I am proud to say this information, India is the First  country in the World, which enacted  a law  to protect  the Wild Lives legally, in the Year  1887.

Dear children, I want to ask you, what is Environment  ?

In brief,  we can say,  the  living and  non-living things   around us  are  Environment”

Now I  wish to tell  you,  that  water is  one of the very scarce commodity, not only in India, but all over the World. The problem is local  as well as Universal. 

With reference to this day,  My message  to you is  “HARVEST WATER  WHEN IT RAINS AND  USE”.  That  will  solve  all the  water problems.    I can say that alone can solve all our Water  Problems.

Water is the most scarce  commodity  in the world . At the same time,  water is  the only resource available in abundant.  But the availability of water  for our use  is  very  limited.

Out of the  total available water in the  World ,   97 %   is  Sea  water.  Rest  of  2 %  is , water  in the form  of  Ice .  Only one persent  is  available  for  our use. For  Agriculture.   For Industrial  use.  For House hold   purposes.  For  drinking etc.

In India  our  annual  average rainfall  is 1250  mm.  Out of this 85 -  90  %  of the water  goes into the sea   without  any  use. 

In Tamil Nadu  the average  Rainfall is  970 mm.   In  Vellore the average Rainfall is around  948.7 mm. 

Whereas  the annual average  Rainfall  of the World countries  is  only 840 mm.  The world’s most wettest  place  is  Sirapunji.  The  first plasc    of  sirapunji  is recently taken by  Mansiram.    The annual averge  rain fall of  Mansiram is  11,782  mm.  Both the Places are located in India only. 

Hence  I   can say  India is the  one of the rich rainfall country in the World Whatever the water problems exist is manmade.
 
I remember the poem  in Tamil.  I do not know, Who is the author?   This  is one of the excellent Poem.  It depicts the density  and intensity  of the  problem.
  
என் தாத்தா ஆற்றில் நீரை பார்த்தார்

என் தந்தை கிணற்றில் நீரை பார்த்தார்

நான் குழாயில் நீரை பார்த்தேன் 

என் மகன் பாக்கட்டில் பாட்டிலில் நீரை பார்த்தான்

என் பேரக்குழந்தைகள் எப்படி நீரை பார்ப்பார்கள் ?"

 “My grandpa seen water in river

 My Father saw water in wells

I have seen water coming in pipes

My kids have seen water

Selling in Pockets and bottles

My grand children

Could they see water what it is ?”

Roof Water Harvesting

Images Courtesy:Thanks Google